மனதில் நின்ற நாவல்கள் -18ம் நிகழ்வு

0
24

அசோக் நகர் வட்டார நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும், ‘ மனதில் நின்ற நாவல்கள் – ஒரு அறிமுகம்’ வாராந்திர தொடர் நிகழ்வில், நாளைய நிகழ்விற்கான அழைப்பிதழ்.

நம் எல்லோருடைய மனதிலும் குளத்தின் ஆழத்தில் விழுந்து விட்ட கல் போன்று, சிறு வயது காதல் ஒன்று அமைதியில் தனித்திருக்கும். அப்படியான தனது இளம்பிராய காதல் ஒன்றை பொத்திச் சுமக்கும் மனம் ஒன்றினை பற்றிய பஷீரின் சித்திரம் இந்த நாவல்..!

இதனைக் குறித்து நண்பரும் கவிஞருமான யாழிசை பச்சோந்தி உரையாட இருக்கிறார்.

பஷீரினது போன்றே எத்தனையோ வாசகர்களின் மனதில் நிலைத்திருக்கும் முதல் காதல் நினைவுகளை மீட்டுக் கொள்ள, நாளை நாம் உரையாடலாம்.

வாய்ப்பும் நேரமும் விருப்பமும் அமையப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாளைய நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, #வாசகசாலை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

187total visits.