கூகுள் எனும் இணைய மருத்துவர்

0
24
ஷியாம் 25 வயது இளைஞன். மென்பொருள் பொறியாளன். ஆறிலக்க சம்பளக்காரன். கல்லூரி முடித்தவுடன் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு வேலைக்கு சேர்ந்தவன் குறைந்த காலத்தில் Project Manager ஆக உயர்ந்து விட்டான். அது தன் திறமையால் மட்டுமே வந்த்து என்பதை அவன் தீர்க்கமாக நம்புவான். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வைத்திருப்பான். அதனால் எப்போது நிறைய நண்பர்கள் அவனைச் சுற்றியே இருப்பர். அடுத்தவர்கள் வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வான்.

வெள்ளிக்கிழமை அலுவலகம் முடிந்தால் நேராக ஏதேனும் மதுபான விடுதிக்கு சென்று விடுவான். விடிய விடிய கொண்டாட்டம், கேளிக்கை. அந்த கொண்டாட்டம் சனிக்கிழமையும் தொடரும். அவனைப் பொறுத்தவரை அந்த வாரத்தின் டென்ஷன் முழுவதையும் அந்த இரண்டு நாளில் குறைத்து விட வேண்டும் என்ற எண்ணம். வார நாட்களில் எல்லாம் உடற்பயிற்சி. உணவுக் கட்டுப்பாடு உண்டு. ஆனால் நேரத்திற்கு உண்ணும் பழக்கம் கிடையாதுமகன் கை நிறைய சம்பாதிக்கிறான், பொறுப்பான பதவியில் இருக்கிறான் என்பதால் அவன் பெற்றோரும் அவனை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஷியாமிற்கு ஒரு சித்தாந்தம். மனிதர்களை நம்புவதை விட மெஷினை தான் அதிகம் நம்புவான். அவன் லேப் டாப், மொபைல், கார் எல்லாமே லேட்டஸ்ட் ஆக அப்டேட் செய்து வைத்திருப்பான். அதே ரீதியில் தான் அவன் உடல் உபாதைகளையும் அணுகுவான். ஏதேனும் உடலில் சின்ன கோளாறு ஏற்பட்டால் உடனே அந்த symptoms  குறித்து GOOGLE  செய்து பார்ப்பான். அதில் வரும் முடிவுகளை வைத்து தனக்கு இது மாதிரியான கோளாறு என்று முடிவு செய்து அதற்கான மருந்தையும் GOOGLEலிலேயே கண்டுபிடித்து அதை வாங்கி உட்கொள்வான். மாதம் ஒரு முறை அவர்கள் அலுவலகத்தில் உள்ள மருத்துவரிடம் எல்லோரும் routine health check up செய்து கொள்வது வழக்கம். அப்படியான சந்தர்ப்பங்களில் கூட ஷியாம் டாக்டருக்கே மருத்துவம் சொல்லி கொடுப்பான். அதில் அவனுக்கு அப்படி ஒரு பெருமை. இப்படியாக சதா சர்வ காலமும் மெஷினுடன் மட்டுமே அவனுடைய சம்பாஷணை இருக்கும்.

அடுத்த மாதம் அவன் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அதற்கு முன்னர் அவன் Medical Fitness  சான்றிதழ் பெற வேண்டும். அப்போது தான் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். நகரிலேயே மிகவும் பெரிய மருத்துவமனையில் அவனுக்கு பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷியாம் தன் நண்பன் வினோத்துடன் செல்கிறான். வினோத் ஷியாமின் பள்ளி கால நண்பன். ஆனால் எல்லாவற்றிலும் ஷியாமிற்கு எதிர்மறையான கருத்துடையவன். என்ன கருத்து வேறுபாடிருந்தாலும் வினோத் பேச்சிற்கு ஷியாம் மரியாதை கொடுப்பான்.

மருத்துவமனையில் ஷியாமிற்கு எல்லா வகையான பரிசோதனையும் செய்யப் படுகிறது. அப்போது Ultra sound அறிக்கையில் அவனுடைய கல்லீரல் வீக்கம்-fatty liver அடைந்திருப்பது தெரிய வருகிறது. மருத்துவர் இதை சுட்டிக் காட்டி சற்று கவனமாக இருக்குமாறு சொல்கிறார். ஷியாம் சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். வரும் வழியில் வினோத் சற்றே கவலையுடன் ஷியாமிடம் அவன் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுமாறு சொல்ல அதற்கு ஷியாம் பெரிதாக சிறித்து விட்டு தன்னுடைய Tabல் அந்த நோய் குறித்த விஷயங்களை காட்டி விட்டு இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் மருத்துவர்கள் தம்மை பயமுறுத்துவதற்கு மேற்கொள்ளும் உத்தி என்றும் கூறுகிறான்.

