மோகன் சினிமாஸ் – 10 – Heneral luna

0
31

333 ஆண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு கிடந்த பிலிப்பின்ஸ் தேசத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்த பகுதிகளை ஸ்பெயின் அமெரிக்காவிற்கு விற்றுவிடுகிறது. அந்த பகுதிகளை அமெரிக்கா, புதிய காலனியாக உருவாக்கி “REVOLUTION PHILIPINES” என அறிவிக்கிறது. 1898 ஆண்டின் பிற்பகுதியில் கிளர்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட “PHILLIPHINES REVOLUTION ARMY” -ன் Gen. ANTONIO LUNA வின் சில உண்மை பக்கங்கள். வரலாற்றிலிருந்து…

இந்த புரட்சியார்கள் படை அமெரிக்காவை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற பகிரங்கமாக அறிவிக்கிறது. வெளிப்படையாக அந்த நாட்டிலிருந்து வெளியேறினாலும் மக்களை திசைத்திருப்ப ஸ்பெயின் மீது தாக்குதல் நடத்துகிறது அமெரிக்கா. மேலும் அவர்கள் வசமிருந்த பகுதிகளை தன்வசமாக்குகிறது. அதன்பின் இவர்களின் மிக முக்கிய நகரங்கள் மனிலா உட்பட அமெரிக்கா அதன் வசமாக்கி கொள்கிறது.

“நாம் விரும்பியவற்றை பாதுகாத்து பெறுவதல்ல சுதந்திரம். நாம் மற்றும் நம்மை விரும்பியவற்றையெல்லாம் விலையாக தந்து பெறுவதே உண்மையான சுதந்திரம்” – எனும் கோட்பாடுடைய ஜெனரலிடம் நாட்டின் பாதுகாப்பும் சுதந்திரமும் கிட்டத்தட்ட முழுதும் பறிபோகபோகும் கடைசி நிமிடங்களில், முழு அதிகாரமும் தந்து தமது பகுதிகளை மீட்க அரசு ஆணை பிறப்பிக்கிறது.

வெறும் நெருக்கடி மற்றும் அதிகாரத்தின் சூழலிலே இருந்தாலும் உலகில் ஈரம் இல்லாதவன் என்று எவனுமில்லை. அதை உணராதவன் மட்டுமேது இருக்கலாம் என்பதற்கான மிக சிறந்த உதாரணம். அவன் தன் காதலியுடன் தங்குமந்த இரவு அவர்களுக்கிடையேயான சம்பாசனைகள்.

தனது அதிகாரமெனும் நாக்கை சுழற்றி அமெரிக்கா ருசித்தது வெறும் நாடுகள் மட்டுமின்றி, அவர்களது பழமையான வரலாறுகளும் பண்டைய நாகரிகங்களும் அடங்கும். அதில் அவர்களுக்குள்ளே பிரிவினை எனும் நின்று கொல்லும் கொடும் விஷத்தை பரப்பி முறையற்ற வழிகள் அனைத்தும் பயன்படுத்தி தனதாக்கி கொள்ளும் வித்தையில் கரைகண்டவர்களிடம், இவர்களை எதிர்க்கும் ஓரே வழியிலும் அதற்கான இடையூறுகளும் தடைகற்களும் குவிந்திருந்தாலும் அதை மீறி முன்னேறும் HENERAL LUNA வின் முறுக்கேறிய திமிரை தொடக்கம் முதல் அவர் அதே அளவில் கடைபிடித்த விதம்….

அந்நாட்டின் கவர்னர் தவிர லூனாவின் முன் நின்றே பேசும் சூழலில் தன்னை தனது இருப்பிடத்திற்கு சந்திக்க வரும் தனது தாயிடம் இவர் நின்று கொண்டே பேசும் காட்சியில், அவரை ஒரு நாற்காலியில் அமரவைத்து தங்களது பழங்கதைகள் பேசும் காட்சியில் இவரது பால்யகால வாழ்கையை ஓரே ஷாட்டில் இரு நிமிடங்களில் காட்டிய விதம் நிச்சயம் வியப்பிற்குரியது.

விடுதலைக்கு முன் நம்மை விட பிரிவினைகளில் அதிகம் வேறுபட்ட நாட்டில் அனைவரையும் அரவணைத்து அமெரிக்கா எனும் மிகபெரும் சக்தியை அடக்க முயன்ற தனிமனித கதையின் கடைசி பதினைந்து நிமிடங்கள் நிச்சயம் உங்களால் தேடஇயலாது தொலைத்த மனங்களை……

 

இப்படத்திற்கான ட்ரைலரை காண :

 

 

259total visits,1visits today