ஆடி மாத ராசிபலன்கள்

0
489
    சுக்கிரன்

 

 
கேது 22.07.17 (ஆடி6)

புதன் (க-சி)

26.07.17 (ஆடி10)

சுக் (ரி-மி)

27.07.17 (ஆடி11)

ராகு(சி-க)கேது (கு-ம)

06.08.17 (ஆடி21)

புதன் (சி-க)

 

 

சூரியன்

செவ்வாய்

புதன்

 

  ராகு
  சனி(வ)   குரு

ஹேவிளம்பி ஆண்டு ஆடிமாத இராசி பலன் (2017)

17.07.2017முதல் 16.08.2017வரை (ஆடி 1 -31.)

 

 

ஆடி மாத கிரகநிலை…

 

 

மேஷம் :அன்பிற்கு மட்டுமே கட்டுபடுவோம் அதிகாரதிற்கு அல்ல என்று வாழும் மேஷ இராசியினருக்கு இந்த மாதம், சுக்கிரனும் புதனும் சாதகமாகவே இருப்பதால் கடினமான காரியங்களிலும் வெற்றிக்காண்பீர்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு தடைப்பெற்று வந்த திருமண யோகம் கூடி வரும், சிலருக்கு சகோதரதிற்கும் திருமண நிச்சயமாக கூடும். சூரியனும் செவ்வாயும் நான்கமிடத்தில் இருப்பதால் தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை, பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சி போன்றவற்றில் அலைச்சல் அதிகரிக்கும், வாகனவகையில் செலவினங்கள் கூடும், சகோதர வகையில் செலவுகள் உருவாகும், உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு மனை போன்ற சொத்துகள் வாங்கும் பொழுது பத்திரத்தை நன்றாக ஆராய்ந்து வில்லங்கங்கள் சரிபார்த்து வாங்கவும், நீண்ட நாட்கள் விற்காமல் இருந்த பூர்வீக சொத்துகள் விற்பனையாகும் அதனால் கடன் பிரச்சனை தீரும். ஆறாமிடத்து குருவும், அஷ்டமத்து சனியும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரும், யாரிடமும் சொந்த விசயங்களை பரிமாற வேண்டாம், யாரிடமும் குடும்ப அந்தரங்கங்களை பரிமாற வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வகையில் மனமகிழ்ச்சி உண்டு, சுற்றுலா புண்ணிய யாத்திரை போன்றவற்றிற்கு சென்று வருவீர்கள், வீடுகளுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் வாங்குவீர்கள், இந்த மாதம் ராகு பெயர்ச்சியாகி நான்கமிடதிற்கு வருவதால் பூர்விக சொத்து சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீவுக்கு வரும். சகோதர வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலர் வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அதிகமுண்டு. பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கும் எண்ணம் ஏற்படும்.

 

வியாபாரிகளுக்கு முன்னேற்றமான மாதம்தான், புதிய முதலீடுகள் செய்யும் அமைப்பு உள்ளது, வேலையாட்களிடம் கவனம் தேவை. பங்கு தாரர்களிடம் மோதல் போக்கை கைவிடுங்கள். உத்தியோகத்தில் வேலை சுமை அதிகரிக்கும், கடினமாக உழைத்தும் பலனில்லை என்ற எண்ணம் மேலோங்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை, ஞாபக மறதியில் இருந்து தப்பிக்க ஒருமுறைக்கு பல முறை எழுதிப்பார்க்கவும், பெண்களுக்கு போட்டித்தேர்வு வெற்றி கிட்டும், சிலருக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையில் நல்ல வாய்ப்புகள் வாயிற்படியில் வந்து நிற்கும். அரசியலில் அதிகாரம் கைக்கு வந்து சேரும். எதிலும் திட்டமிட்டு வெற்றிக்காண வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம் :ஆகஸ்ட்1ம் தேதி காலை 9.00மணி முதல் 3ம் தேதி இரவு 8.30 வரை சந்திராஷ்டமம் எதிலும் கவனமுடன் இருக்கவும்.

பரிகாரம் :பெருமாள் தரிசனம் பெரிதாய் உதவும்.

