வெளியாகிய டாப்ஸியின் ரகசியம்

0
31
 

த்ரிஷா. காஜல்அகர்வால், ஸ்ரேயா போன்றவர்கள் பாலிவுட் சென்று வெற்றிபெற முடியாமல் திரும்பினர். ஆனால் அங்கு தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் டாப்ஸி. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்வதுடன் அங்குள்ள ஹீரோக் களுக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைத்தால் நீடித்திருக்க முடியும் என்ற டெக்னிக்கை தெரிந்து வைத்திருக்கிறார் டாப்ஸி. 1997ம் ஆண்டு சல்மான்கான், இரட்டை வேடத்தில் நடித்த ‘ஜூட்வா’ படத்தின் 2ம் பாகத்தில் தற்போது டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறார்.

சல்மான்கான் ஏற்று நடித்த வேடத்தை தற்போது வருண்தவான் ஏற்றிருக்கிறார். இதேபடத்தில் ஜாகுலின் பெர்னான்டஸ் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். டாப்ஸிக்கும், ஜாகுலினுக்கும் அடிக்கடி படப்பிடிப்பில் தகராறு நடந்து வருகிறது. சக நடிகையுடன் மோதலில் ஈடுபடும் டாப்ஸி, பெரிய ஹீரோக்களை புகழ்ந்து பேசி அவர்களிடம் நல்லபெயர் சம்பாதித்துக் கொள்கிறார்.

‘ஜூட்வா 2, படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் நடிக்க உள்ளார். இது தெரிந்ததும் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கும் டாப்ஸி, ‘இப்படத்தின் முதல்பாகத்தில் சல்மான்கான் நடித் திருந்தது எல்லோரையும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்தில் அவரது பாத்திரம் முக்கியத்து வம் வாய்ந்தது. சல்மான்கான் படப்பிடிப்புக்கும் வரும் நாளையும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காகவும் பரவசத்துடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

743total visits.