திரைக்களம் -3வது நிகழ்வு

0
23

#வாசகசாலை – #திரைக்களம் இணைந்து வழங்கும் மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில் இம்மாத நிகழ்விற்கான அறிவிப்பு உங்கள் முன்னால்.

மூன்றாவது நிகழ்வான இதில் மராத்திய இயக்குநரான நாகராஜ் மஞ்சுலேவின், ‘பண்ட்ரி’ மற்றும் ‘சாய்ரத்’ ஆகிய இரு படங்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை நிகழ்த்த உள்ளோம்.

இந்த சமூகத்தில் புழுத்து புரையோடிப் போயிருக்கும் சாதியின் அவலங்களை, ஒரு நேர்மையான கலைப்படைப்பின் வழியாக காட்சிப்படுத்தும் பொழுது, அது நம்மனதில் உண்டாக்கும் அதிர்வு வலிமையான ஒன்றாக இருக்கும்.

அப்படி சமீபத்தில் நம்மை அதிர வைத்த இரண்டு படங்கள் பற்றி, ஒரு சனிக்கிழமை மாலையில், விரிவாக உரையாட அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் நண்பர்களே…! நன்றி. மகிழ்ச்சி..!

522total visits.