 

ரிஷபம் :யாரையும் பகைத்துக்கொள்ளாமல் வாழும் ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் சூரியன் மூன்றாமிடத்தில் நிற்பதால் தைரியம் அதிகரிக்கும், இரண்டாமிடத்து சுக்கிரனால் தாரளப்பண வரவு ஏற்படும், புதனும் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் நட்பு ரீதியில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள், ஐந்தாமிடத்து குருவால் ஆன்மீகஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள், பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி கிடைக்கும், பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும், சிலருக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. தைரியத்தோடு தன்னிச்சையாக செயல்ப்பட தொடங்குவீர்கள், நண்பர்களின் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள், இதுவரை நான்கமிடத்தில் இருந்து வந்த ராகு மூன்றாமிடத்தில் அமர்வதால் தாயாருக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் தீர்ந்து ஆரோக்கியம் மேம்படும், நீண்ட நாட்களாக வாராக்கடன்கள் வசூலாகும் அரைகுறையாக நின்றுப்போன வேலைகள் முழு மூச்சுடன் நடத்தி காட்டுவீர்கள், ஒன்பதாமிடத்து கேதுவால் வருங்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள். சனி ஏழாமிடத்தில் அமர்வதால் உடல் சோர்வு ஏற்படும். உடலில் சர்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

வியாபாரிகள் புதிய பெரிய முதலீடுகள் வியாபாரத்தில் இடுவீர்கள், சிலர் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவார்கள், சிலர் சொந்த இடத்திற்கு வியாபார நிறுவனத்தை கொண்டு செல்ல வாய்ப்பு உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும், பங்குதாரர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள், அனுபவமிக்க வேலையாட்கள் கிடைக்கப்பெறும், ஷேர் மார்கெட் வர்த்தகம், நன்றாக இருக்கும், உத்தியோகத்தில் இழந்த சலுகைகள் திரும்பக் கிடைக்கும், தொல்லைக்கொடுத்து வந்த உயர்அதிகாரி மாற்றப்படுவார். சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனகசப்பு நீங்கும், உத்தியோகத்தில் செல்வாக்கு மேலோங்கும், மாணவர்கள் நியாபக சக்தி அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டு, கன்னிப்பெண்கள் காதல் கைகூடும், உயர்கல்வி வாய்ப்பு உண்டு. கலைத்துறையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும், அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும், தலைமைக்கு நம்பிக்கை பிறக்கும். வெற்றிக்களிப்பில் திளைக்கும் மாதமிது.

சந்திராஷ்டமம் :ஆகஸ்ட் 3ம் தேதி இரவு 8.30 முதல் 4,5 6ம் தேதி காலை 7.45 வரை சந்திராஷ்டமம்

பரிகாரம் :கந்தன் வழிபாடு கவலை தீர்க்கும், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவதால் நிம்மதி பிறக்கும்.

மிதுனம் : உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசாமல் உள்ளத்தில் உள்ளதை எண்ணத்தில் செய்து காட்டும் மிதுன இராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் தனக்கு சாதகமான வீடுகளில் செல்வதால், பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும், தாராளமான பணவரவு வந்து நிற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசிக்குள் சாஞ்சரம் செய்வதால் உடல்ஆரோக்கியம் மேம்படும், உற்சாகமாக செயல்படுவீர்கள், தேகப்பொலிவு பெரும், புதிய புதிய திட்டங்கள் தீட்டக்கூடும், சூரியன் இரண்டாமிடத்தில் இருப்பதால் கோபம் அதிகரிக்கும், யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், செவ்வாயும் இரண்டாமிடத்தில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும், நான்கமிடத்து குருவால் கடன், வருங்காலம் பற்றிய பயம் கவலைகள் வந்து போகும், சனி ஆறாமிடத்தில் தொடர்வதால் பிரபலங்களின் நட்பு உண்டு, நண்பர்கள் உதவுவார்கள், வழக்குகளில் வெற்றி உண்டு, சொத்து சம்பந்தமான பிரச்சனை சுமுகமாக முடியும், உடன் பிறப்புகள் சுமுகமாக பழகுவார்கள், 27ம் தேதி ராகுவும் கேதுவும் பெயர்ச்சியாகி இரண்டு எட்டில் அமர்வதால் பேச்சில் கவனம் தேவை, எதையும் யோசித்து பேசி சிக்கலில் இருந்து விடுபட பாருங்கள்,

