சித்திரை மாத ராசிபலன்கள் – 2017

0
238
புதன்

சுக்கிரன்

சூரியன் செவ்வாய்

 

 

கேது

பெயர்ச்சி

சித்திரை 29 புதன்

மீனம் – மேஷம்

 

ராகு
சனி குரு

சித்திரை மாத இராசி பலன் (2017)

வாக்கியபஞ்சாங்க அடிப்படையில் மாசிமாத கிரகநிலை…

மேஷம் : மன தைரியத்தால் மகுடம் சூடும் மேஷ ராசிக்காரர்களான உங்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யும் ஐந்தாம் அதிபதி சூரியனால் நற்பலன்கள் நிறையவே நடைப்பெறும் எண்ணியவை ஈடேறும், குழந்தைகளுக்கு நற்பலன் நடைபெறும், மகளுக்கு எதிர்பார்த்த வரன்கள் வாயில் தேடி வரும், சூரியனால் உங்கள் கோபம் அதிகரிக்கும். சிலர் உங்கள் கோபத்தை அதிகரிப்பார்கள், இரண்டில் செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை, தேவையில்லா விவாதங்களால் அவஸ்தை ஏற்படும், சகோதர வகையில் சண்டைகள் தவிர்க்கவும், வீடு மனை வாங்கும் பொழுது பத்திரங்களை ஒரு முறைக்கு இரு முறை படித்துபார்த்து, வேறு வில்லங்கம் இருகின்றதா என்பதை சரிபார்த்து வாங்கவும், சுக்கிரன் பன்னிரெண்டாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் வருமானம் சிறப்பாக இருக்கும், சிலருக்கு ஷேர் மார்கெட் மூலம் வருமானம் வரும், மனைவி உதவிகரமாக இருப்பார்கள். குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்கும். வீடு மனை வாங்குவதற்கு வங்கியில் கேட்டக்கடன் உதவிகள் கிடைக்கும். எல்லாம் இருந்தும் ஏதோ பலவீனமாக உணர்வீர்கள். மனது சஞ்சலப்படும்.

வியாபாரத்தில் புதிதாக முதலீடுகள் எதுவும் போட வேண்டாம். பங்குத்தாரர்கள், வேலையாட்கள் இடத்தில் கவனம், அறிமுகமில்லா நபர்களை வேலைக்கு சேர்க்க வேண்டாம். கமிசன், தரகு தொழில்கள் மற்றும் உணவு தொழில்கள் லாபம் தரும். நெடுநாட்கள் வசூலாகாத பாக்கிகள் வசூல் ஆகும். வேலையில் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும், உயர் அதிகாரிகள் மோதல்களை தவிர்க்கவும். வேலை பறிபோகும் வாய்ப்பும் உண்டு, கடின உழைப்பால் உங்களை நிலை நிறுத்துவீர்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள், மாணவ மாணவியர்கள் பழைய நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். சுற்றுலா சென்று வருவீர்கள், வேலைத்தேடும் பெண்களுக்கு வேலை கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் இருந்து வந்த இருட்டடிப்பு நிலை நீங்கும்.  கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கூடிவரும். அனுசரித்து செல்வதால் ஆனந்தம் காணும் மாதமிது.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி14, 15, 16 ந்தேதி பிற்பகல் 03.15 மணி வரை மற்றும் முதல் மே 11, 12, 13ந்தேதி வரை சந்திராஷ்டமம் மனதில்இனம்புரியாத பயம் மன உளைச்சல் வந்துபோகும்.

பரிகாரம் : சரபேஸ்வரர் வழிபாடு சகலப்பிரச்னையையும் தீர்த்து வைக்கும்.

