மோகன் சினிமாஸ்-14- 11:14 (2003)

0
16

இரவு நேரம் ஆள்ஆரவமட்டற்ற சாலையில் செல்லும் காரில் செல்போன் பேசியபடியே நபர் வண்டியை செலுத்தும் நேரம் 11.13 மிதமான போதையில் அவனது உரையாடல் அடுத்த அரை நிமிடத்திற்கும் நீள செல்போன் அணைத்து பாதையில் கவனம் செலுத்தும் நேரம் காரின் எலக்ட்ரானிக் கடிகாரம் 11.14 க்கு மாறிய வினாடி காரின் பானேட்டின் மீது படாரென ஏதோ பொருள் விழ அதிர்ச்சியில் வாகனத்தை சுதாரித்து வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில் நிறுத்திய கணம் கண்ணில்படும் அறிவிப்பு பலகை மான் சாலையை கடக்கும் பகுதி வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட மேலும் அதிர்ச்சியுடனே மெதுவாக கிழிறங்கி வாகனத்தின் மறுபுறம் சென்று பார்ப்பவன் முழுதுமாக நிலைக்குலைகிறான் காரணம் அங்கே விழுந்து கிடந்தது மானல்ல மனிதன்.

தன்னை சற்றே திடப்படுத்திகொண்டே அவனை எழுப்ப முயல முகம் முழுக்க சிதைந்த சடலத்தை கண்டவுடன் முழுவதும் உறைந்து போனவனுக்கு தூரத்தில் தெரியும் வாகனத்தின் ஒளி மேலும் கிலியை கிளப்ப அவசரமாக உடலை வாகனத்தை ஒட்டி மறைக்க  எதிர்பார்த்தபடியே அந்த வாகனம் முன்புறம் சேதமடைந்த இந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி மான் கடந்து சென்றதாக உரையாட முயல இவனது பதட்டமான நடவடிக்கையால் 911 எமெர்ஜென்சிக்கு இவன்முன்பே அழைத்தபடியே அந்த வாகனத்தில் வந்த பெண் கடக்க, அதிர்ச்சியில் எப்படியும் இன்னும் சில நிமிடங்களில் போலீஸ் வாகனம் வருவது உறுதியானதால் வேகமாக தனது வாகனத்தின் பின்புறம் அந்த உடலை மறைக்கமுயன்று இயலாமல் பெரும் சிரமத்தினூடே டிக்கியினுள் துருத்தி அவசரமாக வாகனத்தை கிளப்ப முயன்ற நொடி போலீஸ் வாகனம் தன்னருகே சைரன் ஒலியுடன் நிற்க வாழ்வின் பெரும் அபாயத்தை சந்தித்த மனதுடன் வாகனத்திலிருந்து தன்னை நோக்கி வரும் காவலரை சந்திக்க ஆயத்தமாகிறான்.

மான் தான்  சாலையை கடந்து சென்றதாகவும் அதற்கும் தனக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லையெனவும் வாகனம் மட்டுமே சிறிது சேதமடைந்த தாக கூறவும் காவலர் வாகனத்தின் பதிவு மற்றும் ஓட்டுனர் உரிமம் கேட்க்க வாகன பதிவு மட்டுமே இருப்பதாக காவலரிடம் கொடுக்க காவலர் அவனை வாகனத்தில் இருந்து இறங்கி பின்புறம் வருமாறு அழைக்க தனது முழு வாழ்வும் இந்த கணமே எந்த பிழையும் இளைக்காமலே முடிவுக்கு வந்ததாக நடக்க சில பல கேள்விகளுடன் காவலரிடம் விடைபெறும் நொடியில் நிறுத்தப்படுகிறான்.

சென்றவன் காரணமறிய நின்று காவலரின் முகத்தை பார்க்க அதிர்ந்த பார்வையுடன் அவரது பார்வைபோன பகுதியை இவன் காண காவலரின் பார்வை அவனது காரின் டிக்கி பகுதியில் ஒட்டியுள்ள ரத்தத்தின் மீது…

மேற்கூறிய காட்சிகள் அனைத்தும் ஒன்றரை மணிநேர படத்தில் முதல் நான்கு நிமிடம் மட்டுமே இந்த நான்கு நிமிட சிறு அதிர்வையும் அப்படியே பார்வையாளருக்கு கடத்திய அதிவேக திரைக்கதை படத்தின் இறுதி நிமிடம் வரை தொடர்கிறது.

இந்த விபத்து அதை ஒட்டிய மேலும் நான்கு கிளை கதைகள் இந்த ஐந்து கதைகளும் சந்திக்கும் புள்ளி இந்த விபத்துக்கான காரணம் புரிபடும் இடம், ஐந்தாவது கிளை கதை தொடங்கும் நிமிடம் வரை கதையின் போக்கை யூகிக்க இயலா வண்ணம் அமையபெற்ற திரைக்கதை. விபத்து நடந்த சரியான நேரத்தில் இருந்து அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு முந்தய சம்பவங்களே ஏனைய நான்கு கிளை கதைகளுக்கும் என அமையப்பெற்ற மிக துல்லிய திரைக்கதை.

-மோகன் பிரபு

163total visits,1visits today