வியாபாரம் லாபகரமாகவே ஓடிக்கொண்டிருக்கும், வாடிக்கையாளர்கள் விருப்பமறிந்து செயல்படுவது நன்மை பயக்கும், பணபுழக்கம் உண்டு, உத்தியோகத்தில் உங்கள் வேலையை சரியாக செய்வது நல்லது, பிறர் விசயத்தில் தலையிட வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிவரும், மேலதிகாரிகளிடம் பகைத்துக்கொள்ள வேண்டாம்.மாணவர்கள் சுறுசுறுப்பாக படிப்பார்கள், விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும், பெண்களுக்கு பெற்றோருடன் இறந்து வந்த மனகசப்பு தீரும், கலைஞர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க சின்ன சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவும், தேங்கிய சம்பள பாக்கிகள் வசூலாகும், அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், கோஷ்டிபூசலில் சிக்கிவிடாமல் இருக்கவும், வளைந்துக்கொடுத்து செல்வதால் வளம் காண வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 6ம் தேதி காலை 7.45 முதல் 7, 8ம் தேதி மாலை 5.30 வரை சந்திராஷ்டமம் மௌனமாய் இருத்தல் நலம்.

பரிகாரம் :சித்தர் வழிபாடு சிறப்பை கொடுக்கும்.

கடகம் : மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் கடக இராசியினருக்கு இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு, சூரியன், செவ்வாய் இராசியிலேயே சஞ்சரம் செய்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும், புதன் சாதகமாக இருப்பதால் சூழ்நிலையை அனுசரித்து வெற்றிகான்பீர்கள், உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள், எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும், குரு தொடர்ந்து மூன்றாமிடத்தில் அமர்ந்திருப்பதால் எளிய காரியங்களையும் கடினமாக முயன்று முடிக்க வேண்டி வரும், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம், சனி ஐந்தாம் இடத்தில் நிற்பதால் நெருங்கிய உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நிதானம் தேவை, பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதப்போக்கு சற்று மாறக்கூடும், அவர்களின் உயர்கல்விக்கு செலவிடுவீர்கள், தாராள பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், 27ம் தேதி முதல் ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் அமர்வதால் பணவரவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும், கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது, தேவையில்லாத வாக்குவாதங்களையும், சந்தேகங்களையும் தவிர்க்கவும், குடும்ப அந்தரங்கங்களை அடுத்தவரிடம் பகிர்வதை தவிர்க்கவும், உடல் நலனில் அக்கரை தேவை, கோபத்தை குறைக்கவும், உணர்ச்சிக்கு அடிமையாக வேண்டாம்,

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும், புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க திட்டமிடுவீர்கள், சிலர் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடும். வாடிக்கையளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலை செய்வீர்கள், கடன் வாங்கி பெரிய முதலீடு செய்ய வேண்டாம், உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும், இடமாற்றம் ஏற்படும், சம்பளம் போராடி பெறவேண்டிவரும், மூத்த அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், சிலருக்கு வேலை போகும் அபாயம் உண்டு.வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்ககூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது, கன்னிப்பெண்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்துக்கொள்வது நல்லது, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலைஞர்கள் எதார்த்த படைப்புகளால் முன்னேற்றம் காண்பீர்கள் அரசியலில் கடின உழைப்பு முக்கியம். பொறுமையும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

சந்திராஷ்டமம்:ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.30மணி முதல் 9,10ம் தேதி வரைஎச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்:நரசிம்ம தரிசனம் நன்மை பயக்கும்