 

ரிஷபம் : பிறருக்கு கொடுப்பதே பேரானந்தம், பெறுவதல்ல என்பதை உணர்ந்த ரிஷப இராசியினருக்கு ஐந்தில் அமர்ந்த குருவால் எதிலும் வெற்றிக்கிட்டும். நண்பர்கள் உறவினர்கள் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உயர்ந்த இடத்தில் இருக்கும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவுகள் இடத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். உங்கள் ஆலோசனைகளை கெட்டு நடந்துக்கொள்வது உங்களுக்கு மதிப்பளிக்கும். சாதுர்யமாக பேசி காரியங்கள் சாதிக்கும் காலமிது. நான்காம் அதிபதி சூரியன் பன்னிரெண்டில் மறைந்து இருப்பதால் தூக்கம் குறையும். ஏழுக்குரிய செவ்வாய் ராசியில் இருப்பதாலும், ஏழில் சனி அமர்ந்து இருப்பதாலும், கணவன் மனைவி ஒற்றுமையை சிலர் சீர்குலைக்க முயற்சிக்கலாம். பொருட்கள் தொலைந்தது போவதற்கும் வாய்ப்புகள் அதிகம், சாலையில் கவனமாக செல்லவும், ஞாபக மறதி அதிகமாகும், வீடு மனை வாங்குவது விற்பதில் கவனம் தேவை, உடன்பிறந்தவர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

வியாபாரத்தை நெறிப்படுத்துவீர்கள், விளம்பரங்கள் உதவியாக இருக்கும். புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள், பழைய பாக்கிகள் வசூலாகும். பலத்தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழிலை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்துவீர்கள், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன், போர்டிங் லாட்ஜிங், வாகன உதிரிப்பாக தொழில் லாபம் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன சலுகைகள் வந்து போகும், சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்,  மூத்த அதிகாரிகள் பக்கப்பலமாக இருப்பார்கள், புதிய பொறுப்புகள் வந்து சேறும். உயர்கல்வியில் ஈடுபடும் மாணவ மாணவியர்களுக்கு முன்னேற்றமான மாதமிது, நுழைவுத்தேர்வுகளில் பங்கெடுப்பீர்கள், பழைய நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாண பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் நிறைவேறும், காதல் விசயத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும், அரசியலில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், கலைத்துறையினருக்கு பிற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வந்து செல்லும். தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பால் காரியம் சாதிக்கும் மாதமிது.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 16 பிற்பகல் முதல் 17, 18 வரை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது.

பரிகாரம்: சிவாலயங்களில் உள்ள அம்மனை வணங்குங்கள்.

 

மிதுனம் : வருங்காலத்தை கணித்து அதற்க்கான திட்டமிட்டு வாழும் மிதுன ராசியினருக்கு, சூரியன் உங்கள் லாப வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து இருப்பதால் எதிர்பாராத நிகழ்சிகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செவ்வாய் பண்ணிரெண்டில் மறைந்து நிற்பதால் சகோதர வகையில் சச்சரவுகள் இருக்கும். பயணங்கள் அலைச்சலாக இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகள். பழைய கடன்கள் தூக்கமின்மையை கொடுக்கும். ஐந்துக்குரிய பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் இந்த மாதம் முழுக்க பத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருப்பதால் எல்லா வகையிலும் மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளால் சமுகத்தில் அந்தஸ்து உயரும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் வாய்ப்புகள் வந்து சேரும். ராகுவும் சனியும் வலுவாக அமர்ந்து இருப்பதால், தாரளா பணவரவு உண்டு. வெளிநாட்டு வேலை கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை, வீடு, வாகன வகையில் பராமரிப்பு சிலவுகள் கூடும். கடந்தக்காலத்து ஏமாற்றங்களையும் இழப்புகளையும் நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். ராசிநாதன் புதன் வக்கிரமாகி அமர்ந்து இருப்பதால் உடல் சோர்வு, அலைச்சல் போன்றவை வந்து நீங்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், பழைய பாக்கிகள் வசூலாகும், புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும், புகழ்பெற்ற நிறுவனங்களின் ஏஜென்சிகள் அமையும், மக்கள் கூட்டம் அதிகமாகும் இடங்களில் கடையை இடம் மாற்றும் எண்ணம் தோன்றும். கணினி உதிரிபாகங்கள், ரியல் எஸ்டேட் தொழில்கள் நன்றாக நடைப்பெறும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும், அதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். மேலும் உங்களுக்கு ஆலோசனைகள் கூறி உதவுவார்கள், சக ஊழியர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் வந்து சேரும். கலைத்துறையில் புகழும் செல்வாக்கும் கூடும். உங்களது கற்பனை திறன் வளரும், உங்களது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மாணவமாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று விரும்பிய கல்வி நிறுவனத்தில் எதிர்பார்த்த பாடபிரிவில் சேர்வீர்கள். நல்ல நட்பு அமைய பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல்19, 20, 21ந் தேதி காலை மணி 10மணி வரை மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும்.