நாட்கள் கடக்கிறது. ஷியாமின் பழக்க வழக்கங்களில் மாற்றம் எதுவுமில்லை. சொல்லப் போனால் அவன் இப்போதெல்லான் வாரத்திற்கு 4 முறை கூட குடிப்பது உண்டு. ஒரு நாள் காலை சிறுநீர் மஞ்சளாக செல்வதை ஷியாம் கவனிக்கிறான். உடல் சூடு என்று GOOGLE மூலம் அறிந்து கொண்டு நிறைய பழச்சாறுகளை குடிக்கிறான். ஒன்றும் பயனில்லை. மெல்ல அவன் கண்களும் மஞ்சள் நிறம் அடைகிறது.

வினோத் இதனை கவனித்து விடுகிறான். ஆஸ்திரேலியா செல்ல இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஷியாமின் உடல் நிலை குறித்து வினோத் கவலை கொள்கிறான். உடனடியாக மருத்துவரை அணுகலாம் என்று முடிவு செய்து இருவரும் மருத்துவரை சந்திக்கின்றனர்.

இந்த முறையும் ஷியாம் தான் GOOGLEல் பார்த்தவற்றை குறித்து பேசி மருத்துவருக்கே மருத்துவம் சொல்லிக் கொடுக்க மருத்துவர் கடுப்பாகிறார். வினோத் நிலைமையை சரி செய்ய மருத்துவர் இப்போது ஷியாமின் கல்லீரல் முற்றிலும் பழுதுப்பட்டிருப்பதாக சொல்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் அவனை காப்பாற்ற ஒரே வழி என்றும் கூறுகிறார்.

வினோத் இந்த நிலைக்கான காரணத்தை கேட்க மருத்துவர் விளக்குகிறார். முதலில் ஷியாமின் வாழ்வு முறை அது தான் இந்த நோய்க்கான முக்கிய காரணம். தூக்கமின்மை, நேரம் தவறிய உணவு முறை, சுய மருத்துவம் ஆகியன ஒன்று கூடி வீழ்த்தியிருக்கிறது.

உங்கள் நிலைக்கு மேற்சொன்ன காரணங்களை விட முக்கியமான காரணம் உங்கள் அலட்சியம். ஷியாம் மெஷின் வேறு மனிதன் வேறு. நீங்கள் எல்லாவற்றிற்குமான தீர்வை GOOGLEடம்  எதிர்ப்பார்க்கிறீர்கள். GOOGLE ஒரு தேடு விசை அவ்வளவு தான். அதனிடம் நீங்கள் “Alcohol consumption good for health”  என்று கேட்டால் 100 ரிசல்டுகளுடன் சரிதான் என்று வக்காலத்து வாங்கும். நாம் என்ன keyword  கொடுக்கிறோமோ அதை பொறுத்த விடைகளே வரும். இது நீங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மக்கள் இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்ட்தாகவும் மொபைல் ஃபோன் மூலம் உலகத்தையே வென்று விடலாம் எனவும் நினைத்து கொண்டுள்ளனர். GOOGLEஐ கொண்டு coding எழுதலாம் prescription எழுத முடியாது. எழுதவும் கூடாது.

ஷியாமிற்கு தான் செய்த தவறு புரிகிறது. இப்போது என்ன வழி என்று கேட்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசிடம் பதிவு செய்து வைக்குமாறும் தங்களுடைய முறை வரும் போது உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் மருத்துவர் கூறுகிறார். அதுவரை தான் எழுதி தரும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மாதம் ஒரு முறை தன்னை வந்து சந்திக்குமாறும் சொல்கிறார்.ஷியாம் இந்த முறை மருத்துவர் சொன்ன எதையும் அலட்சியப்படுத்தவில்லை. சில மாதங்களில் ஷியாமிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இப்போது ஷியாம் ஆஸ்திரேலியா புறப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

Dr.இராதாகுமார். MD..DM

324total visits.