இலக்கியப் பழங்குடியினரும் கெழட்டு உச்சாப்பும்.

0
33

இலக்கியவாதிகள் ஓய்வடைதல் அல்லது ஒதுங்கிவிடுதல் என்றால் என்ன? இப்படி ஒரு கேள்வியை யாரோ கேட்கப்போகிறார் என்ற பீதியில், சில ஆசாமிகள் பதில்களைத் தேடிக்கொண்டிரு்க்கின்றனர்.

இனித்தான் ஒன்றுகூடி இலக்கியம் செய்யப்போகினமாம். இலக்கியச் சூழலில் முளைக்கும் களை எடுக்கப்போகினமாம். இதைக் கேட்டதும் சந்தோசமாகவே இருக்கிறது. அதே நேரம் இந்தியன் தாத்தாக்கள் முன் தோன்றி மறைந்தனர்.

அண்மைக் காலமாக எங்கள் ஊர்ப்பக்கங்களில், உதைப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப்போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது ஓய்வுப் பெற்ற வீரர்களுக்கிடையிலானது. அவர்களின் ஆட்டங்களை அப்போது பார்த்திராத எங்களைப் போன்றவர்களுக்கு மிக சுவாரஷ்யமானதும் கூட. அவர்களை அறிமுகப்படுத்தும்போது, அறிவிப்பாளர்கள் பயன்படுத்தும் அடைமொழிகள் மிகவும் ஆர்வமானது. நகைச்சுவையானது. அவர்களின் இன்றைய நிலையில் இந்த புகழாரங்களோடு அறிமுகம் செய்யாதுபோனால் ”இரத்த அழுத்தம்” வரவும் கூடும்.

வீரர் அண்டங்காகத்தை தெரியுமா? அவர் பல மைதானங்களில் ஆடியவர். பல செஞ்சரிகளை அடித்தவர். எப்போதும்  நாட்-அவுட் பிளேயர். துடுப்பை விசுக்கினால், அது பறந்து சென்று மரத்தில் நிற்கும் கிளிகளைக்கூட அடித்துவிடும்.
(மைதானம் – பாழ்வளவுகள், துடுப்பு- தென்னம் மட்டை,  நாட் அவுட் – எப்போதும் அவருகிட்டதான் மட்டை இருக்கோணும்.)

இன்று மைதானம் விரிந்துள்ளது. கால்களில் சீலைவைத்து கட்டுவதோ அல்லது தலையில் தொப்பியாக கோம்பை மட்டையை மாட்டுவதோ இல்லை. ஆட்டம் என்பது இன்று வேறு.

இலக்கியம் என்றால் அப்படித்தான் இங்கு நடந்தேறியது. குரு சிஷ்ய மரபு. மூத்த எழுத்தாளர் என்றால் அவர் என்ன எழுதினாலும், என்ன சொன்னாலும் சூத்தையும் வாயையும் பொத்திக்கிட்டு இருக்கனும். தலை அவர்கள் சொல்லுவதற்காக ஆட்டப்படும் ஒன்றாக மாத்திரமே இருக்கனும். அவர்கள் கெழட்டுச் சிரிப்பு சிரிக்கனும் எங்குறதுக்காக புகழ்ச்சிகளால் அக்குளுக்குத்தனும். அவர்களை சந்திக்கப்போகும்போது, கருவாடு, தேன் போன்ற இன்னோரன்ன உடமைகள் பையில இருக்கோனும்.
என்ன கொடுமை சரவணா இது. ?

இதற்கு அப்பால் இன்னுமொரு உண்மையும் இருக்கிறது. ஈழத்தில் உள்ள அனேக முதுபெரும் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் என்றால், பாட்டி வடை சுட்ட கதை தான். கவிதை என்றால், பச்சைக்கிளியெ வா வா பாட்டுத்தான். அந்தப் பழம் எண்ணச் சுமையிலிருந்து வெளியேறவே இல்லை. வாசிப்பே இல்லை என்பதை மிக எளிதில் கண்டுவிடலாம்.

இலக்கியம் குறித்தோ, கவிதை கதைகள் நாவல் குறித்தோ அவர்கள் எழுதியவை என்ன? அது எவை எவை? எனத் தேடும் ஒரு வாசகனுக்கு தெரிந்து விடும். அல்லது இதை வாசிக்கும் நீங்கள் அவைகளைத் தேடிப்பாருங்கள் அறியலாம். 50 வருசமாக,40 வருசமாக,30 வருசமாக நாங்கள் இலக்கியத்தில் பொளந்தோம், மலையில் மாடேத்தினோம் என பெருமையடிக்க மட்டும் பின்நிற்பதில்லை. அத்தனை வருடங்களும் இலக்கியத்தில் புல்லுப் புடுங்கினார்களா? இல்லை மயிர்….னார்களா? பதில் கிடைத்துவிடும்.

