தில்லா எழுதறேன் – குருப்ரம்மா

6
361

சூப்பர்டா!! நீ நல்லா வருவ!!

ஒரு மிகப்பெரிய மனிதரோட பேசற வாய்ப்பு கிடைச்சது. பேசிட்டுருக்கறப்போ, பொட்டுல அடிச்சாப்ல ஒரு செம்ம பாயிண்ட்ட சர்வ சாதாரணமா சொல்லிட்டு போனாரு.. அது என்னான்னு சொல்றேன். வெயிட்.

பயாஸ்டு அப்பா!!
இன்னைக்கு காலைல என் பொண்ணு ஸ்போர்ட்ஸ் டேக்கு போயிருந்தப்போ, அவ குழுவோட ட்ரில் விளையாட்டு செய்தா. குழந்தைக செய்யற அழக கேக்கனுமா. ரசிச்சுப்பாத்து, அது முடிஞ்சதும் ஓடிப்போயி கை கொடுத்து சூப்பர்டான்னு சொல்லிட்டு நகரந்தப்போ சட்டுன்னு கேட்டா “அப்பா, எல்லாருந்தானே கலந்துக்கிட்டாங்க!! என்னை மட்டும் ஏன் பாராட்டற, என் டீமுக்கும் சொல்லு” ன்னு. சரிடா தங்கம்னு எல்லா குட்டீசுக்கும் கையக்கொடுத்துட்டு வீட்டுக்கு வந்தேன். என்னமோ மிஸ் ஆன ஃபீல். யோசிச்சுப்பாத்தா, என் பொண்ணு எவ்ளோ பெரிய ஒரு விஷயத்த சொல்லிக் கொடுத்திருக்கா நான் எவ்ளோ பயாஸ்டா இருந்துருக்கேன்..
ஷேம்!! ஷேம்!!

பாராட்டுங்கறது சாதாரண விசயமில்லைங்க. பிள்ளைகள பாராட்டி வளங்கன்னு அமீரும், சூர்யாவும் அல்ரெடி சொல்லிட்டாங்க. அதைக்கிளர தேவையில்ல. இது வேற ரமணா..

ஏகப்பட்ட சினிமாக்கள்ல அடிச்சு துவைச்சு பிழிஞ்சு காயப்போட்ட ஒரு டயலாக் “எல்லாருக்குள்ளையும் திறமைகள் இருக்கு”. இப்போ யாரு இல்லைன்னாங்கறிங்களா?? ஒத்துக்கறேன் இருக்குதான்.
கிரிக்கெட்டு, தெருவுக்கு ஒரு சச்சின் வராம போகக் காரணமே அரசியல்னு பேசி கைதட்டு வாங்கிட்டுப்போயிடறாங்க. அரசியல் ஒரு தேசிய காரணந்தான் இல்லைங்கல, ஆனா ஐ பட விக்ரம் சொல்றாப்ல ” அதுக்கும் மேல” காரணம் ஒன்னு இருக்குதுன்னு நம்மில் எத்னீ பேர்க்கு தெரியும்?? அதைத்தான் சொல்லப்பாக்கறேன்..

உதாசீனம்!!
ஒரு நல்ல படைப்பாளியோட மிகப்பெரிய வெற்றி என்ன தெரியுமா?? தன்னைப்போல படைப்பாளிகளை மேலும் உருவாக்கறது தான். அதுக்கு இஸ்கூல் வச்சு நடத்தனும்னு இல்ல.. தன்னைப்போல சாதிக்க நினைக்கற தொடக்க நிலை படைப்பாளிகளை பாராட்டறது தான்னு என் கருத்து. அப்படி தட்டிக்கொடுத்து “நல்லாருக்குடா தம்பி, தொடர்ந்து செய்” ங்கற வார்த்தை கிடைக்காததால, எத்தனை பேரு எழுதின பேப்பர கிழிச்சுட்டும், வரைஞ்ச படங்கள அழிச்சுட்டும் போயிருக்காங்களோ..

உருவாகத் துடிக்கிற கரு கவனிப்பில்லாம கருப்பைக்குள்ளையே கரையறாப்ல.. சக மனிதர்களோட, உதாசீனம், வலியில்லாம சில திறமைக்கொலைகள செஞ்சுட்டுப் போகுது!!

நம்ம உருவாக்காத காலி ப்ளாட்டுக்கே (லேண்டுக்கே) அப்ரிசியேசன் எதிர்பாக்கறப்போ, நம்ம படைப்புகளக்கு எதிர்பாக்கறதுல என்னா தப்புன்னேன்!!

