பாலின கல்வி – தேவையின் அவசியம்

0
108
Hand writing with chalk sex education concept

எனது சிறு வயதில் விளம்பரங்களை அதிகம் பார்ப்பேன். அதில் வரும் அனைத்து பொருட்களும் அதன் பயன்பாடும் தெரிந்திருந்த எனக்கு நாப்கினின் அறிமுகமும் பயன்பாடும் தெரியவில்லை. அதனை தாத்தாவிடம் கேட்டேன். அது உனக்கு தேவை இல்லை என்றார். அத்தை,பாட்டியிடம் கேட்டேன். எதோ கேட்க கூடாததை கேட்டது போல் என்னை குற்ற உணர்வுக்கு தள்ளி விட்டனர். அதில் தொடங்கிய பெண்களை பற்றிய ஒரு ஆர்வம் கல்லூரி காலம் வரை இருந்துக் கொண்டே இருந்தது. ஏனெனில், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில்  படித்தேன். என் சாபக் கேடு தேர்ந்தேடுத்த டியுசனிலும் ஆண்மக்கள் மட்டுமே. முதலில், ஒரு பாலர் பள்ளியை இரு பாலர் பள்ளியாக மாற்றியமைப்பதே பாலியல் கல்வியின் முதல் நகர்வாக இருக்கும். இரு பாலர் படிக்கும் கல்லூரியில் இணைந்து தோழிகள் மூலமே தெர்ந்துக் கொண்டேன்.

அனைத்தையும் காதலாகவே பார்க்க கற்றுக் கொடுத்த சினிமாவின் பிடியில் இருந்து நானும் தப்பவில்லை. எது நட்பு? எது காதல்? என்ற புரிதலின்றி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால் அப்படி ஒன்றும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தப்பித்து விட்டேன். எனது அனுபவங்களே இன்று குழந்தைகளை பாலியம் வன்புணர்வு செய்பவர்கள், ஒரு தலை காதல் வாசிகள், தெருக்களிலும் பேருந்துகளிலும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் கூட்டங்கள் என இவர்களின் அனுபவங்களும் ஒன்றாகவே இருக்கும். ஆண்பிள்ளைகள் மட்டுமே இது மாதிரியான அனுபவம் இருக்கிறது என்பது உண்மை அல்ல, சொல்லப்போனால், ஆண்களை விட  பெண்களே தனது எதிர்பாலினத்தை பற்றிய அறிவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் தான் இல்லை.

முதல், எதிர்ப்பாலின நட்பே அதிகம் காதலாவதற்கு எதிர்பாலினத்தை  பற்றிய பிரமிப்புகளே காரணம். ஒரு கட்டடத்தில், மற்ற எதிர்பாலினத்தின் மீதான தொடர்பு, குடும்ப சூழ்நிலை, துணையின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவை காதலை அழிவிற்கு இட்டு செல்கின்றன. அதற்குள் உடல் ரீதியான தொடர்புகள் பெரும்பாலும் ஏற்பட்டு விடுகின்றன. நாம் இங்கு தான் கவனத்தை குவிக்க வேண்டும். எதிர்பாலினத்தின் மீதான ஆர்வம் அதனை அனுபவிப்பதிலே முற்று பெறுவதாக மனம் நம்புகிறது.அது தான் இயற்கை. காமம் இல்லாத காதல் என்பதெல்லாம் முட்டாள் தனத்தின் உச்சம். அது இயற்கைக்கு மாறான செயல். பருவ வயதில் உடல் ரீதியாக நெருங்குபவர்களை தண்டிப்பது, கேலி செய்வது என்பதே பெருங்குற்றம். இவை அனைத்துக்கும் தீர்வாக பாலியல் கல்வியே இருக்கும்.

பாலியல் கல்வி பற்றிய கருத்துகளை பொது வெளியில் பகிர்வதே அச்சமூட்டக் கூடிய அவமானமான ஒன்றாக மாறி உள்ளது. நமது வாழ்வியலுக்கான அடிப்படை உரிமைகளை கற்றுக் கொடுக்காத கல்வி நமக்கு எதற்கு என்பதை யோசிக்கக வேண்டும். பலரின் வாதம், இப்பொழுதே இப்படி இருக்கிறது. இதில், பாலியல் கல்வி என்று அனைத்தையும் சொல்லிக் கொடுத்தால் இன்னும் தவறுகள் அதிகமாகி விடாதா? என்கிறார்கள். நாம் மறைத்து வைத்திருப்பதால் மட்டுமே நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன.

ஏனெனில், இந்த சமுகம் காமத்தினால் ஆனது. காமத்திற்காக காமத்தினால் இந்த சமூகம் இயங்குகிறது. இயக்கப்படுகிறது.

