மோகன் சினிமாஸ்- 16-Nocturnal Animals (2016)

0
19

WHEN YOU LOVE SOMEONE YOU CAN’T JUST THROW IT AWAY.

உங்களுக்கு நெருக்கமான எழுத்தாளருடைய புத்தகத்தின் முதல் பிரதியை ஒரு வீக்கெண்டில் தனிமையில் வாசிக்க துவங்குகிறீர்கள். அதன் முதல் அத்தியாயமே உங்களை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தினால், தொடர்ந்து வாசிப்பீர்களா? அல்லது மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு சிறிது கால இடைவெளிக்கு பின் தொடர்வீர்களா?

இந்த கதையில் நாயகி பாத்திரம் இருவது ஆண்டுகளுக்கு முன் பிரிந்த  தனது முன்னாள் கணவர். அவர் எழுதி வெளியீட்டுக்கு தயாராக உள்ள புத்தகத்தின் முதல் பிரதியை இவருக்கு அனுப்புகிறார். தனது இந்நாள் கணவரும் அலுவல் தொடர்பாக வெளியூர் சென்றுவிடுகிறார். மகளும் வார விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் சென்றுவிட, தனிமையில் அந்த புத்தகத்தை வாசிக்க துவங்குகிறார்.

நாம நினைத்தது போல அந்த கதையில் தனது முன்னாள் கணவர், மனைவியாக இவர், மற்றும் தனது மகள் பாத்திரங்களாக திரையில் வருகிறார்கள். அதில் சுவாரசியம் அந்த கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பார்வையாளனுக்கு என்ன உணர்வை கொடுக்குமோ? அதே உணர்வை அந்த நாயகியும் வெளிப்படுத்துவது, ஒரு கதையை படிக்கும் வாசகனின் அந்த நொடி “REACTION” நான் இதுவரை திரையில் பார்த்ததாக நினைவில்லை. அதும் முழு கதைக்கும் கதையின் ஒவ்வொரு திருப்பதிற்க்கும் அந்த புத்தகத்தை வாசிக்கும் நாயகியாக “SUSAN MORROW” பாத்திரத்தில் வரும் “AMY ADAMS”   உடல்மொழி அட்டகாசம்.

தற்போதைய கணவர் மற்றும் மகளுடனான AT PRESENT கதை. தனது முதல் கணவருடனான அறிமுகம், காதல் பூத்த தருணங்கள்,  அவர்களின் பிரிவு என போகும் பழைய கதை. முன்னால் கணவரின் புத்தகத்தில் இவர் படிக்கும் கதை என இந்த மூன்று கதைகளும் அடுத்தடுத்து வரும்படியான துளியும் குழப்பமில்லாத திரைக்கதை.

இவ்வாறு அடுத்தடுத்து வரும் இரண்டு மூன்று கதைகள் கொண்ட படங்களில் அந்த கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக அதன் தொடர்ச்சி விடுபடாமலே வந்தாலும் பெரும்பாலும் பார்வையாளனை குழப்பாத வகையில் அமைவது வெகுசொற்பமே. ஆனால் இந்த படத்தில் நாயகி புத்தகத்தில் படிக்கும் கதை மற்றும் இந்நாள் கணவன் & மகளுடனான கதைகள் மட்டுமே அதன் தொடர்ச்சி விடுபடாமல் அமையப்பெற்றிருக்கும். ஏனெனில் அவை தற்பொழுது நிகழுபவை.

தனது முன்னால் கணவனுடனான கதை அவ்வாறு தொடர்ச்சியாக அமையாததற்கு காரணம். நமது பழைய எந்த சம்பவங்களை நினைத்தாலும் அவை நமக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் இது இது நடந்ததென கோர்வையாக வராது. அதே போல இந்த கதை மட்டும் நாயகியின் நினைவடுக்கில் இருந்து வெளிப்படுவதால் அவையும் தொடர்ச்சியாக வராது.

இருப்பினும் இந்த மூன்று கதைகளில் பெரும்பான்மை பார்வையாளனை கவர்ந்தது நாயகியின் முன்னால் கணவருடனான கதையே. காட்சிகளில் தொடர்பின்மை இருப்பினும் எந்த இடத்திலும் நம் முகத்தில் குழப்ப ரேகை உருவாகாமல் செய்தது எடிட்டிங்.

இவரது முன்னாள் கணவனுடனான காதல் அத்தியாயங்களே நாம் இளைப்பாறும் பூந்தோட்டம். ஏனெனில் அவர் புத்தகத்தில் படிக்கும் கதை நம்மை வரட்சியான பொட்டல் காட்டில் திகிலுடன் அலையசெய்யும். “JAKE GYLLENHAAL” அமியின் முன்னால் கணவனாகவும், அந்த புத்தகத்தின் நாயகன் பாத்திரத்திலும் பிரமாதபடுத்தியுள்ளார்.

மோகன் பிரபு

496total visits,6visits today