மறுபக்கம் – பாகம் 2

0
39

ஆரம்பத்திலேயே ஒரு பக்கத்துவீட்டு கதை சொல்றேன்…
எப்போதுமே அடுத்தவீட்டு கதை என்றால் தான்
அரைகிலோ அல்வாவை  அள்ளி அப்பியதுபோல மகிழ்வோமே…
அந்த வீட்டுத்தலைவன் கூலிவேலைக்கு போவார்…
வாரக்கடைசியில் கூலிப்பணம் வாங்கியதும்…
3குழந்தைகளுக்கும் திண்பண்டம் வாங்குவார்…
அடுத்து மதுக்கடை… கொஞ்சம் குடித்துவிட்டு…
ஓரிரு பாட்டில்கள் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து…
தேவைப்படும்போது குடிப்பார்…

வீட்டில் அரிசி, பருப்பு முதல் அத்தனையும் மனைவி தான்
இரவு பகலாய் வேலை செய்து வாங்கிவருவார்…
ஒருவரின் கடின உழைப்பில்… குறைந்த ஊதியத்தில்…
5பேர் சாப்பிடுவது சிரமமான காரியம்…
அதனால் வீட்டில் வாரம் தவறாது சண்டை வரும்…

மூத்தபெண் பூப்பெய்த நேரம்…
கடன்வாங்கி சடங்கு நடத்தியதால்…
வாங்கும் சம்பளத்தில் பாதியையாவது தரச்சொல்லி
வற்புறுத்தினாள் மனைவி…
அதைக் காதிலே வாங்காத கணவன் வழக்கம் போல…
2பாட்டில்களை வாங்கி வந்து வைத்திருந்தார்…

கடுப்பான மனைவி…  அதை எடுத்து உடைக்கப்போக…
தடுத்து பிடுங்கி கொண்டுபோய்… வீட்டின் பின்புறம்…
மணல் மூட்டைக்குள் மறைத்து வைத்தார்…
அதை கவனித்த 12வயதான கடைக்குட்டிப் பையன்…
டீயில் சரக்கை கலந்து இரவுப்பணி முடித்து
தூங்கிக்கொண்டிருக்கும் அம்மாவிற்கு கொடுத்துவிட்டான்…

தூக்கக் கலக்கத்தில் டீ எனறு நம்பி குடித்து…
தூக்கம்போய் போதையான அம்மாவும்…
பாட்டிலைத்தேடி நொந்துபோன அப்பாவும்…
ஆளுக்கொரு கட்டையும் அடிதடியில் இறங்கியதை…
மரத்தின்மேல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்…
அடிதடியில் காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி மருத்துவமனை கூட்டிச்சென்றனர்…

“ஏன்டா இப்படி செஞ்ச?” என்றதற்கு…
“எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கல.
அடிச்சிட்டு சாகட்டும்னு தான் கொடுத்தேன்” என்றான்.

தினமும் நடக்கும் பெரியோர் சண்டை…
குழந்தைகள் மனதை எப்படி பாதிக்கிறது பார்த்தீர்களா???

-யாழீனி ஸ்ரீ

216total visits,1visits today