கதிர் குறள் – 235

0
24

புதுமைப்பித்தன்: இந்த பெயரை கேட்கறப்ப என்ன தோணுது?

அவரோட சிறுகதைகள்? எனக்கு அவரோட வாழ்க்கை அதுல இருந்த வறுமை தான் முதல்ல ஞாபகம் வருது. ஒருத்தருக்கு எழுத பிடிச்சுருக்கு. ஆனா எழுதிட்டிருந்தா மட்டும் எல்லாம் கிடைச்சுறாதுங்கற நிலைமை. எல்லாம் என்ன எதுவுமே கிடைக்காது. சொல்லப் போனா சமகாலத்துல அவருக்கு பெரிய அங்கீகாராம் கூட கிடைக்கலைன்னு தான் சொல்றாங்க. இருந்தாலும் அவர் எழுதினார். நீங்களா இருந்தா எழுதுவிங்களா? கொஞ்சம் யோசிங்க.Inline image 1

பகத்சிங் சொன்னதா கேள்விபட்டதுண்டு. உண்மையானு தெரியலை. என்ன சொன்னார்னா, நீங்க ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுனிங்கனா உங்களை கல்லால் அடிப்பாங்க. உங்க வீட்டை கொளுத்துவாங்க. உங்க குடும்பத்தை கொலை செய்ய முயற்சிப்பாங்க. உங்க வீட்டு பெண்களோட மானம் சூறையாடப்படும். இதெல்லாம் நீங்க எதிர்க்கற ஆங்கிலேயன் செய்ய மாட்டான். நீங்க யாருக்காக எதிர்க்கறீங்களோ அந்த இந்தியர்களால தான் இதெல்லாம் செய்யப்படும். ஒரு விஷயம் செய்யுங்க, ஆனா அதுக்கு நீங்க எதிர்பார்க்கற பலன் கிடைக்காதுன்னு முன்னாடியே சொன்னாங்கன்னா அந்த விஷயத்தை செய்வோமா?

அது என்னவோ? நம்ம நாட்லனு இல்லை, உலகத்துல பல இடத்துல ஒருத்தர் இருக்கற வரைக்கும் அவரோட அருமை தெரியறதில்லைன்னு சொல்றாங்க. அது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம் தான். ஆனா இதையெல்லாம் தாண்டி, நான் செய்யறதுக்கான பலன் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை, நான் செய்வேன்னு உறுதியா செய்யறவங்களுக்கு எவ்வளவு மன உறுதி இருக்கனும்? கொஞ்சம் யோசிங்க. இது மாதிரி பலன் கிடைக்காதுன்னு தெரிஞ்சும் முழுசா இறங்கி என்னென்ன வேலை செஞ்சுருக்கோம்?

ஹாலிவுட் பாலான்னு ஒருத்தர் பிளாக் எழுதிட்டு இருந்தார். முழுக்க உலக சினிமா தான். ஆனா அவர் எழுதுற காலத்துல படிக்கறதுக்கு ஆளே இல்லை. எத்தனை லைக் வருதுன்னு தொடர்ந்து பார்த்துட்டு இருக்கோமே.! யாருமே படிக்கறது இல்லைன்னு தெரிஞ்சும் மனுசன் தொடர்ந்து எழுதிருக்கார். அவர் எழுதறப்ப எதை எதிர்பார்த்து செஞ்சுருப்பார்? ஆனா உலக சினிமான்னா அவர்தான்னு பேர் வரப்ப அவர் எழுதறதையே நிறுத்தி இருந்தார். இப்ப கோடியை தாண்டி படிச்சுட்டு இருக்காங்க.

சாதாரணமா ஒரு விஷயம் செஞ்சு அதற்கான பலன் கிடைக்கலனா வேற வேலையை பார்க்க போயிருவோம். ஆனா வறுமையில குடும்ப கஷ்டத்தை தாண்டி தனக்கு பிடிச்ச துறைல புகழே கிடைக்கலன்னாலும் தொடர்ந்து போராடிட்டே இருக்கவங்க எத்தனை பேர் இருக்காங்க? அப்படி இருக்கவங்களை அவங்க நல்லதுக்கு அட்வைஸ் பன்றோம்ங்கற பேர்ல எப்படி எல்லாம் அவங்க உலகத்தை விட்டு அவரை தரதரன்னு இழுத்துட்டு வரோம்.?

அறிவுரை சொல்ற சமூகத்தை கடந்து, அசிங்கப்படுத்தற வறுமையை கடந்து, அழ வைக்கற குடும்பத்தை கடந்து, தொடர்ந்து வர தோல்விகளை கடந்து எதுவும் கிடைக்கலைங்கறப்பவும் உழைக்கறவங்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கனும்?

அதிகாரம்:புகழ்    குறள் எண்:235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது

உரை:
வாழும்போது கேடுற்ற போதிலும் மேலும் உழைத்துப் புகழ் ஈட்டி, தாம் எய்திய புகழால் சாவை வென்று இறவாது வாழ பேராற்றலுடையோரால் மட்டுமே முடியும்.

கதிர் ராத்

182total visits,1visits today