சிம்மம் : சாதிக்கும் எண்ணத்தை எப்பொழுதும் நெஞ்சில்வைத்துஉழைக்கும் சிம்ம இராசியினருக்கு இந்த மாதம் சுக்கிரன் லாப வீட்டுக்கு வருவதால் பங்கு வர்த்தகம் மூலம் லாபம் இருக்கும், வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குரு வலுவாக இருப்பதால் சமொயோஜிதமாக பேசி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள், தாராள பணவரவு இருக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சி பொங்கும். மகளுக்கு திருமணம் நிச்சயமாக கூடும், பொதுக்காரியங்களில் ஈடுபட்டு மரியாதை கூடும்.புதன் சாதகமாக இருப்பதால் மன இறுக்கும் தீரும், சிலர் அடகில் இருக்கும் நகையை திருப்பக்கூடும். ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு புது தெம்பு பிறக்கும், நீண்டநாள் நின்று போன பணம் வந்து சேரும், வீட்டில் விசேஷங்கள் நடைபெறும், உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றிக்கிடைக்கும். ராசிநாதன் சூரியனும், சுகஸ்தானதிபதி செவ்வாயும் பன்னிரெண்டில் நிற்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். வேலைச்சுமை அதிகரிக்கும், பயணங்கள் அலைச்சல் தரும்.சனியும் நான்கில் இருப்பதால் சளி, மூச்சு பிடிப்பு போன்ற உடல் உபாதைகள் வந்து செல்லும். தாயாருடன் மோதல் போக்கை கைவிடுங்கள். வீயாபரத்தில் லாபம் அதிகரிக்கும், பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள், வேலையாட்களும் ஒத்தாசையாக இருப்பார்கள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஏற்றம் தரும், சிலர் சொந்த இடத்திற்கு இடம் மாறக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்ககூடும், வேலை தேடுபவருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலையும்  கிடைக்கும். மாணவர்கள் படிப்போடு, கலை, விளையாட்டுத்துறைகளிலும் வெற்றிவாகை சூடுவார்கள், பெண்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும். கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்கள் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். அரசியலில் கட்சியின் மேலிடத்தின் நப்ம்பிக்கையை பெறுவீர்கள். கௌரவம் உயரும் மாதமிது.

சந்திராஷ்டமம்:ஆகஸ்ட்11, 12ம் தேதி சந்திராஷ்டமம் கவனம் தேவை.

பரிகாரம்:சமயபுரத்தாளை வணங்கி சங்கடங்களில் இருந்து விடுபட கூடிய மாதமிது.

கன்னி :கடந்த கால கவலைகளை மறந்து எதிர்காலத்தை யோசிப்பதுதான் வாழ்க்கைக்கு உதவும் என்பதை அறிந்த கன்னி ராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் சூரியன் லாபஸ்தானத்தில் நிற்பதால் அரசு சார்ந்த வேலைகள் சுலபமாக முடிவடையும், ராசிநாதன் புதனும் நல்லஸ்தானங்களில் நடைபோடுவதாலும், செவ்வாய் லாபாஸ்தனத்தில் நிற்பதாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும், பெரியவர்களின், அறிஞர்களின் அரவணைப்பு கிடைக்கும், பணபுழக்கம் அதிகரிக்கும், சுக்கிரன் பலமாக இருப்பதால் பிரபலங்களின் விசேசங்களுக்கு சென்று வருவீர்கள், மூன்றாமிடத்து சனியால் வெளிவட்டங்களில் பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும், பேச்சில் நிதானமும் அறிவும் மேம்படும், ராகுவும் கேதுவும் பெயர்ச்சியாகி ராகு பதினொன்றில் அமர்வதால், பிள்ளைகள் நல்ல வழியில் சென்று உயர்கல்வி பயின்று மதிப்பும் மரியாதையும் கூடும், மிகவும் கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள், கேதுவும் ஐந்தாமிடத்தில் நிற்பதால் உறவுகள் மத்தியில் செல்வாக்கு கூடும், மகளுக்கு நல்ல வரன் அமையபெறலாம், ஆன்மீகப்பயணங்கள் அதிகரிக்கும், குரு ராசியில் நிற்பதால் மன இறுக்கமும் குழப்பமும் கூடும், எதிர்காலம் பற்றிய பயம் வந்து சேரும்.

வியாபாரம் லாபகரமாகவே செல்லும், புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள், வேலையாட்கள் அனுசரணையாக இருப்பார்கள், பிரச்சனைக்குரிய பங்குதாரர்கள் விலகுவார்கள், உணவுத்தொழில் லாபகரமாக இருக்கும். வேலையில் சகஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும், அதிகாரிகள் பாராட்டுவார்கள், எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப்பெறும், குரு ராசியில் தொடர்வதால் உத்தியோகத்தில் அவப்பெயர் வரக்கூடும். மாணவர்கள், ஆசிரியர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள், ஓவியம், எழுத்து போன்ற கலை ஆர்வம் அதிகரிக்கும் பலரது பாராட்டும் பரிசும் பெறக்கூடிய காலமிது. பெண்களுக்கு இது வரை இருந்து வந்த வயிறு சம்பந்தமா பிரச்சனைகளும், மாதவிடாய் கோளாறும் தீரும்.கலைத்துறையில் மொழிகடந்து பிரபலமடையும் வாய்ப்பு உண்டு. அரசியலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும், பதவியை தக்கவைத்துக்கொள்ள படதா பாடு பட வேண்டி இருக்கும். மொத்தத்தில் பிரபலங்கள் உதவியால் வெற்றி பெற வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்:ஜூலை 17,18ம் தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 13, 14, 15ம் தேதி காலை 8.46 மணி வரை.

