கதிர் குறள் – 236

0
28

கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க, ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சதும் முதல்ல என்னவா ஆகனும்னு ஆசைப்பட்டோம்? எப்படியும் சுத்தி இருக்கவங்க சொல்லி சொல்லி டாக்டராகனுங்கற ஆசை வந்துருக்கும், சினிமா பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல நடிகனாகனும்னு அதுலயும் நடிச்சா ஹீரோதான்னு ஆசைப்பட்டுருப்போம். அப்புறம் போலிஸ், இந்த மூணுல கண்டிப்பா குறைஞ்சது ஒரு விஷயத்தை ஆசைப்படாம இருந்துருக்க மாட்டோம். இதெல்லாம் சின்ன வயசு ஆசைகள், நிச்சயம் நிறைவேறி இருக்கனும்னு ஆசை இல்லை.

Inline image 1வளார்ந்த பிறகு, சொல்லப்போனா படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் என்னவாகனும்னு விரும்பறோம்? படிச்ச படிப்புக்கு வேலை, இல்லை அது சம்பந்தப்பட்ட தொழில், இதெல்லாம் நாம விரும்பறது, ஆனா அமையறதுன்னு ஒன்னு இருக்கே, எத்தனை பேர் பிடிக்கலைன்னாலும் கிடைச்ச வேலையா செஞ்சுட்டு இருக்கோம்? குடும்ப சூழ்நிலைக்காக அப்படி இருக்கவங்களுக்கு வேற வழி இல்லை. அதே மாதிரி எதுலேயும் ஆழமான ஆர்வம் இல்லாதவங்களயும் குறை சொல்ல முடியாது.

ஆனா சிலபேர் இருப்பாங்க, அவங்களுக்குன்னு நிரந்தரமான வேலையோ தொழிலோ இருக்காது. எதையாவது ஒண்ணு மாத்திகிட்டே இருப்பாங்க. ஒரு வேலைக்கு போவாங்க, சப்ப காரணத்தை சொல்லிட்டு நின்னுருவாங்க. ஒரு தொழில்ல நிலையா இருக்க மாட்டாங்க. நஷ்டம் வரதால இல்லை, இதைவிட இன்னொரு தொழில்ல லாபம் வருதேன்னு போவாங்க. இந்த மாதிரி திடீர் தொழில் பண்றவங்களை எல்லா ஊர்லேயும் பார்க்கலாம். ரொம்ப நாளா மூடியிருந்த கடை திடீர்னு திறந்துருக்கும். கொஞ்ச நாள்தான் ஆகி இருக்கும். திரும்ப மூடியிருக்கும்.

வேலையோ, தொழிலோ, கலையோ, கல்வியோ முழு மனசோட இறங்கனும். எவ்வளவு வேணா தோல்விகளோ அவமானமோ வரலாம். முடிஞ்ச வரை உச்சத்தை தொடுகிற வரை பின்வாங்க கூடாது. ஒரு விஷயத்துல இறங்கிட்டா முதல் இடத்துக்கு போகனும்னு சொல்லலை, பாதில ஓடிடக் கூடாது. கஷ்டமோ நஷ்டமோ முழுசா போய் பார்த்துடனும். இந்த விஷயத்தை சொல்றதுக்கு நிறைய சினிமா வசனம் இருக்கு. ஞாபகம் வரதை சொல்றேன்.

“முள்ளை பிடிச்சாலும் முழுசா பிடிக்கனும்டா”

“வாழனும், செமயா வாழ்ந்தான்டா னு சொல்ற மாதிரி வாழனும், இல்லன்னா வாழ்றதே வேஸ்ட்”

இதை திருவள்ளுவர் எப்படி சொல்றார் தெரியுமா?

அதிகாரம்:புகழ்  குறள் எண்:236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

உரை:  ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதை விடத் தோன்றாமலிருப்பது நல்லது.

-கதிர் ராத்

149total visits,1visits today