கதிர் குறள் -1133

0
26

“யாரு? நவீனா? லவ்வா? நம்பவே முடியலை”

“முதல்ல என்னாலயும் நம்ப முடியலை”

“யாரைடா?”

“ஐஸ்வர்யாவை….”

“அந்த கோழிக்குஞ்சா…?!!!! எப்படிடா?”

“சத்தியமா எனக்கும் தெரியாதுடா”
“இப்பவும் என்னால நம்ப முடியலை மச்சான். என்னா கெத்தா இருந்தான்? அவனுக்கு நம்ம மேத்ஸ் புரஃபசர் லாம் ரூட்டு போட்டுச்சுடா. உனக்கு தெரியும் தானே?”

“எனக்கு மட்டும் இல்லை…. காலேஜ்க்கே தெரியும். அதும் அந்த ஃபேஷன் டெக் பவிதா, அவகிட்டலாம் விழுந்துருவான்னு நினைச்சேன். சும்மா கெத்தா இருந்தான். நம்ம பசங்க பிள்ளைங்க பின்னாடி சுத்துறப்ப, இவன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துனாளுக”

“பின்ன? டேன்ஸ், ஸ்போர்ட்ஸ் எதை விட்டு வச்சான்? ஒரு அரியர் கூட வைக்கலை. ஸ்போர்ட்ஸ் பைக்ல வருவான் பாரு…. வயிறு எரியும் எனக்கெல்லாம். பல தடவை ஓப்பனா அவன்கிட்டயே சொல்லிருக்கேன்.”

”ஆனா ஓசி கேட்டா குடுத்துருவான்டா. அதுல குறை சொல்ல முடியாது”

”ஆனா எப்படி மச்சி ஐஸ்வர்யாவ? அவங்க 2 பேரும் பேசி நான் பார்த்ததே இல்லைடா”

”அவங்க படிக்கும் போது பேசிக்கவே இல்லைடா. சென்னை போனப்புறம் தான்”

”ஏன்? அங்கே மட்டும் இவனுக்கு வேற யாரும் கிடைக்கலையா?”

”டேய் என்ன நீ? ஐஸ்க்கு என்ன குறைச்சலுங்கற?”

”என்னவா? டேய் இவன் நம்ம செட்லயே செம உயரம். அவ நார்மலுக்கும் கீழ. பையன் அட்வெஞ்சர்னா தேடி போறவன். அவ வீட்ல காலேஜ் டூர்க்கே அனுப்ப மாட்டாங்க. எப்படிடா?”

”பக்கத்து பக்கத்து அப்பார்ட்மென்ட் டா. அங்கே பார்த்து பேசிருக்காங்க. பிடிச்சுருச்சு”

”டேய், அதான் எப்படின்னு கேட்கறேன்”

”மச்சான், ஆணும் பெண்ணும் சேருவது தானே காதல்”

”டேய், பிச்சுருவேன். இப்பலாம் ஆண் – ஆண், பெண்-பெண் ஓடிகிட்டுருக்கு”

”அது இல்லைடா, 2 பேர் காதலிக்கனும்னா என்ன தேவை தெரியுமா?”

”நீ முதல்ல சொல்லி முடி”

”மச்சி, ஒவ்வொரு ஆணுக்குள்ளயும் குறிப்பிட்ட சதவீதம் பெண்மையும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளயும் குறிப்பிட்ட சதவீதம் ஆண்மையும் இருக்கும். தெரியும் தானே?”

”ஆமா”

”நம்ம நவீன் கிட்ட மத்தவங்களை விட ஆண்மை சதவீதம் கொஞ்சம் அதிகம், அதே மாதிரி ஐஸ்கிட்ட பெண்மை அதிகம். கூட்டி கழிக்கும் போது சரியா பொருந்திக்கிச்சு.”

”இந்த எதிர் துருவங்கள் தான் ஈர்க்கும்பாங்களே?”

”அதே தான். ஆனா இதுல பியுட்டி என்ன தெரியுமா? நம்ம பையன் தான் முதல்ல காதலை சொல்லிருக்கான்”

”நிஜமாலுமாடா?”

”ஆமா”

எ”னக்கே காண்டாகுதே. இவன் பின்னாடி சுத்துனவளுகளுக்கு தெரிய வரப்ப எப்படி இருக்கும்?”

”ஐஸ்க்கே முதல்ல ஷாக் தான். யோசிக்கனும்னு சொல்லி டைம் கேட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டாளாம்.”

”அந்த கதையை அப்புறம் சொல்லு, முதல்ல அவனுக்கு எப்படி அவ மேல காதல் வந்ததுன்னு சொல்லு”

”அதுக்குன்னு தனியா ஒரு சீன்லாம் யோசிக்காத, அது பழக பழக பிடிச்சது தான்”

”பிடிக்கறது வேறடா, இனி இவ இல்லாம வாழ முடியாது தோணும்ல, அது எப்பன்னு கேட்கறேன்.”