பரிகாரம் : சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற குருமார்களை வழிபடுவது மேலும் வெற்றிக்கொடுக்கும்.

 

கடகம் :கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரம மேற்கொண்டு வாழும் கடக்க ராசியினருக்கு இந்த மாதம் உங்கள் பிரபல யோகாதிபதி செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்து இருப்பதால் நீண்ட கால ஆசையெல்லாம் நிறைவேறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள். நினைத்த காரியங்கள் ஈடேறும். சூரியன் சாதகமாக இருப்பதால் அரசால் ஆதாயம் உண்டு. சாதுர்யமாக பேசி நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு, பிள்ளைகள் வழியில் பெருமை கூடும். மகளுக்கு திருமண முயற்சிகள் வெற்றியடையும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தாயாரின் உடல்நிலை சீராகும். தைரியமான சில முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பீர்கள். உறவினர் வீட்டு விசேசங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மூன்றாம் இடத்தில் இருக்கும் குருவால் இரவு தூக்கம் கெடும், மறைமுக எதிர்ப்புகள் தொடரும், வீண் விவாதங்களை தவிர்க்கவும், ராகு கேது பாதகமாக இருப்பதால், சளி, வாயு தொல்லை, வயிற்று நோவு, கண் வியாதிகள், கணுக்கால் முழங்கால் வலி போன்றவை வந்து நீங்கும். ஐந்தாம் இடத்து சனியால் துரோகிகளை இனம் காண்பீர்கள், உறவாடி கெடுத்த சிலரை நினைத்து வருத்தம் கொள்வீர்கள்,

வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள், பழைய பாக்கிகளை போராடி பெறுவீர்கள், கடையை வேறு இடத்திற்கு மாற்றகூடிய வாய்ப்பு உண்டு. பங்குத்தாரர்களின் ஒத்துழைப்பு கூடும், வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். எலக்ட்ரிக்கள், துணி, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும், அடுத்தவர் வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்தமையும், உங்களுக்கு எதிராக இருந்த மேலதிகாரி இடம் மாறுவார், புதிய அதிகரி ஒத்துழைப்பு கிடைக்கும், சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பெண்களுக்கு காதல் கை கூடும், பெற்றவர்கள் ஆதரவு கிடைக்கும்,  நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், மாணவமாணவியர்கள் போட்டித்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் வெற்றிக்கிடைக்கும், அரசியலில் புதிய பொறுப்புகள் வந்து சேரும், கலைத்துறையில் மூத்த கலைஞர்கள் நட்பால் புதிய வாய்ப்புகள் கூடும், உங்களது படைப்புத்திறன் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தடை இன்றி நிறைவேறும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல்21, 22 மற்றும் 23ந் தேதி மாலை 5மணி வரை சந்திராஷ்டமம். வீண் டென்சன், அலைச்சல் வந்து போகும்.

பரிகாரம் :ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றிக்கொடுக்கும்..

 