பரிகாரம்:கற்பக விநாயகரை வழிபடுங்கள் கவலைகள் தீரும்.

துலாம் :தான்மட்டுமின்றி தன்னை சேர்ந்தோரும் முன்னேற வேண்டுமென்ற எண்ணம் கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் சூரியனும் செவ்வாயும் பத்தாமிடத்தில் நிற்பதால் பிரபலங்கள் உதவுவார்கள், கௌரவ பதவிகள் தேடிவரும், உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள், பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும், யோகதிபதி புதனும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும், ராசி அதிபதி சுக்கிரனும் சாதகமாக செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பெயர்ச்சிக்கு பிறகு ராகு பத்திலும், கேது நான்கிலும் நிற்பதால் பழையக்கடனில் ஒரு பகுதியை தீர்க்க கூடும். குடும்ப வருமானம் உயரும், ஆபரண சேர்க்கை உண்டு, அரசு காரியங்கள் சிறப்பாய் நடக்கும். சகோதரத்துடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குரு பன்னிரெண்டில் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும், சனியும் ஏழரைசனியாகி பாதச்சனியாக நீடிப்பதால்  அனைத்து வேலைகளிலும் தடை தாமதம் அதிகரிக்கும், ஞாபகமறதி அதிகரிக்கும், வெளியூர் பயணங்களில் கவனம் தேவை, பொருட்கள் களவு செல்லவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உண்டு அதை பற்றி கவலைபடாமல் கடந்து செல்லவும்.

வியாபாரம் இதுவரை இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். தொல்லைக்கொடுத்து வந்த பங்குதாரர்கள் கூட உங்கள் பேச்சை கேட்டு நடந்துக்கொள்வார்கள். தொழில் ரகசியம் கசியாமல் காக்கப்பட வேண்டும். வெளிமாநில வேலையாட்கள் உதவியாக இருப்பர்கள், அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேர்வார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு, உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள், இருந்தும் பத்தாமிடத்து சூரியனால் வேலைச்சுமை அதிகரிக்கும், மாணவர்கள் நன்றாக படித்தலும் ஞாபகமறதியால் தொல்லை இருக்கும். பெண்களுக்கு காதல் இனிதாகும், பெற்றோர் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றிகான்பீர்கள். கலைத்துறையில் புகழ் அதிகரிக்கும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவும், தலைமை பொறுப்பை ஏற்கவும் பாராட்டுகள் பெறவும் வாய்ப்பு உண்டு. அரசியலில் தலைமை பாராட்டும்படி நடந்துக்கொள்வீர்கள் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதிய புதிய முயற்சிகளால் வெற்றிக்காணும் மாதமிது.

சந்திராஷ்டமம்:ஜூலை 19, 20ம் தேதியும் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 8.45 மணி முதல் 16ம் தேதி வரை.

பரிகாரம்:அனுமன் வழிபாட்டால் அமைதி காணும் மாதமிது.

விருச்சிகம் : வருங்காலத்தை பற்றி யோசித்து வாழ்க்கையை நடத்தும் விருச்சிக ராசியினருக்கு இந்த மாதம் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வகையில் உதவிகள் கிடைக்கும், கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். புதன் வழுவான வீடுகளில் செல்வதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும், தாய்வழி உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள், சிலருக்கு விஐபி அறிமுகமும், வெளிநாடு செல்ல விசாவும் கிடைக்கும். குரு லாப வீட்டில் நீடிப்பதால் பூர்வீக சொத்து பராமரிப்பு செலவுகள் கூடும். மகனுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும், மன நிம்மதி பிறக்கும், ராகு 9 ம் இடத்திற்கு வருவதால் குலதெய்வ வழிபாடு நேர்த்திகடன் நிறைவேறும், கேது 3 ம் இடத்தில் அமர்வதால் சகோதர வகையில் மனகசப்பு வந்து நீங்கும்.மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாயும் சூரியனும் இணைத்து ஒன்பதில் நிற்பதால், தந்தை மற்றும் சகோதர வகையில் மனகசப்புகள் வந்து செல்லும். வீண் செலவுகளும் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்னையை கிளப்பாதீர்கள் வழக்குகள் தாமதமாகலாம், சனி ராசியில் நீடிப்பதால் நோய் பயம் இருக்கும்.

