மீனா என்றொரு தேவதை-பாகம்-1

0
85

மீனா பேரழகி என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் அழகி அவள்.. மனதும் இளகிய மனது, அவள் பார்வைக்கு எல்லோரும் நல்லவர்கள் என்று நினைக்கும் “வெகுளி” பெண்.

அவளுக்கு என்று ஒரு உலகம் எப்பொழுதும் எதாவது ஒரு புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவாள்.. நான்காவது படிக்கும் பொழுதே இந்த பழக்கம் அவளுக்கு பள்ளியில் கதை படிக்க என்று வாரத்தில ஒரு நாள் ஒரு க்ளாஸ் இருக்கும் அன்று மட்டும் அவள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததில்லை.. வீட்டில் யாரும் திட்டினாலோ, அடித்தாலோ யாரிடமும் பேசாமல் கதை புத்தகம் எடுத்து ஒரு இடத்தில் அமர்ந்து விடுவாள் அது தான் அவள் உலகம்.. கதையில் வரும் அத்தனையும் கற்பனையில் ஓடும்.

மீனா வளர்ந்த சூழல் அப்படி. அம்மா வீட்டில் அக்காவுக்கு மட்டுமே மரியாதை.. எது வேண்டும் என்றாலும் அக்கா “புவனா” கேட்டதும் கிடைத்துவிடும். மீனா கேட்டால், “இப்ப உனக்கு எதற்கு? என்று கேள்விதான் வரும். அதற்காக அடம்பிடிக்கவோ சண்டையிடவோ தெரியாது. கோவித்தாலும் ஐந்தே நிமிடத்தில் மறந்து சிரிக்கும் பைத்தியம் அவள். ‘சரி நாமும் பெரியவள் ஆனதும் கேட்டா வாங்கி தருவாங்க’ என்று தன்னையே சமாதனம் பண்ணிக்கொள்ளும்.

“தேவதை” தன்னையே ராணியாக நினைத்துக்கொள்வாள். மீனா எது வேண்டும் என்றாலும் தன் அப்பாவிடம் கேட்டால் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதற்கும் அம்மாவிடம் அனுமதி வாங்க வேண்டும். இரவு அப்பா வரும் வரை தூங்காமல் விழித்திருந்து அவரை பார்த்து அவர் சாப்பிட்டயா என்று கேட்டால் தான் நிம்மதி. மீனாவின் பாசத்திற்குரிய இன்னொரு ஜீவன் அவளுடைய செல்ல தாத்தா.!

மீனாட்சி என்ற பெயரை மீனாம்மா என்று தான் கூப்பிடுவார். அவரிடம் தான் தன்னோட கனவு எல்லாம் சொல்லுவாள். “உங்களவிட்டு நான் போக மாட்டேன் தாத்தா எப்பவும் உங்க கூடவே இருப்பேன்” என்று அடிக்கடி சொல்லுவாள். “நீ என் மீனம்மா உன்னை யாரும் எதுவும் சொல்ல நான் விட மாட்டேன்” என்பார். தாத்தாவும் அப்பாவும் வீட்டில் இருக்கும் போது மட்டுமே அவள் அவளாக இருப்பாள்.

பள்ளி செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரம் எல்லாம் கனவு கான்பதே நிறைவேறாத ஆசைகளை கனவு கான்பது…

பதினைந்து வயதை எட்டினாள். அப்பொழுதும் அவளுக்கு வீட்டில் அம்மாவிடமும், அவள் அக்கா புவனாவிடமும் அவள் தேடிய அன்பு மட்டும் கிடைக்கவில்லை… எல்லாம் திருமணம் ஆனால் தான் நம்மையும் மதிப்பார்கள் என்று தோன்ற ஆரம்பித்தது, அவள் அக்கா புவனாவின் திருமணத்தில் தான்..

ஏனென்றால் புவனாவின் திருமணத்தில் தனது தந்தை அக்கா புவனாவிற்கு வாங்க நகை, பாத்திரம், துணி எல்லாம் பார்த்து இவளும் கனவுகான ஆரம்பித்தாள். அக்காவின் திருமணமும் நடந்தது இவள் வாழ்விலும் திருப்பங்கள் நடந்தது அந்த 15 வயதில்..

–தொடரும்

 

623total visits.