சிம்மம்: தன்மானத்தை விட்டுக் கொடுக்காத சிம்மராசியினருக்கு, குருபகவான் 2ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். உங்களின் பிரபல யோகாதிபதி செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால்செல்வாக்கு கூடும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெற்றோருடனானமனத்தாங்கல் நீங்கும். அவர்களின் உடல் நிலை சீராகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடிவடையும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்தசொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம்பெற்று காணப்படுவதால் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதைஉணருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமூகமாக முடிப்பீர்கள்.உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசுகாரியங்கள் சுலபமாக முடிவடையும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால்தன்னம்பிக்கை அதிகரிக்கும். அறிவு பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் பேசிஎல்லோரையும் கவருவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வீண்செலவுகளும், அலைச்சலும், தவிர்க்க முடியாத பயணங்களும் இருந்துகொண்டேயிருக்கும்.திடீர் செலவுகளால் ஏற்படும் பணப்பற்றாக்குறையைநினைத்து  உள்மனதில் பயம் இருக்கும். கணவன்-மனைவிக்குள் விவாதங்களும் வந்துபோகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச்செலவுகளும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தைஅறிந்து கொண்டு அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். புரோக்கரேஜ், எலக்ட்ரிக்கல், மருந்து, கட்டுமானப் பொருட்களால் லாபம் வரும்.பங்குதாரர்களும்பணிவார்கள். வேலையாட்கள் உங்கள் ஆலோசனைகளை முதலில் மறுத்தாலும் பிறகுஏற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகள்வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.பெண்களே! அழகு, ஆரோக்யம் கூடும். நினைத்தபடிதிருமணம் முடியும். மாணவ, மாணவிகளே! நுழைவுத் தேர்விற்காக தனிவகுப்பில் சேர்வீர்கள். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். பால்ய நண்பர்களைசந்திப்பீர்கள். அரசியல்வாதிகளே! வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும், கலைத்துறையினரே!உங்களுடைய ரசனைக் கேற்ப நல்ல கதாபாத்திரங்களுக்கு அழைப்பு வரும். தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும்.. நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதுடன், ஓரளவு வசதி, வாய்ப்புகள் கூடும்மாதமிது.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 23ந் தேதி மாலை மணி 5 முதல் 24, 25ந் தேதி இரவு மணி 9.06 வரை புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும்

பரிகாரம்:  சிவன் வழிபாடு ஜீவனை இனிதாக்கும்.

 

கன்னி: நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றுபணிந்து போவதால் மற்றவர்களின் நன்மதிப்பை பெரும் கன்னி ராசியினர் இந்த மாதம் சனியும், கேதுவும்வலுவாக இருப்பதால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். சவால்களில்வெற்றி பெறுவீர்கள். ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவுஅதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள்.திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின்வருகையாலும் வீடு களைக்கட்டும். பிரபலங்களும் ஆதரவாக இருப்பார்கள். ஷேர்மூலமாக பணம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.செவ்வாய் 9ல் நிற்பதால்உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூகதீர்வு காண்பீர்கள். 8ந் தேதி முதல் புதன் சாதகமாவதால் மன இறுக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடனான மோதல்கள்விலகும். சூரியன் 8ல் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.அரசுக் காரியங்கள் சற்று தாமதமாகி முடியும். ராசிக்குள் குரு நிற்பதால்மூட்டு வலி, முதுகு வலி வந்து போகும். கணவன்மனைவிக்குள் சின்ன சின்ன ஈகோபிரச்னைகள் வந்து நீங்கும். வீண் சந்தேகத்தையும் தவிர்க்கப்பாருங்கள். உங்களின்பிரபல யோகாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால்எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, மனை வாங்கும் அமைப்புஉண்டாகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தை அறிந்து கொள்வீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்களை மாற்றி விட்டு புதியவர்களை வேலையில் சேர்ப்பீர்கள். போர்டிங், லாட்ஜிங், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை வேறு நல்ல இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளால் பிரச்னைகள் வெடிக்கும். சக ஊழியர்களில் ஒரு சாரார் உங்களுக்கு ஆதரவாகவும், ஒரு சாரார் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். பெண்களே! உங்களுடைய ரசனை மாறும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மாணவ, மாணவிகளே! நீச்சல் கற்றுக் கொள்வீர்கள். ஓவியம், இசைத் திறமையையும்வளர்த்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் நல்ல விதத்தில் வெளியாகும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 25ந் தேதி இரவு 9.06 மணி முதல் 26, 27 ஆகிய தேதிகளில் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.

பரிகாரம் : துர்கையை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கும்.

 