விதை!!
அதுக்குன்னு மேல விழுந்து கொஞ்சச்சொல்லலை. முடிஞ்சப்போ ரெண்டு வார்த்தை கூப்பிட்டு பாராட்டினாலே போதுமானது.!! நான் உன்ன தனியா பாராட்டனுமா!! நான் சொல்லாட்டியும் எப்போவுமே என் ஆசிகள் உனக்கு உண்டுடா!!ன்னு மொக்கை வார்த்தையெல்லாம் பேசி டகால்ட்டி உடாம.. உங்களைச் சேந்தவங்க லட்சியப்போக்கா எடுத்துக்கற ஒவ்வொரு முயற்சிக்கும் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லலாமே!! உங்களுக்கே தெரியாம நீங்க உலகத்துக்கு விட்டுட்டுப்போற மிகப்பெரிய படைப்போட தொடக்கம் அதுவாக்கூட இருக்கலாம்ல!!

(குறிப்பு: பாராட்டும்போதும் என்னையப்போல செல்ஃபிஷ்ஷா, பயாஸ்டா இருந்து தனிமரத்தையே சுத்திவராம, சைடுல உள்ள செடிகளுக்கும் தெளிச்சு உட்டுட்டுப்போங்க!!)

யார் கண்டா!! உங்களோட இன்னையத்த பாராட்டு, நாளை பாரையே ஒரு ஆட்டு ஆட்டலாம்!! இனி நான் மத்தவங்க முயற்சிகளுக்கும் கைதட்டப்போறேன், வலிக்கும் வரை. வலிச்சா ரெஸ்ட்டெடுத்துட்டு தட்டுவேன் என்னா இப்போ.?

நான் முதல்ல சொன்ன அந்தப்பெரிய மனிதர் எங்கிட்ட சொன்னது, “இன்னொருத்தரோட டேலண்ட்ட கண்டுபிடிச்சு, அவனப் பாராட்டி, தட்டிக்கொடுத்து, முன்னுக்குக் கொண்டு வந்தா தான் திறமைகள் வெளிய வரும். இன்னொரு ரைட்டர் வரணும். உங்கிட்ட அந்த ஸ்ட்ரெங்த் இருக்கு, ஆரம்பி”……..

அவர் எக்ஸ்பீரியன்சுக்கு முன்ன நான் குழந்தை. ஆனாலும் மதிச்சு வந்து என்னைக் கூப்பிட்டு அவர் சொன்ன அந்த நேரம் எனக்குள்ள தோணிச்சு “இனி தில்லா எழுத ஆரம்பி” எழுதிட்டுருக்கேன்..

என்னிடம் இதைச் சொன்னவர் , திரைத்துறையச் சேர்ந்த பிரபல இயக்குனர், எழுத்தாளர், நடிகர் அதுக்கும் மேல ஒரு மிகப்பெரிய ரசிகர் திரு GM.குமார் அவர்கள். ஊக்கத்திற்கு நன்றி கூறி, இந்தக்கட்டுரையை அவருக்குச் சமர்ப்பித்து….. எழுதிட்டு இருக்கேன்.

குருப்ரம்மா!!

719total visits,4visits today

6 COMMENTS

  1. நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் ராஜி!

    பரவை சே குமார் தம்பி கூட இதை எங்கள் ப்ளாக் தளத்தில் குறிப்பிட்டிருந்தார் எதிர்கால விருப்பங்கள் கனவுகள் எல்லா துறைகளிலும்…என்ற தலைப்பில் வலைப்பதிவர்களின் எண்ணங்களை வழங்கும் அந்தப் பதிவில் இளையவர்கள் பலர் வெளியே வருவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்று…

    மிக்க நன்றி தங்களின் புதிய தளம் அறிந்தமைக்கு. தொடர்கின்றோம்..

  2. நல்லா எழுத வரப்ப இந்த தில்லு தன்னால வந்து முன்னால நிக்கும், இதே மாதிரி சுவாரஸ்யமா எழுதி தள்ளுங்க, வாசிக்க நாங்க இருக்கும்.. அல்லோ கலக்கல்ஸ் டீம், செம கலக்கலா தீம் புடிச்சு இருக்கீங்கப்பா, வெரி குட் வாழ்த்துக்கள் <3

  3. நல்ல கருத்து ராஜி! மனசுல தோன்ற விஷயங்களை சுவாரஸ்யமா எழுத ஓர் திறமை வேணும்!! உங்க கிட்ட நல்ல திறமை இருக்கு கலக்குங்க.! நல்வாழ்த்துக்கள்!