”சொன்னான். முதல்ல சாதாரணமா பழகி, தினமும் அதிக நேரம் சேர்ந்து செலவளிச்சு, எல்லா விஷயத்தையும் சேர்ந்து செய்ய ஆரம்பிச்சு, ஒருத்தர் இன்னொருத்தர் இல்லாம எதுவும் செய்ய முடியாத மாதிரி போகவும் பையன் புரிஞ்சுகிட்டான். இனி இவ தான்னு. அதுவுமில்லாம இவனுக்கு அவ மேல காலேஜ்லயே கொஞ்சம் சாஃப்ட் கார்னர் இருந்துருக்குடா, நல்ல பொண்ணுன்னு.”

”அப்புறம் அவ ஊருக்கு போய்ட்டு, எப்ப ஒத்துகிட்டாளாம்?”

”எங்கே ஒத்துகிட்டா?”

”என்னடா? 2 பேருக்கும் கல்யாணம்னு சொல்லிட்டு எங்கே ஒத்துகிட்டான்னு கேட்கற?”

”அவ ஒத்துக்கற வரைக்கும், இவனுக்கு தாங்கலை”

”ம், அப்புறம்?”

”ஒரு வாரம் பார்த்துருக்கான். நேரா அவளை தேடி வீட்டுக்கே போய்ட்டானாம்”

”வீட்டுக்கேவா? ஏன் துரை போன்லாம் பண்ணி கேட்க மாட்டாரா?”

”என்னவோ, நேர்ல பார்க்கனும்னு தோணிருக்கு, போய்ட்டான்”

”அவங்க வீட்ல எதுவும் சொல்லலையா?”

”இவன் ஃபிரண்டுனு தெரியும். சும்மா வந்துருக்கான்னு விட்டுருக்காங்க”

”அப்புறம்”

”அவளுக்கும் ஓகே தான். ஆனா தயக்கம், குழப்பம், ஒத்து வருமான்னு”

”அப்புறம்”

”வீட்லயே வச்சு பொறுமையா பேசிருக்கான். விருப்பம் இல்லைன்னா வேண்டாம்ங்கற மாதிரி…”

”இப்படிலாம் பேச வேற கத்துகிட்டானா?”

”அப்படி கெத்தா சுத்துனவன். இறங்கி வந்து கேட்கவும், இவளால காதலை மறைக்க முடியலை.”

”வாவ்”

”கொஞ்ச நாள் லவ் ஓடிருக்கு. அவ வீட்ல தெரிய வரவும் ஒத்துக்கலை”

”ம்….”

”இவன் அவங்கப்பா, அம்மா கிட்ட சொல்லி அவ வீட்டுக்கு கூட்டி போய்ட்டான்”

”நிஜமாலுமாடா?”

”ஆமாடா”

”அவங்கப்பா எப்படிடா ஒத்துகிட்டாரு?”

”அதுலாம் நிறைய செய்ய வேண்டி இருந்துருக்கு. சாப்பிடாமா, குளிக்காம அடம் பிடிச்சுருக்கான். கலகலன்னு பளபளன்னு இருந்தவன். வீட்டுக்கு ஒரே பையன் வேற, கொஞ்சம் இறங்கி வந்துருக்காங்க. அவங்கம்மாக்கு ஐஸ்வர்யாவ முன்னமே தெரியும். பேசி பழகிருக்காங்க.”

”எப்போ?”

”இவங்க 2 பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கும் போதுலருந்து……”

”ஆக ஒருவழியா ஒத்துக்க வச்சு இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு”

”யா….. யா”

”ஆனா எனக்கு இன்னும் ஆச்சர்யம்டா, ஒரு மாதிரி முசுடா இருப்பான், ஒரு பொண்ணுக்காக இறங்கி போய் லவ்வ சொல்லி, பேசி ஒத்துக்க வச்சு, அவங்க அப்பா, அம்மாவையே போய் பொண்ணு கேட்க வச்சுருக்கான் பாரு. காதல் ஆளை அப்படியே மாத்திருது”…!

”பொண்ணுங்க கிட்ட பேச கூச்சம்ங்கறவன், பொண்ணுங்க பின்னாடி எவன் போவன்ங்கறவன்லாம் காதலிக்கற வரைக்கும் தான் அப்படி, காதல் வந்துருச்சு, எல்லாத்தையும் விட்டுட்டு தெருவில இறங்கி செய்வாங்க”.

அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்     குறள் எண்:1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

உரை: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன். (காதலியைப் பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

ஏறும் மடல் – மடலேறுதல்:  அந்தக் காலத்தில் காதலை நிருபிக்க “மடலேறுதல்” என்றொரு விஷயம் இருந்திருக்கிறது. பெண் காதலிப்பது அறிந்து அது பிடிக்காமல் அவளை வீட்டிற்குள் சிறைப்படுத்தி இருந்தால், அவள் தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தன் காதலின் உறுதியை தெரிவிக்க காதலன், பனைமர கருக்குகளினால் குதிரை உருவம் செய்து, அதன் மீதேறி பனைகருக்கு குத்த குத்த இரத்தம் சொட்ட சொட்ட கருப்பு துணியில் காதலியின் படம் வரைந்த கொடியை கையில் பிடித்த படி ஊரை வலம் வருவானாம். அதை காணும் ஊரார், அவன் படும் கஷ்டம் பொறுக்காமல் காதலியின் தந்தையிடம் பேசி சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்களாம்.

 -கதிர் ராத்

90total visits.