தமிழ் இலக்கியமும் சும்மா வானத்தப் பொத்துக்கொண்டு வரல. பல காலகட்டங்களில் பல இலக்கியப் போக்குகள், கருத்துநிலைகள் என பலவற்றைச் சந்தித்து, உரையாடி, சர்சித்துத்தான் இன்றும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

தலித் இலக்கியம், பெண்களின் எழுத்துவெளி, நொன்லீனியர், மெடாபிக்சன், புதிய யதார்த்தவியல், அந்நியமாதல், பின் காலணியம், அமைப்பியல், பின் அமைப்பியல், பினநவீனம் இப்படி இன்னும் ஏகப்பட்ட கருத்துநிலைகளும் கதையாடல்களும் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய வெளியில் நடந்தேறியே இருக்கிறது. அவை குறித்த ஏற்புகளும், எதிர்வுகளும் சர்சிப்புக்களுமாக துடிப்புடனேயே இலக்கிய வெளியிருக்கிறது.

ஆனால், இவை குறித்த எந்த வாசிப்பக்களும் இல்லாத ஒரு பழங்கூட்டத்தினர் ஈழத்தில் இன்னும் தம்மை இலக்கியவாதிகளாக சொல்லிக்கொண்டு வலம் வருகின்றனர்.

அவர்கள் கடந்த காலத்தில் அதிகமாக மூலைகளுக்குள் குறுக்குப்படுத்தனர். இடைக்கிடை ஏதாவதோரு மேடையில் தோன்றி நானிருக்கன் சின்னக்குட்டி என்று உறுமிவிட்டு இறங்கி மீண்டும் குறுக்குப்படுக்கச் சென்றுவிடுவர்.

ஒருவிசயம் என்னவென்றால், அவர்களின் எழுத்துக்களை விமர்சித்தால் முன்னுக்கு வர விரும்புறார். சுட்டுவிரல் நீட்டுகிறார். மோசமானவர். இப்பதான் எழுத வந்துபோட்டு 40 வருடமா மசிர் புடுங்கிற எங்களப் பத்தி விமர்சிக்கிறா? இப்படியான கதறல்கள். வயசுபோன (இலக்கிய வயசு) காலத்துல இப்படிப் புலம்புறது ஒன்றும் புதிய விசயமல்ல.

பெண்கள், பெண்களின் எழுத்துக்கள் குறித்த எதுவிதப் புரிதல்களுமில்லாத மிகவும் பழமையான ”சுண்ணியவாதிகள்” தான் ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் அதிகமானவர்கள். அதற்கு அவர்களின் எழுத்துக்களே சாட்சி.

இலக்கியம் என்பது இன்று ஆற்ரோரம் பதுங்கிச் சென்று, புற்களின் மேல் காலைக் கிளப்பி படுத்துக்கொண்டு, காத்து கவுட்டுக்க பூருது, நிலா சொத்தையில மூத்திரம் அடிக்குது, குருவி மூக்குல எச்சம் பீச்சியது தொட்டு நாக்குல வச்சன் சா! என்ன இனிப்பு எண்டு கிறுக்கிறதெல்லாம் இலக்கியமாக கருதி கடற்கரையில கச்சான்கொட்ட சாப்புட்டுக்கு கெடந்ததெல்லாம் அந்தக்காலம்.

இலக்கியம் குறித்து புரிந்துகொள்ளுதல் இலக்கியத்தை மாத்திரம் வாசிப்பதால் முடிவடைகிற ஒருவிசயமல்ல. பல வகையான விசயங்களையும் படிக்கனும்…. அது தேவை.

எழுத்து என்பதே விமர்சனம்தான். மாற்றாக தன்னால் சிந்திக்க முடிகிறது என்பது தான் விமர்சனத்தின் அடிப்படை. மூத்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை விமர்சிக்கக்கூடாது என்பது போன்ற ஒரு ஒழுக்கக்கோவை இலக்கியத்தில் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஒரு சட்டம் போடப்பட்டிருக்கிறதா? அப்படியானால், அந்தக்கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். நீங்கள்?

இணையம் எந்த நாட்டு எழுத்துக்களையும் ஒரு தட்டுதலில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. வாசிக்க ஆயிரம் இருக்கிறது. போங்கய்யா உங்கள் ஓலைச்சுவடிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

றியாஸ் குரானா

237total visits,1visits today