நிசப்தம் – யாருக்காக?

0
487

இது குடும்பத்திற்காக, பெண்களுக்காக, ஆண்களுக்காக, இளைஞர் இளைஞி-களுக்காக, அரசியல் சார்ந்தவர்களுக்காக, அடிதடி, காமெடி விரும்பிகளுக்காக என்று தனித்தனியே வகைப்படுத்தப்படும் திரைப்படம் அல்ல…

உணர்வுள்ள ஒவ்வொரு மனிதரும் பார்க்க கூடிய திரைப்படம் “நிசப்தம்”…

ஏதோ ஒரு உறவுமுறையில், ஓர் பெண் குழந்தை ஒவ்வொரு குடும்பங்களிலும் இருக்கும்… மகளாக, தங்கையாக, அண்ணன் – அக்கா – தங்கை – பெரியப்பா – சித்தப்பா – மாமா – தோழன் – தோழியின் மகள்களாக ஓர் பெண் குழந்தை மீது நம் அன்பு இருக்கும்…

அத்தகைய வகையில் ஓர் 8 வயது சிறுமி மற்றும் அவள் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் பொறுப்புள்ள இதர பாத்திரங்களின் வாழ்வியல் மூலமாக ” மனித நேயம் மற்றும் மனித உரிமையை” அழுத்தமாக உணர்த்தும் இத்திரைப்படம் அனைவருக்கும் பொதுவானதே…

இத்திரைப்படம் கண்டிப்பாக அனைத்து தரப்பினரின் இதயத்துள் நுழைந்து சற்று சிந்திக்க வைக்கும். ஏனென்றால் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ” பூமி “… பூமியை பெண்ணிற்க்கு ஒப்பிடுதல் வழக்கம்.. அவ்வகையில் பூமியை அழிப்பதும் பெண்ணை சிதைப்பதும் நம் வாழும் வாழக்கையையே கேள்வி குறியாக்கி விடும் என்பதை உணர செய்வதே இத்திரைப்படத்தின் களம்…

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார்…

இப்படத்தை திருமதி. ஏஞ்சலின் டாவின்ஸி…..

திருமதி.க்ருப்பா ஆன் பீட்டர், திருமதி. ஜெயரதி லாரன்ஸ், திருமதி.ப்ரச்சி சுக்லா, திருமதி.வளர மதன் அவர்களுடன் பெண்களாக நின்று தமிழ் திரைப்படத்துறையில் இப்படத்தை தயாரித்திருப்பது சிறப்பம்சம்…

“நிசப்தம்” – கொஞ்சம் சப்தமாகவே இச்சமூகத்தின் பொறுப்புகளை மக்களுக்கு எடுத்துக்காட்டும் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா கதாப்பாத்திரங்களையும் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மட்டுமே சித்தரிக்கும் இந்த நிசப்தம், ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது பெற்றோரின் பங்காக மட்டுமல்லாமல் சமூகத்தின் பங்காக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அது அச்சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொரு குடிமகனின் பங்கு. அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அரசியல்வாதியாகவோ, போலீஸாகவோ, வக்கீலாகவோ, எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவனாகவோ.. யாராக வேண்டுமானாலும்.. நம் கண்முன் இருக்கும் ஒவ்வொரு குழந்தையை  வளர்த்தெடுப்பது அந்தக் குழந்தையின் முன் தோன்றும் ஒவ்வொருவரின் கடமை… முக்கியமாக குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது சட்டத்தின் கடமை…

குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமே குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற காலம் எல்லாம் போய்விட்டது… சமூக சூழலுக்கேற்ப அதை இந்தச் சமூகத்தின் அங்கமான அனைவரும் உணர  வேண்டிய தருணம் இது. பூமி போன்ற ஒரு கதாப்பாத்திரம் மூலம் “நிசப்தம்” அதைக் கொஞ்சம் சத்தமாகவே எடுத்துரைக்கிறது.

Artist’s :

Ajay

Abhinaya

Baby Sathanya

Kishore

Ramakrishna

A.Venkatesh

Ruthu

Hamsa

Palani

Kushi

Nitin

Venkatesh

Master Vismay

Master vasisht

Technicians & Production:

Written & directed : michael arun

Cinematography : S.J.Star

Music : Shawn jazeel

Editing : Lawrence Kishore

Art : John britto

Lyrics : Na. Muthukumar

Choreography : Shankar

Sound effects : C.Sethu

Audiography : Yuvaraj

Designs : Shabeer

Pro : Yuvaraj

Production executives : Shankar.G

– B.J.Anilkumar

Co-producers : krupa anne peter – Jayarathy Lawrence – Prachi Shukla – Valar mathan – Perumal

Produced by: Angelin Davenci

Production house : Miracle Pictures

ஞாயிறு(29/01/17) அன்று நடைப்பெற்ற ஆடியோ வெளியீட்டு நிகழ்வின் சிறு தொகுப்பு

1019total visits,2visits today