துலாம் : சமூக விழிப்புணர்வு கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களைஅரும்பாடு பட்டு முன்னேற்றுவீர்கள். ராகு வலுவாக இருப்பதால் கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். திடீரென்று அறிமுகமாகுபவர்களால் ஆதாயம்அடைவீர்கள். உங்களின் பாக்யாதிபதியாகிய புதன் சாதகமான நட்சத்திரங்கள் செல்வதால் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர்கள். அனுபவப் பூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். செவ்வாயும், சுக்கிரனும் சாதகமாக இல்லாததால் அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். பணப்பற்றாக்குறை இருக்கும். அடிக்கடி குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்து போகும். வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள்.அலர்ஜி, இன்பெக்‌ஷன் வந்துபோகும். வீட்டில் குடிநீர் குழாய் பழுதாகும். மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.உடன்பிறந்தவர்கள், மனைவிவழியில் உறவினர்களால் தொந்தரவுகள் வந்து போகும். சொத்துப் பிரச்னையில் இப்போது தலையிடாதீர்கள். 12ல் குரு தொடர்வதால்எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். வீண் பழிக்குள்ளாக வேண்டியிருக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உணவு, கமிஷன், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதுவாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.புதிய நபர்களை  வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள்.ராசிக்கு 8ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சிறுசிறு நட்டங்கள் ஏற்படும். பணவிஷயத்தில் கறாராக இருங்கள். கடையை மாற்றுவதில் அவசரம் வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். டென்ஷன் இருக்கும்.உயரதிகாரி உங்களை உதாசீனப்படுத்துவார்கள். சக ஊழியர்கள் கூட சில நேரங்களில் சாதகமாகவும், பல நேரங்களில் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வார்கள். பெண்களே! சூரியன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல்கட்டி, மாதவிடாய்க் கோளாறு வந்துபோகும். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். மாணவ, மாணவிகளே! உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உங்களுடைய தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! வழக்கால் அலைகழிக்கப்படுவீர்கள். உட்கட்சிப்பூசல் வெடிக்கும். கலைத்துறையினரே! போட்டிகள் இருக்கும். உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். அலுப்பு, சலிப்பு கொள்ளாமல் ஆக வேண்டியதை பார்க்க வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.

பரிகாரம் :ஐயப்பனை வணங்குங்கள் வெற்றிக்கிடைக்கும்.

 

விருச்சிகம் :எதையும் கலைக் கண்ணோடு பார்க்கும் விருச்சிக இராசியினருக்கு இந்த மாதம் உங்களின் ஜீவனாதிபதியான சூரியன் 6ம் வீட்டிலேயே இந்த மாதம் முழுக்க அமர்ந்திருப்பதால் அரசு வேலைகள் தாமதமில்லாமல் முடியும். உங்களுடைய ராசிக்கு சுக்கிரன்  சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதம் பிறப்பதால்சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன்அமையும். உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சிறுசிறு நெருப்புக் காயங்கள், முன்கோபமெல்லாம் வந்து செல்லும். உடன்பிறந்தவர்களுடன் பிணக்குகள் வரும். சொத்து வாங்குவது, விற்பது தாமதமாகி முடியும்.

ஜென்மச் சனிநடைபெறுவதால் கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி அவசியமாகிறது. நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் உங்களுடைய ராசிக்கு எதிராக நிற்பதால் வேலைச்சுமையால் அவ்வப்போதுதூக்கம் குறையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சின்னச் சின்னமரியாதை குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 8ந் தேதி முதல் புதன் 6ல் சென்றுமறைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், காலில் சுளுக்கு, வேலைச்சுமை, உறவினர், நண்பர்களுடன் உரசல் போக்குகளெல்லாம் வந்து நீங்கும்.

தொழில் முனைபவர்களுக்கு குருபகவான் வலுவாக இருப்பதால் வியாபாரம்செழிக்கும். இரட்டிப்பு லாபம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள்கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அயல்நாட்டுநிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மதிப்பார்கள்.வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.வியாபாரசங்கத்திலும் மதிப்புக் கூடும். புதுக் கிளைகளும் தொடங்குவீர்கள்.கன்சல்டன்சி, அரிசி மண்டி, மாவு மில், ஜுவல்லரி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.உத்யோகஸ்தானாதிபதியான சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால்உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குசாதகமாகும். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு விரைந்து கிடைக்கும்.எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு வாய்ப்பும் கிட்டும். மூத்த அதிகாரிகள்முக்கியத்துவம் தருவார்கள்.பெண்களே! உங்களின்நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.உங்களின் புதிய திட்டங்களை பெற்றோர்ஆதரிப்பார்கள். காதல் இனிக்கும்.அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில்மதிக்கப்படுவீர்கள்.   மாணவ, மாணவிகளே! உற்சாகமாக இருப்பீர்கள். மொழி அறிவையும் வளர்த்துக் கொள்வீர்கள்.நுழைவுத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.கலைத்துறையினரே!உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் யாவும் திருவினையாகும் மாதமிது.
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் :திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.

