சர்க்கரை நோய் சந்தேகமா?

0
123
Senior Hispanic couple working on computer at home

HbA1c- Glycosalated Haemoglobin

பொதுவாக கொண்டாட்டங்களின் இன்று ஒரு நாள் தானே என்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சாப்பிடும் போதும், அல்லது ஏகாதசி, அமாவாசை போன்ற நாட்களில் இருக்கும் விரதங்களின் போதும், நமது உடலில் உள்ள சர்க்கரை அளவு ஒரே சீராக  கணையத்தில் உற்பத்தி ஆகும் இரு ஹார்மோன்களின் மூலம் ஒரே சீராக பராமரிக்கப் படுகிறது.

அதிக அளவு சாப்பிடும் போது, உணவின் அடிப்படை மூலக்கூறு குளுக்கோஸ் இரத்தத்தில் அதிகம் ஆனவுடன் மூளை அதை உணர்ந்து, இன்சுலின் சுரக்க உத்தரவு கொடுக்கிறது. இன்சுலின் இந்த அதிக அளவு உள்ள குளுகோஸை, கிளைக்கோஜன் ஆக மாற்றி கல்லீரல் மற்றும் தோலில் அடியில் உள்ள அடிப்போஸ் திசுக்கள் ஆக சேர்த்து வைத்து விடுகின்றது. இதன் மூலம் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டு ஒரே சீரான சமநிலை உருவாக்கப்படுகின்றது.

விரத காலங்களில் நமது உடம்பில் உணவு வழியாக கிட்டும் குளுக்கோஸ் அளவு குறைந்த உடனே மூளை, குளுக்கான் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு, கிளைக்கோஜனை திரும்பவும் குளுக்கோஸ் ஆக மாற்றி இரத்தத்தில் ஒரே நிலை நிலவச் செய்கிறது.

ஏன் இரத்த சர்க்கரை அளவு ஒரே சீராக இருக்க வேண்டும்? மூளை, இரத்த சிவப்பு அணுக்கள், சிறுநீரக செல்கள் போன்றவை இந்த குளுக்கோஸ் மட்டுமே உண்டு உயிர் வாழ்கின்றன. அளவு குறையும் போது அவை இறக்க நேரிடும்.

ஹீமோ குளோபின், இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஒரு புரதம். இதன் வாழ் அளவு 120 நாட்கள். இதன் உடன் சர்க்கரை மூலக்கூறு சேர்ந்து தான் கிளைகோசேலேட்டடு ஹீமோ குளோபின் அதாவது ( HbA1c) – glycosalated Haemo globin உருவாகிறது. இது மூன்று மாதங்களில் உள்ள சராசரி இரத்த சர்க்கரை அளவு காட்டிக் கொடுக்கும்.

இதனால் சர்க்கரை நோய் வைத்தியம் செய்யும் போது இதை பரிசோதித்து கட்டுக்குள் வைப்பது முதன்மை நோக்கம் ஆகும்.

சில பேர் மறுபரிசோதனை வரும் போது உணவின் அளவு குறைத்து விட்டு இரத்த சர்க்கரை அளவு குறைவாக கொண்டு வருவார்கள். அப்படிப் பட்ட ஆட்களை இந்த பரிசோதனை காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் நமக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதா என்று சந்தேகப்படுவார்கள் இந்த பரிசோதனை மூலம் சந்தேகம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நார்மல் அளவு < 5.7%
வர வாய்ப்பு உள்ள அளவு 5.7-6.4%
சர்க்கரை நோய்->6.5%

மேலும் இந்தப் பரிசோதனை  முடிவுகள் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கும், அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கும் பொருந்தாது.

மருத்துவர் இராதா குமார்.

430total visits,1visits today