ரசகுல்லா செய்வது எப்படி?

0
82
பெங்காலி ஸ்வீட்ஸ் என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது ரசகுல்லா தான்.
குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. மேலும் இதனை எப்படி செய்வதென்று பலரும் இணையதளத்தில் தேடியிருப்பார்கள். இருப்பினும் சரியான செய்முறை கிடைத்திருக்காது. ரசகுல்லா என சொல்லும் போதே சொல்லும் போதே! நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கிறதா?
வீட்டிலேயே வெகு சுலபமாக செய்யலாம். சுவையான தரமான ரசகுல்லா செய்யும் வழிமுறைகள் கீழே:
தேவையான பொருள்கள்:

1. பால் – 1 லிட்டர்
2. சர்க்கரை – 500 கிராம்
3. எலுமிச்சை – 1
4. ரோஸ் எசன்ஸ் – 1 டீ ஸ்பூன்
செய்முறை: 
 முதலில் வெண்ணெய் நீக்காத முழுசத்து பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.  பால் நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் ஒரு எலுமிச்சை சாறை ஊற்ற வேண்டும். அப்போது பால் திரிந்து விடும். பின் அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த திரிந்த பாலை ஒரு சுத்தமான மஸ்லின் துணியில் ஊற்றி வடிகட்ட வேண்டும். அதில் மேலும் சிறிது நீர் ஊற்றி, அந்த எலுமிச்சை சாறு போகுமாறு அலசி  நீர்  முழுவதும் வெளியேறும் வரை  ஆணியில்  கட்டி தொங்க விட வேண்டும்.
 ஒரு அரைமணி நேரம் கழித்து அந்த பால் கட்டியை ( பன்னீர் ) ஒரு தட்டில் போட்டு  சப்பாத்தி மாவு போல் கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும். பின் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
 இப்போது அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரையை போட்டு அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.  இப்பொழுது அதில் பன்னீர் உருண்டைகளை போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.  பத்து நிமிடங்கள் கழித்து திறக்க வேண்டும். இப்போது பன்னீர் உருண்டைகள் நன்றாக வெந்து, ஜீராவில் ஊறி நாம்  போட்ட அளவை விட இருமடங்காக இருக்கும். இப்பொழுது அடுப்பை  அனைத்து விட்டு  ஒரு டீ ஸ்பூன் ரோஸ் எசன் ஊற்றி ஆற விட வேண்டும்.
  “சுவையான ரசகுல்லா ரெடி”.!
Related image
-சாந்தி குமார்

399total visits.