மறுபக்கம் – பாகம்-4

0
25
தலைக்கனம்…
இது எப்போதும் அவமதிப்பையே தரும்.
”தான் பெரிய பிஸ்தா… எனக்கு தெரியாததே இல்லை”
என்று கூறித்திரிபவர்கள் எப்போதும் மதிப்புடன் இருக்க முடியாது.
அவர்களிடம் சென்று ”நிறைகுடம் தளும்பாது” என்று
அறிவுரை வழங்கினால்…
”அப்படியென்றால் என்னை முட்டாள் என்று அவமதிக்கிறாயா..?
என் மீது உனக்கு பொறாமை வந்துவிட்டதா?” என்று வாதிப்பர்.

அப்படித்தான்…
அவர்… எல்லாவற்றிலும் சிறிதளவு கற்றுவிட்டு…
தானே சகலகலா வல்லவன் என்ற கர்வம் தலைக்கேறி…
தலைக்கனத்தோடு இருந்தார். அடிப்படையில் அவர்
எந்த தீயபழக்கஙகளும் இல்லாதவர்.
அவர் வயதுக்கும் தொழிலுக்கும் பிறர் தரும் மரியாதையை…
தன் மீதான பயம் என்று எண்ணிக்கொண்டார்.

மனைவி, குழந்தைகள், உற்றவர், மற்றவர் என…
ஊரே… ஏன் உலகமே அவர் சொல்படி மட்டும்
நடக்க வேண்டுமென விரும்பினார். அவர் சொல்வதில்
பெறும்பாலும் நன்மை இருப்பதாலும்,

தெய்வபக்தி சார்ந்த தொழிலாளும் அவர் சொல்லை
அனைவரும் மதித்து ஏற்றனர்.
அதனாலேயே தலைக்கனம் அதிகமானது…
அறிமுகமாகும் அனைவரிடமும் ”நான் அப்படி செய்தேன்,
இப்படி செய்தேன்” என்று சுயதம்பட்டம் அடிக்கத் தொடங்கினார்…

குழந்தைகள் வளர்ந்த பிறகு இவரது படாடோபக் கருத்து…
பிடிக்கமால் போனதால்… ”தன் பேச்சை மதிக்காதவர்களே” என்று திட்டத் தொடங்கினார்.
நாளடைவில் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும்
வாக்குவாதம் அதிகமானது… வாலிப வயதுள்ள
பிள்ளைகள் இவர் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்க முடியுமா..?
பிள்ளைகளின் வயது, எண்ணம், வளர்ப்புமுறை,
காலம் எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது என்பதை
புரிந்துக்கொள்ளாமல் முட்டாள்தனமாக இருந்துக் கொண்டு…
”தந்தைச்சொல் கேளாதவர்கள், தந்தையை மதிக்காதவர்கள்”
என்றும்… ”என் பிள்ளைகளை எனக்கெதிராய் யாரோ
திருப்பிவிட்டார்கள்” என்றும் புலம்பிக் கொண்டிருந்தார்.

நாளடைவில்…
ஊரில் யாரும் அவரை மதிப்பதில்லை.
காரணம்…
போவோர், வருவோர் ”பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார்.

சுயதம்பட்டம் அடிப்பார்.
அறுவை கேசு” என்று பட்டம் கொடுத்து விட்டனர்.
இதனால் தொழிலும் பாதிக்கப்பட்டு…
வருமானமின்றி ஒரு ரூபாய்க்கு கூட
மகளின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சமூகத்தில் மிகச்சிறந்த அந்தஸ்த்தில் இருந்தவர்…
தலைகனத்தால் இன்று இப்படி ஆகி இருப்பது வருத்தம் தான்…
கண்கெட்டபின் சூரிய உதயம் எந்தப்பக்கம் ஆனால் என்ன..???

-யாழினி ஸ்ரீ

124total visits.