The Ghazi Attack Movie Review

0
38
Bangladesh நாடானது இந்திய சுதந்திரத்தின் போது கிழக்கு பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் 994 மைல் தொலைவில் இருந்தது. மூன்று பக்கமும் இந்திய எல்லையால் சூழப்பட்ட கிழக்கு பாகிஸ்தானை, பாகிஸ்தான் அரசு தொடர்பு கொள்ள ஒரே வழி அரபிக்கடல்… அதுவும் இந்திய கடல் எல்லைக்குள் இருந்தது.
எனவே அந்த நாடு பொருளாதார ரீதியாக புறக்கணிக்கபட்டு அடிப்படை வசதி கூட இல்லாமல் மக்கள் அவதியுற்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கடும் கிளர்ச்சி உண்டானது. இந்த கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் அரசு கொன்று குவித்தது. தனி நாடு கேட்டமையால் சாதாரண குடிமக்களை கூட ஈவு இரக்கமின றி கையாண்டது.
இதனால் அவர்கள் இந்திய எல்லைக்கு அகதிகளாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் இந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தலையிட்டு பாகிஸ்தானை நிர்முலமாக்கி Bangladeshஐ தனி நாடாக அறிவித்தது.
மேற்கண்ட சம்பவங்கள் படத்தில் இடம்பெறவில்லை. 1971ல் நடந்த இந்த போரின் போது அரபிக்கடல் எல்லையில், இந்தியாவின் INS vikrant போர்க்கப்பல் பாதுகாப்புக்கு நின்றது. இதன் கவனத்தை திசை திருப்பும் வகையில் விசாகப்பட்டினத்தை தாக்க பாகிஸ்தான் திட்டமிடுகிறது.
“காஸி” என்பது PNS காஸி எனப்படும் பாகிஸ்தானின் Submarine . இதை S21 எனப்படும் இந்திய Submarine Attack செய்து அழித்ததா…? என்பதே கதை.. படம் முழுக்க ஆழ்கடலுக்குள்ளேயே நடக்கிறது. நாம் இதுவரை பார்த்திராத களம் … நீர்மூழ்கி கப்பல்களின் உள்ளமைப்பும், போர் வியூகங்களும் நம்மை கவர்ந்திழுக்கின்றன. “சோனார்” மிக முக்கிய அங்கமாக இருப்பதால் சவுண்ட் இன்சினியரிங் தங்கள் வேலையை திறம்பட செய்துள்ளனர்.
கடலுக்கடியில் கன்னி வெடிகள் செயல்படும் விதம், சோனார் மூலம் கப்பல்களை Locate செய்யும் விதம், கணிதவியல் சார்ந்து எதிரிகளை அட்டாக் செய்யும் விதம் என படம் முழுக்க detailing overloaded.
தெலுங்கு படம் என்றாலும் , எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் மதி , இசையமைப்பாளர் கே என நன்றாக பரிச்சயமான டெக்னீசியன்ஸ் தங்கள் வேலையை திறம்பட செய்துள்ளனர். ஷிவம் ராவின் Art direction சான்ஸே இல்லை. ஒரு நீர் மூழ்கி கப்பலுக்குள் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு வந்ததை போன்ற உணர்வு. விறுவிறுப்பான தொய்வில்லாத திரைக்கதை. ஒரு சில குறைகள் தவிர்த்து முழுமையான படம் தான்.
படத்தில் பாடல்களோ, தேவையற்ற காட்சிகளோ இல்லை. ராணா,அதுல் குல்கர்னி, கே.கே.மேனன், ராகுல் சிங் ஆகியோர் மிகையில்லாத பொருத்தமான Casting. மொத்தத்தில் எதிர்பார்ப்பின்றி சென்று I am impressed. பிரமிக்க வைத்து விட்டார்கள்.
ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படபிடிப்புக்காக 33 முறையும், மூழ்கி கிடக்கும் கப்பல்களுக்காக 12 முறையும் கடலுக்குள் மூழ்கி வந்துள்ளார். அது மட்டும் இன்றி 2005ல் உலகின் மிக ஆழமான மரியானா ஆழியை தனி மனிதனாக அடைந்து சாதனை படைத்தார்.
இந்த படத்தின் இயக்குனர் Sankalp reddy கூட ஒரு வருடத்திற்கும் மேலாக Submarineக்குள் இருந்து Detailing சேகரித்துள்ளார். ஒரு புத்தகம் எழுதுவதை போலவே ஒவ்வொரு படத்திற்கும் ஆராய்ச்சிகள் முக்கியதுவமானது. இதை உணர்ந்து படம் எடுத்தால் ஹாலிவுட் தரமான சினிமாக்கள் இந்தியாவிலும் வரும்.
-பிரபு

380total visits,1visits today