தல விவேகம் – பரபரப்பு தகவல்கள்

0
135

விவேகம் படத்தின் பரபரப்பு தகவல்கள்.

சத்யஜோதி பிலிம்ஸின் பிரமாண்ட தயாரிப்பான ரசிகர்களின் தல என அழைப்படும் அஜித்குமார் நடிக்கும் விவேகம் படத்தின் கதையின் நாயகியாக – காஜல் அகர்வால். வில்லனாக – ஹிந்தி திரையுலகின் நாயகனாக வலம் வந்த விவேக் ஓபராய் நடித்து இருக்கிறார்கள்.

சென்ற வருடம் (2016) ஆகஸ்ட் 2 ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விவேகம் திரைப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் 10 ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் “அக்‌ஷராஹாசன்” முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் தம்பிராமையா, மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

தனது 57 வது படமான இதில் தல அஜித்குமார் இண்டர்போல் அதிகாரியாக வருகிறார்.

சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இசை அமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் தலயின் விவேகம் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

ஆறு பாடல்களை கொண்ட இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் முந்தய வேதாளம் பட “ஆலுமா டோலுமாவை” விட மிஞ்சும் அளவுக்கு ஃபாஸ்ட் பீட் இருக்கும் என தெரிகிறது.

300 நாட்கள் மொத்த படபிடிப்பில் 30 நாட்களை தவிர அனைத்தும் வெளிநாட்டிலேயே நடத்தப்பட்டுள்ளதாம்.

“வேதாளம்” படத்திற்கு பிறகு “விவேகம்” படத்திற்காக உடம்பை மெருகேற்றியிருக்கிறார் நம்ம தல அஜித்குமார்.

-கிஷோர்

588total visits.