 

தனுசு :தீவிரமாகயோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறுகளைச்சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உங்கள் பூர்வபுண்யாதிபதியாகிய செவ்வாய் பகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்அனுபவ அறிவால் இந்த மாதத்தில் நீங்கள் வெற்றியடைவீர்கள். அதிகாரிகளின்நட்பு கிடைக்கும். உங்களுக்கு கோபம் வரும்படி சிலர் பேசினாலும் அதையெல்லாம்பொருட்படுத்தாமல் இருப்பீர்கள். அதே போல பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையைதேர்ந்தெடுப்பதிலும் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவீர்கள். பூர்வீகசொத்தை சீர் செய்வீர்கள். ஆனால் சூரியன் 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால்அவ்வப்போது தூக்கம் குறையும். முன்கோபமும் வந்துபோகும். பிள்ளைகளிடம்அவ்வப்போது குறைகளை கண்டுபிடித்து வருத்தமடைவீர்கள்.நிறைகளையும்பாராட்டத் தயங்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூரப் பயணங்களைதவிர்ப்பது நல்லது. பெண்களே! சுறுசுறுப்பாவீர்கள். வேற்றுமொழிக்காரர்களின் நட்பால்ஆதாயமடைவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். பிதுர்வழிச் சொத்துப்பிரச்னை தலைதூக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்திலும் அமைதிதிரும்பும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உறவினர், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நட்பு வட்டமும் விரிவடையும். ஏழரைச் சனிதொடர்வதாலும், உங்கள் ராசிநாதன் குரு 10ல் நீடிப்பதாலும் செலவுகளைகட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில்என்னவாகுமோ என்றெல்லாம் கவலைப்படுவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம்.

 

வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது.பழைய வாடிக்கையாளர்கள் மனங்கோணாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேற்று மொழிவாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்டவேண்டாம். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். அழகு சாதனப்பொருட்கள், துரித உணவகம், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.உத்யோகத்தில்சக ஊழியர்கள் உங்களை ஆதரித்துப் பேசுவார்கள். ஆனால் மூத்த அதிகாரிகளுடன்கசப்புணர்வுகள் வரும். அவர்களைப் பற்றிய ரகசியங்களை வெளியே சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவ வேண்டாம்.வெளிநாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் புது வேலையும் கிடைக்கவாய்ப்பிருக்கிறது.மாணவமாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் ஸ்போக்கன்இங்கிலீஷ் போன்ற மொழியறிவுத் திறனையும் நீங்கள் அதிகப்படுத்திக் கொள்வதுநல்லது. அறிவியல் சம்பந்தமான இடங்களுக்குச் சென்று வருவது நல்லது. அரசியல்வாதிகளே! தொகுதி மக்களை மறக்காதீர்கள். உங்களுடன்இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை இனம் கண்டறிந்துஒதுக்குவீர்கள்.  கலைத்துறையினரே!உங்களுடைய படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். ரசிகர் கூட்டம்அதிகரிக்கும். குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு வெற்றிப் பாதையைகண்டறியும் மாதமிது.
சந்திராஷ்டமம்: மே 2, 3 மற்றும் 4ந் தேதி காலை மணி 9.15 வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பரிகாரம் :சாய் பாபாவை வணங்குங்கள்..

 

மகரம் :கடல்போல் விரிந்த மனதும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள்மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். ராஜ கிரகங்களான சனியும், குருவும்வலுவாக இருப்பதால் அமோகமாக இருக்கும். அழகு, ஆரோக்யம் கூடும்.குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி தங்கும்.பிரபலங்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். வீடு கட்ட வங்கிக் கடன் உதவிகிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். எதிர்ப்புகள்குறையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பழைய நண்பர்கள்தேடி வந்து பேசுவார்கள். திடீரென்று அறிமுகமாகும் நபர்களால் பயனடைவீர்கள்.ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.நீண்ட காலமாகசெல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலத்திற்கும் சென்றுவருவீர்கள். பழைய கடனை பைசல் செய்வதற்கு புது கடன் உதவிகள் கிடைக்கும்.இந்த மாதம் முழுக்க சூரியன் 4ல் நிற்பதால் அலைச்சல் அதிகமாகும். திடீர்பயணங்கள், வீண் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும்.அரசு அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் எச்சரிக்கையுடன்செயல்படப் பாருங்கள். வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் விருந்தினர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.செவ்வாய் 5ல்நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருந்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும்உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைக்கலாமேஎன்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுடைய இளமைக் காலங்களைஅவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துப்பிரச்னையில் இப்போது மூக்கை நுழைக்காதீர்கள்.