இது தான் உண்மை.ஆனால், நமது கலாச்சார பின்புலங்கள் மற்றும் உலகமயமாக்கலின் விளைவுகள் மூலம் அது மலுங்கடிக்கப்படுகிறது. சினிமாவின் கவர்ச்சி காட்சிகளும், இணையத்தில் ஆபாச காட்சிகளுமே தான் அதிகம் விரும்பி பார்க்கபடக் கூடியதாக இருக்கிறது. கிசுகிசுக்கள் துவங்கி நமது நினைவுகள் வரை அனைத்தும் பாலியல் ரீதியாகவே இருக்கின்றன. அதிக  வேலை , பண ரீதியான பொருளாதாரம், நகர வாழ்க்கை நெருக்கடிகள் விரைவில் காமத்திற்கான தேவையை அதிகரிக்கிறது. இதில் தான் பாலியல் வறட்சி ஏற்படுகிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தான் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.

ஒன்றாம் வகுப்பில் இருந்தே பாலியல் கல்வி துவங்கப்பட்டாக வேண்டும். அது, மற்றவர்களின் உடலுறுப்புகளை புரிந்துக் கொள்வதில் துவங்கி, எப்படி மற்றவர்களிடம் பேச வேண்டும், பருவம் அடைதலின் முக்கியம் அதில் ஏற்படும் மாற்றங்கள், காதலின் முக்கியத்துவம், உடலுறவின் முக்கியத்துவம், அதில் பாதுகாப்பு முறைகள், பாலியல் நோய்கள் பற்றிய அறிமுகங்கள், சமூகத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, அதில் இருந்து தப்பிப்பதற்கான தற்காப்பு கலைகள் இவை யாவும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

படிப்படியாக, ஒவ்வொரு வகுப்பிலும் தேவையை பொருத்து கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மன நல ஆலோசகர்கள் கட்டாயம் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் இருக்கும் தகுதியை ஒரு பொருட்டாகவே கொள்ளக் கூடாது. கட்டாயமாக, அனைத்து ஆசிரியர்களும் மன நல ஆலோசகராக அல்லது தற்காப்பு கலை தெரிந்தவராக இருக்க வேண்டும்.

இது சமுகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் ஐயம்  இல்லை. காமத்தை ஒரு மறைக்க வேண்டிய பொருளாக கொள்ளாமல், அதனை பற்றி பேசுவதும் வெளிப்படுத்துவதும் அவமானகரமான ஒன்றாக கருதுவதை நாம் நிறுத்திக் கொள்வோம். உடல்கள் மீதான ஆர்வம் கட்டாயமாக அழியாது. ஆனால், குறையும். பருவ வயதில் காமம் தேடும் காதல்களை இனம் கண்டுக் கொள்வர். ஆண் எனும் கர்வம் முற்றிலும் அழியும். எதிர்பாளினத்தை கவருவதற்கு முயலுவது குறையும். பாலியல் குற்றங்கள் குறையும். மார்பு அளவு சிறியதாக இருப்பதற்கு, கலராக இல்லை என்பதற்கு குடி அதிகம் இல்லை என்பதர்கெல்லாம் கேலி செய்யப்படும் பெண் பிள்ளைகள் இனி கேலி செய்யப்பட மாட்டார்கள். ஆண் குறி சிறியதாக் இருக்கிறது, பெண்களை கவர முடியவில்லை போன்ற காரணத்திற்காக எல்லாம் மன உளைச்சல் அடையும் மாணவர்களின் எண்ணிக்கை  குறையும்.

மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை,  இருப்பிடம் போன்று காதலும் காமமும் அவசியம் என்ற இயற்கையை மருதலித்து விட்டு நம் சமூகம் முன்னேறி விடப் போவதில்லை. இந்த யதார்த்த வாழ்க்கையில் ஏற்படும் அசவுகரியங்களுக்காக நாம் காதலையும் காமத்தையும் கடந்து விட முடியாது. சிற்றின்பம் என்று நகைக்கப்படும் அளவிற்கு காமம் குறைந்ததும் இல்லை. காமத்தின் உச்ச நிலைக்கு நிகரான பேரின்பம் உலகத்தில் வேறு எதிலும் இருப்பது இல்லை என்பதே உண்மை. நான் அந்த இன்பத்தை அடையவில்லை எனினும், அதன் பண்புகள் அதன் முக்கியத்துவங்கள் அறிந்து இருக்க முடிகிறது அவ்வளவே.

இன்னும் பல பாலியல் சந்தேகங்களுக்கு நானும் இணையத்தையே நாடி இருக்க வேண்டி இருக்கிறது. அதில் இருப்பதெல்லாம் ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு உண்மையாகி விடாது அல்லவா.  இச்சமூகம் வேர்களை கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் நிகழும் நோய்களுக்கு அவ்வப் பொழுது மருத்துவம் பார்ப்பது என்பது வேறு. அதன் வேருக்கே மருத்துவம் அழிப்பது என்பத வேறு. நாம் எதில் மருத்துவம் அளிக்க வேண்டும் என்று நாம் தான் முடிவும் செய்ய வேண்டும்.

-இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீ.

356total visits.