சர்க்கரை நோயை தடுக்க வழி

0
58

சர்க்கரை  நோய்  என்பது, இரத்தத்தில்  சர்க்கரையின் அளவு  வழக்கத்தை  விட  அதிகமான  அளவில்  இருத்தல்  ஆகும்.  இந்த  அதிக அளவில்  உள்ள சர்க்கரை  உடம்பில் உள்ள  பல்வேறு பகுதிகளில்  பாதிப்பை ஏற்படுத்தி  அவற்றை  கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கச் செய்யும்.  பாதிப்பு  அதிகமாகும்  போது  இருதயம், சிறுநீரகம், மூளை நரம்புகள், இரத்த ஓட்டம்  போன்ற  அத்தியாவசிய  உறுப்புகள்  கெட்டுப்  போக ஆரம்பிக்கிறது.  இதனால்  நாளுக்கு நாள்  மருந்துக்களின் தேவை அதிகரித்து  மருத்துவச்  செலவுகள்   அதிகமாகிறது.  இது நேரடியாக  நோயாளியின் குடும்பத்தில்  பொருளாதார பாதிப்பையும்,  உடல்  நிலை  சரியில்லை  காரணத்தினால்  வேலைக்கு  செல்லும்  நாட்கள்  குறைந்து  உற்பத்தி  குறைந்து  அதனால்  வளர்ச்சி  விகிதம் குறைந்து  நாட்டிற்கும்  மறைமுக  பாதிப்பை  ஏற்படுத்தும்.

இத்தகைய  பொருளாதார  , சமூக  வளர்ச்சியில்  பாதிப்பை  ஏற்படுத்தும்  சர்க்கரை  நோயானது நடுத்தர  மற்றும்  குறைந்த   வருமானம்   உடைய  மக்களையே  அதிகம்  பாதிக்கின்றது. இதனால்  இது தொற்றா நோய்களைத் தடுக்கும்  பிரிவில்  முதலிடத்தைப்  பிடித்துள்ளது. Non communicable  diseases  -goals  by 2030

சர்க்கரை  நோயினால் ஏற்படும்  மூப்பிற்கு முன்  வரும்   மரணங்களை  மூன்றில்  ஒரு  பங்கு  ஆக  குறைக்க  வழி வகை  செய்ய  வேண்டும்  என்பதே  தலையாய  கொள்கையாக பேணப்பட்டுள்ளது.
தமிழ்நாடு  சுகாதார  திட்டத்தில்  இந்த NCD திட்டம்  அனைத்து  ஆரம்ப  சுகாதார நிலையங்கள்,  அரசு  மருத்துவமனைகள், மற்றும்  மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைகளில்  உலக  சுகாதார  நிறுவனத்தின்  உதவியுடன்  செயல்படுத்தப்பட்டு  வருகிறது.  இந்த  திட்டத்தில்  30 வயதுக்கு  மேற்பட்ட  அனைவருக்கும், நோயாளியோ அல்லது  நோயாளியின்  உறவினருக்கு  வருடத்திற்கு  ஒரு  முறை  இரத்தத்தில்  உள்ள  சர்க்கரை, கொழுப்பின் அளவு,  உடல்  எடை  ,உயரம், இரத்த அழுத்தம்  பெண்களுக்கு   மார்பக  மற்றும்  கர்ப்பப் பை வாய்  புற்றுநோய் பரிசோதனை  போன்றவை இலவசமாக  மேற்கொள்ளப்படுகிறது.

சர்க்கரை  வியாதி  கண்டறியப்பட்டால்  குறிப்பேட்டில்  பதிந்து  கொண்டு  மாதம்  ஒரு முறை  இலவச  மருந்துகள்  வழங்கப்பட்டு,  நோயாளியின்  உறவினர்கள்  பரிசோதனை  செய்து  கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.
இதனால்  சர்க்கரை  வியாதி  பற்றிய  விழிப்புணர்வு  அனைவருக்கும்  அவசியம்.

கீழ்க்கண்டவை  சர்க்கரை  நோயை   வரும்  முன்  வெல்வதற்கு  உதவி  புரிகின்றன.
1. காலை  உணவு  கண்டிப்பாக  மேற்கொள்ள வேண்டும்
2 நிறைய  நீர்  அருந்துதல்
3 சீரான  தூக்கம்
4 பழங்கள்  காய்கறிகள்  மற்றும்  கீரை வகைகள்  எடுத்துக்  கொள்ளுதல்
5. உடற்பயிற்சி  மற்றும்  உடல்  எடையை  கட்டுக்குள்  வைத்திருத்தல்.

-Dr.இராதாகுமார் M.B.B.S., M.D., D.M

327total visits,1visits today