 

வியாபாரத்தில் புதியதொழில் தொடங்கும் முயற்சி நல்ல விதத்தில் முடியும். ஏற்றுமதி, இறக்குமதி, மளிகைக் கடை, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பழைய பாக்கிகள்வசூலாகும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். புதுவாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். தள்ளுபடி விற்பனை மூலமாகலாபமடைவீர்கள். விளம்பர யுக்திகளையும் கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும்.அதிகாரிகள் மதிப்பார்கள். சக ஊழியர்கள்மத்தியில் செல்வாக்குக் கூடும். சிலருக்கு அயல்நாடு தொடர்புள்ளநிறுவனத்தில் வேலை கிடைக்கும்.பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன்அமையும். தடைகள் நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். மாணவ, மாணவிகளே! இசை, ஓவியம், நீச்சலை கற்றுக் கொள்வீர்கள். புதிய நண்பர்கள் மூலமாக பொது அறிவைவளர்த்துக் கொள்வீர்கள். கன்னிப்.அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல் குறையும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்புகிடைக்கும். பரபரப்பாக செயல்பட வைத்தாலும் அதிரடி மாற்றங்களையும் தரும்மாதமிது.

 

சந்திராஷ்டமம்: மே 4ந் தேதி காலை மணி 9.15 முதல் 5 மற்றும் 6ந் தேதி மாலை மணி 3.25 வரை திட்டமிட்டவை தாமதமாக முடியும்.
பரிகாரம் : கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடி பிரத்யங்கரா ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.

 

 

கும்பம் :சதாசர்வகாலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்துவாழக்கூடிய மனசுடையவர்கள். உங்களின் சப்தமாதிபதியான சூரியன் இந்த மாதம்முழுக்க 3ம் இடத்தில் வலுவாக உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் நினைத்தகாரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்துமுடியும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதியானசுக்கிரனும் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் மனஇறுக்கங்கள்நீங்கும். தன்னம்பிக்கை கூடும்.கண்டும், காணாமல் சென்றுக்கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். முன்கோபம் குறையும்.மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனிடம் இருந்து வந்த கூடாப்பழக்கவழக்கங்கள் நீங்கும். வேலை கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும். வழக்குகள்சாதகமாக முடிவடையும். ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். சகோதர, சகோதரிகள்  ஆதரவாகப் பேசுவார்கள். குரு 8ல் மறைந்திருப்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள்.உங்கள் ராசிநாதன் சனிபகவான் கேந்திர பலம் பெற்று காணப்படுவதால் உங்களுடையமதிப்பு, மரியாதை கூடும்.
கடினமான வேலைகளையும் சாதூர்யமாகப் பேசிமுடிப்பீர்கள். புது வேலையும் கிடைக்கும். ராகு 7ல் நிற்பதால் அவ்வப்போதுசந்தேகமும், தடுமாற்றமும் வந்து போகும். கன்னிப் பெண்களே!அழகு, ஆரோக்யம் கூடும். காதல் இனிக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் பழைய தொழிலைவிட்டு விட்டு புது தொழில் அல்லது புதுத் துறையில் ஈடுபடுவீர்கள். புதுபங்குதாரர்களும் அறிமுகமாவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப எல்லாம் அமையும்.உங்களுடைய புதிய திட்டங்களை எல்லோரும் தரிப்பார்கள்.  ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, வாகனம், போர்டிங்க், லார்ட்ஜிங் வகைகளால் லாபம்அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன்மோதல்கள் வந்து நீங்கும். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.மாணவ, மாணவிகளே! உங்களுக்குபிடித்த விளையாட்டில் கூடுதல் பயிற்சி மேற்கொள்வீர்கள். நட்பு வட்டம்விரிவடையும். இசைக் கருவிகளை மீட்க கற்றுக் கொள்வீர்கள்.அரசியல்வாதிகளே! ராஜதந்திரம் கற்றுக் கொள்வீர்கள். தொகுதி மக்களிடையேயதார்த்தமாகப் பேசி புகழடைவீர்கள்.கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால்பாராட்டப்படுவீர்கள். இளைய கலைஞர்கள் மூலமாகவும் புதிய வாய்ப்புகள்கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். திட்டமிட்டு செயல்படுவதால் ஓரளவு முன்னேற்ற மடையும்மாதமிது.
சந்திராஷ்டமம்:மே 6ந் தேதி மாலை மணி 3.25 முதல் 7 மற்றும் 8ந் தேதி மாலை மணி 6.52 வரை இனந்தெரியாத கவலைகள் வந்து போகும்.
பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை தரிசித்து வாருங்கள்.

