பக்தர்கள் – பாகம்-1

0
26

நமக்குள் இருக்கும் பக்தியை நான்கு வகை படுத்தலாம்.

1)அர்த்த பக்தி
 தன் வலிகளில் இருந்து விடுதலை பெற தெய்வத்திடும் வேண்டுதல் வைப்பவர் (the distressed)
2)அர்தார்த்த பக்தி
 தன் குறிப்பிட்ட ஆசைக்காக தெய்வத்தின்பால் சிறந்த பக்தி செலுத்துபவர் (divine bakthi for specific desire)
3)ஜிக்யாஸூ பக்தி
 இறைவனை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர். (knowledge seeker through sculptures and literature)
4)ஞானி
தன்னை முழுவதும் உணர்ந்தவர். அனைவருக்குள்ளும் ப்ரம்மம் உண்டு என உணர்ந்தவர். (self realised.)

தன் வலிகளில் இருந்து விடுபடுவதற்காக தெய்வத்திடம் வேண்டுபவர்கள் அர்த்த பக்தியினை கொண்டவர்களாக இருப்பார்கள்.

த்ரௌபதி இவரை பலருக்கும் தெரிந்திருக்கும். தன் கணவர்களால் பணையமாக சூதாட்டத்தில் வைக்கப்பட்டவர். கணவர்கள் தோற்றதால் அவைக்கு அழைத்து வரப் பட்டவர். அங்கு துச்சாதனன் அவர்தம் துகிலை உரிய ஆரம்பிக்கின்றார். தனது மானத்தை காக்க வேண்டிய கணவர் தான் இதற்கு காரணம் என உணர்ந்தவர் செய்வதறியாது கண்ணனை வேண்டி கரம் கூப்பி அழைக்கின்றார். அப்பொழுது அவள் நினைவெல்லாம் கண்ணன் தன்னை காக்க வரவேண்டும் என்பதில் மட்டுமே. அவரை அன்றி வேறு யாரும் தன்னை காக்க இயலாது என நம்பி கைகளை உயர தூக்கி அழைக்கின்றார். இதுவே அர்த்த பக்தி.
நம் காலத்திலேயும் அப்படிப்பட்ட பக்தி பெரும்பாலும் பிள்ளை பேறுக்காக நடத்தப்படுகின்றது. என் நண்பர் ஒருவர் தனக்கு பிள்ளை இல்லை என மனம் நொந்து தெய்வத்திடம் வேண்டினார். மூன்று ஆண்டுகள் வேண்டுதலின் பலன் இன்று ஒரு மகள் பிறந்திருக்கிறாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அதே பக்தி இன்றும் இருக்கிறதா என்றால் இல்லை. அவருடைய தேவை(வலி) பூர்த்தியாகி விட்டது…..அன்று தெரியவில்லை இதுதான் ஆர்த்த பக்தியென.
ஸ்ரீவித்யா இராமசந்திரன்

236total visits.