தினம் ஒரு தகவல் -4

0
52

121. சங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்? – இரண்டாம் விருபாக்ஷா

122. தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜயநகர மன்னர் யார்? – முதலாம் புக்கர்

123. முகமது ஷாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் யார்? – அமைச்சர்

124. அகமது ஷா என்பவர் தலைநகரை குல்பர்கானில் இருந்து எதற்கு மாற்றினார்? – பீடார்

125. களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ பேரரசை நிறுவியர் யார்? – சிம்ம விஷ்ணு

126. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது? – சோழர்கள் காலம்

127. குடவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவர்? – முதலாம் மகேந்திரவர்மன்

128. திராவிடச் சங்கத்தை நிறுவியர் யார்? – வச்சிரநந்தி

129. மலைகளும், ஆறுகளும், காற்றுகளும், மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன என்று கூறியவர் யார்? – யு.சு.னு. பானர்ஜி

130. இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சி சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்? – ஆல்பரூனி

131. எந்த நூற்றாண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின? – கி.மு. 4-ம் நூற்றாண்டு

132. எந்த நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் இடைக்காலம் எனப்படுகிறது.? – 8 – 18-ம் நூற்றாண்டு

133. இந்திய கோயில் கட்டடக்கலையின் தொட்டில் எனப் புகழப்படுவது எது? – ஐஹhலே

134. சீனப்பயணி யுவான் சுவாங் யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்தான்? – நரசிம்ம வர்மன்

135. சைவக்குறவர் எனப்படுபவர்கள் யாரை வழிபட்டனர்? – சிவன்

136. வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4

137. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

138. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

139. காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு

140. தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்

141. ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.

142. வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.

143. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.

144. அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்-சூரியன்

145. உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்

146. நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.

147. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.

148. நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.

149. தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.

150. மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை எனப்படும்.

151. மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது-மண்புழு உரம்

152. இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்-சின்னமால்டிஹைடு

153. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி

154. எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்

155. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்

-ரேவான்.

347total visits.