 

மீனம் :தென்றலாய்காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும், செயலிலும்வேகத்தைக் காட்டுபவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயேஅமர்ந்து உங்களுக்கு காய்ச்சல், சளித் தொந்தரவு, முன்கோபம், காரியத் தடைகளையெல்லாம் தந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்திருப்பதால்நோய் விலகும். சுறுசுறுப்பாவீர்கள். சோர்வு, களைப்பிலிருந்துவிடுபடுவீர்கள். ஆனால் சூரியன் 2ல் நுழைந்திருப்பதால் கடுமையானவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் கனிவைக் கூட்டிக் கொள்ளுங்கள்.கண் வலி, பல் வலி வந்துபோகும். அடி வயிற்றிலும் வாயுக் கோளாறால் வலி வந்துநீங்கும். உங்கள் தன, பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால்எதிர்பார்த்த பணம் வரும். தைரியமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள்.

அதிகக்கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தவும் வாய்ப்பிருக்கிறது. குறைந்தவட்டியில் வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாகஇருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.புகழடைவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தாய்வழி உறவினர்களுடன்இருந்து வந்த பகைமை நீங்கும். மாமா, மனைவிவழி உறவினர்களும் உதவுவார்கள்.சுக்கிரன்  சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.தங்கம் சேரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். நவீன எலெக்ட்ரானிக்ஸ்சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள். உங்கள்ராசிநாதனான குருபகவானும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும்.வி.ஐ.பிகள் உதவுவார்கள்.
அரசால் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்யம்கிடைக்கும். வேலையும் அமையும். கோயில் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.சிலர் குலதெய்வக் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவீர்கள்.உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையும் முன்னின்று நடத்துவீர்கள்.கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுசிலர் புது வேலையில் அமர்வீர்கள். பெற்றோருடனான மனத்தாங்கல் விலகும்.திருமணம் கூடி வரும்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதுக் கிளைகள்தொடங்குவீர்கள். பிரச்னை தந்த பங்குதாரர்களை நீக்குவீர்கள். நல்லஅனுபவமிக்க படித்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கல்விநிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட், கட்டுமானப் பொருட்களாலும் லாபம்அதிகரிக்கும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகள் உதவியாகஇருப்பார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அண்டை மாநில தொடர்புள்ளநிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மாற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள்.
மாணவ மாணவிகளே! குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். புதுநண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். அரசியல் வாதிகளே! எதிர்க்கட்சியினரை கேள்விகேட்டு மடக்குவீர்கள், கலைத்துறையினரே! யதார்த்தமானசிந்தனைகளாலும், படைப்புகளாலும் புகழடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும் மாதமிது.
சந்திராஷ்டமம்: மே 8ந் தேதி மாலை மணி 6.52 முதல் 9, 10 மற்றும் 11ந் தேதி காலை மணி 11 வரை எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள்.

பரிகாரம் : திருத்தணி முருகரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்வது கூடுதல் அருள் கொடுக்கும்..

 

மாசிமாத பலனை கணித்தவர்

“ஜோதிட அமுதம்”S.ஜோதிமணிகாந்தி. D.Astro.,

 

565total visits.