தளபதி61 பட விவகாரம் அவசர அறிவிப்பு ஏன்?

0
35

2014ம் ஆண்டு தீபாவளி தளபதி தீபாவளியாக பட்டாசு வெடித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளிக்கு தளபதியின் 61வது படம் வெளியாக இருக்கிறது.

தளபதியின் ‘பைரவா’ படத்தை தொடர்ந்து அடுத்த மாஸ் அறுபத்தியோராவது படமும் தெறி இயக்குனர் அட்லீ கையில் தான். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. விஜய் – அட்லீ காம்பினேஷன் அறிவிக்கப்பட்டு சுமார் 1 மாதத்திற்கு மேல் ஆகியும், படத்தின் ஸ்கிரிப்ட் பைனல் செய்யப்படாமல் இருந்துவந்தது.

‘ராஜா ராணி, தெறி’ படங்களின் மெகா ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் அட்லியின் மூன்றவாது படம். அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ப்ரைஸாக பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ட்விட்டியுள்ளார், படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூந் 22ஆம் தேதி வெளியாகும் என்று. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும், படம் வரும் அக்டோபரில் அதாவது தீபாவளி திருநாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.
ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் ஒரு விஷயத்தை டிரெண்டாக விடுவதில் தல, தளபதி ரசிகர்கள் பலே ஆட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இளைய தளபதி, அப்பா – மகன்கள் என ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும்  இந்த படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தின் கதை ‘தந்தையை கொலை செய்த வில்லனை பழிவாங்கும் இரண்டு மகன்கள்’ என்று கூறப்படுகிறது. இப்போதைய ரசனைக்கேற்றவாறு ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாக இயக்குநர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்களால் சற்று திருத்தம்  செய்யப்பட்டிருக்கிறது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் சென்னை இசிஆரில் உள்ள பனையூரில் இருக்கும் ஆதித்யாராம் ஸ்டுடியோஸில் பூஜையில் தொடங்கி, பின்னி மில்ஸில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட், ராஜஸ்தான் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பிரான்ஸ் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொசுறு : ஷங்கரின் 2 .௦ படம் தீபாவளிக்கு முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிருந்தனர். ஆனால் இன்று அப்படம் ஜனவரி மாதம் தள்ளிப்போகிறது என்ற தகவலையொட்டி விஜய் 61 படம் தேதிகளின் அறிவிப்புக்கு காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

-கார்கி

342total visits.