வியாபாரத்தில் விளம்பரம் கைகொடுக்கும், பழைய வாடிக்கையாளர் மூலமாக புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும், பெரிய முதலீடுகள் இந்த மாதம் வேண்டாம், பாக்கிகள் போராடி வசூலாகும், பங்குதாரர்களிடம் பகைத்துக்கொள்ள வேண்டாம், வரவு குறைவாகதான் இருக்கும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள், உத்தியோகத்தில் வேலைச்சுமையும், சிறு சிறு அவமானங்களும் ஏற்படும், சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும், மாணவர்கள் விளையாட்டை மறந்து படிப்பில் கவனம் செலத்தவும், பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், போட்டித்தேர்வுகளில் போராடி வெற்றிப்பெற வேண்டும். கலைத்துறையில் முத்த கலைஞர்கள் அறிமுகம் கிடைக்கும், அரசியலில் கோஷ்டி பூசலில் சிக்க வேண்டாம். மொத்தத்தில் ராஜதந்திரத்தால் முன்னேற வேண்டிய மாதமிது.
சந்திராஷ்டமம்:ஜூலை 21, 22ம் தேதி
பரிகாரம்:வனதேவதையை வழிபடவும்..

தனுசு : அடுத்தவரைப்பற்றி கவலை கொள்ளாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் தனுராசியினருக்கு இந்த மாதம் புதன் மட்டும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி ஏற்படும், மற்றபடி சூரியனும் செவ்வாயும் எட்டில் மறைந்து நிற்பதால் செலவுகள் பன்மடங்காகும், ஏழரை சனியின் தாக்கத்தால் புதிதாய் அறிமுகமானவர்களால் பிரச்சனைகள் ஏற்படும், அவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம், குருவும் பத்தில் இருப்பதால் உங்கள் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உண்டு, அதனால் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், சுக்கிரன் 6ல் மறைவதால் பணபற்றாக்குறை, வீண் அலைச்சல் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு சச்சரவுகள் வந்து செல்லும், 27ம் தேதி ராகுவும் கேதுவும் பெயர்சியாவதால் சிலருக்கு பார்வைக்கோளறு, பல்லில் வலி வேதனை ஏற்படக்கூடும், சேமிப்புகள் திடிரென கரையும், செலவுகள் கூடும், வியாபாரத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள், உங்களின் முயற்சிக்கு பங்குதாரர்கள் ஆதரவாய் இருப்பார்கள், கடையை விரிவுபடுத்துவீர்கள் வேலையாட்களிடம் கறாராக வேலை வாங்கவும், வேலைக்கு செல்பவர்கள் வேலைச்சுமை அதிகமிருந்தாலும் செல்வாக்கு கூடும், சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படக்கூடும். சக ஊழியர்கள் மற்றும் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ஒத்துழைக்க மறுப்பார்கள், அடுத்தவரிடம் மிகவும் கஷ்டப்பட்டு வேலைவாங்க வேண்டி இருக்கும். மாணவர்களின் தேவைகளை பெற்றோர் பூர்த்தி செய்வார்கள், பெண்கள் பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பீர்கள், காதலில் தெளிவான முடிவு பிறக்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் உங்களது தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள், புகழ் கூடும். அரசியலில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். உங்கள் கோரிக்கையை தலைமை ஏற்கும். மொத்தத்தில் சுமாரான மாதமிது.
சந்திராஷ்டமம்:ஜூலை23, 24 மற்றும் 25ம் தேதி காலை9மணி வரை சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்:பைரவர் வழிபாடு நன்மை கொடுக்கும்.

மகரம் : விட்டுக்கொடுப்பதால் கெட்டுவிடப்போவதில்லை என்று தன்னை வருத்தி மற்றவருக்காக வாழும் மகர இராசியினருக்கு இந்த மாதம் ராசிநாதன் சனி லாப விட்டில் நிற்பதால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள்,

புதன் சாதகமாக இருப்பதால் தாய்வழி உறவுகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும், யோகதிபதி சுக்கிரன் ஐந்தில் இருப்பதால் மனைவி வகையில் உதவிகள் உண்டு, மனைவி பக்கப்பலமாக இருப்பார், 26ம் தேதி சுக்கிரன் ஆறாம் வீட்டுக்கு செல்வதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படும், சூரியன் ஏழாம் வீட்டில் நுழைவதால் மனைவி வகையில் மருத்துவ செலவுகள் கூடும். செவ்வாயும் ஏழாம் வீட்டில் சேர்வதால் கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவுகள் வரக்கூடும், 27ம் தேதிமுதல் கேது ராசியிலும் ராகு ஏழாமிடத்திலும் அமர்வதால் குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வெடிக்கும், கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும், கணவன் அல்லது மனைவி உங்களது குறைகளை சுட்டிக்காட்டுவார் அதனால் பிரச்சனை ஏற்படும் அமைதியாக செல்லவும், தூக்கமின்மை, காய்ச்சல் தலைவலி, எதிலும் சலிப்பு முன்கோபம் போன்றவை வந்து நீங்கும், மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள், மின்னணு சாதனங்களால் அடிக்கடி செலவுகள் கூடும்.

வியாபாரம் அதிகரிக்கும், தொல்லைக்கொடுத்து வந்த பங்குதாரர்கள் விலகுவார்கள், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள், புதிய முதலீடுகளை தவிர்க்கவும், கட்டிட உதிரிபாகங்கள், கெமிக்கல் எண்ணெய் வகைகள் லாபம் தரும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் உதவியாக இருப்பார்கள், உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், சக ஊழியர்கள் நெருக்கடி தருவார்கள், உயர் அதிகாரிகள் உதவ மாட்டார்கள், மாணவர்கள் அலட்சியப்போக்கை கைவிட்டு தினசரி பாடங்களை அன்றன்றே படியுங்கள், பொழுது போக்கை ஒதுக்கவும், பெண்கள் அடுத்தவரின் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம், உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் வரும். அரசியலில் பதவியை தக்கவைத்துக்கொள்ள அரும்பாடு பட வேண்டி இருக்கும். மொத்தத்தில் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம்:ஜூலை25ம் தேதி காலை 9மணி முதல் 26, 27ம் தேதி மதியம் 2.45 வரை கவனாமாக இருக்கவும்.

பரிகாரம்:கவலைகள் தீர கருமாரியம்மனை வழிபடுங்கள்

கும்பம் : சொன்னசொல் தவறாமல் நடந்துக்கொள்ளும் கும்ப ராசியினரான உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் சூரியன் 6ல் நிற்பதால் எடுத்தக்காரியங்களில் எல்லாம் வெற்றிக்கிடைக்கும், அரசால் அனுகூலம் கூடும் மாதமிது, வேலை தேடி அலைந்தவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலைக்கிடைக்கும், தாரள பணவரவு உண்டு, செவ்வாயும் 6ம் வீட்டில் அமர்வதால் மனைவி வகையில் செலவுகள் கூடும், சகோதர வகையில் மனகசப்பு வந்து நீங்கும், புதன் ஆறாமிடத்தில் நிற்பதால் சேமிப்பு கரையும், 22ம் தேதிமுதல் புதன் 7ம் இடத்திற்கு செல்வதால் நிம்மதி பிறக்கும், விலகி நின்ற உறவுகள் நெருங்கி வந்து சேருவார்கள். குரு எட்டாமிடத்தில் இருப்பதால் யாரையும் விமர்சிக்க வேண்டாம், சிலருக்கு உயர்கல்வி, உத்தியோகம் என்று பிள்ளைகளை விட்டு விலகி இருக்க வேண்டி இருக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மகனுக்கு வரன் அமையும், பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும், வீடு கட்ட வங்கி கடன் கிடைக்கும், 27ம் தேதி ராகு 6 க்கும், கேது 12க்கும் செல்வதால் கணவன் மனைவியிடையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும், ஒற்றுமை அதிகரிக்கும் அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், உடல் ஆரோக்கியம் மேம்படும், உறக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இடுவீர்கள், பழைய பாக்கிகளும் வசூலாகும், பெரிய நபர்கள் பங்குதாரர்களாக வருவார்கள், சிலர் பிரபலமான வீதிகளில் கடையை மாற்றுவீர்கள், தைரியமாக புதிய முயற்சிகளில் ஈடுப்படலாம் வெற்றியை கொடுக்கும். உணவு, கமிசன், வாகனம் போன்ற தொழில்கள் லாபம் தரும், பங்கு வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும், வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு, மூத்த அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் நன்றாகவே படிப்பார்கள், அறிவாற்றல் சிறந்து விளங்கும், ஆசிரியர்கள் பாராட்டுவார்கள், பெண்களுக்கு உயர்கல்வி சிறந்து விளங்கும், காதல் பிரச்சனையில் இருந்து வெளியே வருவீர்கள். கலைத்துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கூடி வரும். அரசியலில் பெரிய பதவிக்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:ஜூலை27ம் தேதி பிற்பகல் 2.45 மணிமுதல் 28, 29ம் தேதி இரவு 10.45மணி வரை

பரிகாரம்:அம்மன் வழிபாடு ஆனந்தம் அளிக்கும்..

கும்பம் : கற்பனையிலேயே காலத்தை கழிக்கும் மீன இராசியினருக்கு ராசி அதிபதி குரு ஏழில் நின்று உங்களைப்பார்த்துக்கொண்டு இருப்பதால் தைரியமாக முடிவெடுத்தது சவாலான காரியங்களை முடித்து வெற்றிக்காண்பீர்கள், தோற்றத்தில் அழகும் இளமையும் கூடும்.சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும், கைமாத்தாக வாங்கிய பணத்தையும் தந்து முடிப்பீர்கள், புதன் ஆறாமிடத்தில் மறைவதால் படிப்பிற்காக பிள்ளைகள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள், சூரியனும் செவ்வாயும் 5ல் அமர்வதால் உறவுகளால் அலைச்சல்களும், பிரச்சனைகளும், செலவுகளும் ஏற்படும்.சாலைகளை கடக்கும் போது கவனம் தேவை, சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரத்தம் சம்பந்தமான நோய்கள் வந்து சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது, இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ள காய்கனிகளை சேர்த்துக்கொள்ளவும், 27ம் தேதிமுதல் ராகு ஐந்தாம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளிடத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம், கேது லாப வீட்டில் அமர்வதால் பங்கு வர்த்தகம், கமிசன் வகையில் லாபம் அதிகரிக்கும். பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் அடுத்தவர் பேச்சை கேட்டு தெரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம், மார்க்கெட் நிலவரம் தெரிந்து பொருட்களை ஸ்டாக் வைக்கவும், பழைய பாக்கிகள் தாமதமாகவே வசூலாகும், வேலையாட்களிடம் வேலைவாங்குவது கடினம், முன்பணம் வாங்கிய வேலையாட்கள் பணிக்கு வரமால் செல்லலாம், தரகு, கமிசன் தொழில்கள் சற்று லாபம் தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள், சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்சனை ஏற்படும், வேலைச்சுமை அதிகரிக்கும், சிலருக்கு விரும்பதகாத இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் உயர் அதிகாரிகள் பற்றிய குறைகளை கூற வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை குறிப்பாக கணிதப்பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும், விளையாடும்போது கவனம் தேவை, அடிபட்டு படிப்பு தடைபெரும். பெண்கள் காதல் கதைகளை தள்ளிவைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். கலைத்துறையில் போராடி சம்பள பாக்கியை பெற வேண்டி இருக்கும். அரசியல் வாதிகள் ஆதாரமின்றி எதையும் பேசவேண்டாம். தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக கூறி யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டமம்:ஜூலை 29ம் தேதி இரவு 10.45 மணி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 8.50வரை கவனம் தேவை.

பரிகாரம்:சனிச்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்..

 

வாக்கியப்பஞ்சாங்க அடிப்படையில் ஆடி மாத பலனை கணித்தவர்

ஜோதிட அமுதம். ஜோதிமணிகாந்தி. D.Astro.,

ஓம் ஜோதிடம், கரூர்.

 

1048total visits.