அடுத்தடுத்த படங்கள்

0
286

வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகப் போற சில படங்களை பத்தி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

1. குற்றம் 23
அருண் விஜய்க்கு,  என்னை அறிந்தாலுக்கு பிறகு நடிச்சி வெளியாகிற படம். அதனாலேயே நிறைய எதிர்ப்பார்ப்பும் உள்ள படம். போலீஸ் ஆபிஸரா வர்றாரு. ஈரம், வல்லினம் இயக்குனர் அறிவழகன் டைரக்‌ஷன்.  விஷால் சந்திரசேகரன் இசை. அருண் விஜய்க்கு ரொம்ப முக்கியமான படமா இது இருந்தே ஆகணும். ஏன்னா என்னை அறிந்தாலுக்கு பிறகு அவர் மேல கொஞ்சம் கவனம் திரும்பி இருக்கு. அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்னு சொந்த தயாரிப்புல இந்தப்படத்தை எடுத்திருக்காரு. அறிவழகனுக்கும் வல்லினத்தோட தோல்வியை மாத்தி ஆகவேண்டிய கட்டாயம். இது ராஜேஷ்குமாரோட ஒரு நாவலை அடிப்படையா வச்சி எடுக்கப்படுற படம் என்பது கூடுதல் செய்தி. நல்ல த்ரில்லரா அமைய வாழ்த்துக்கள்.
2. முப்பரிமாணம்
பாலாவோட உதவி இயக்குநரா இருந்த அதிரூபன் இயக்குற படம். ஹீரோ சாந்தனு. இதுவரைக்கும் ஒரு ஹிட் கூட கொடுக்கல. அதனால பயங்கரமா ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்கிறதா கேள்வி. 2015-லேயே ஆரம்பிச்ச படம். இப்ப தான் ரிலீசாகப் போகுது. படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் மியூசிக். கடுமையான ஷெடியூலுக்கு நடுவுல ஜிவி இந்தப்படத்துக்கு மியூசிக் பண்ணி கொடுத்திருக்கார். டிரைலர் பார்க்குறப்போ அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணல. அதேமாதிரி ஹிட் கொடுக்காத ஹீரோக்கள் எல்லாம் திடீர்னு ஒரு படத்துக்காக மொட்டை அடிச்சிட்டு அல்லது ஒட்ட முடி வெட்டிட்டு வந்து நிப்பாங்க. அதைத்தான் சாந்தனு இதுல பண்ணியிருக்கார். பார்க்கலாம்.
3. யாக்கை
யுவன் மியூசிக் அப்படிங்கிறாதால ஏற்கனவே நிறைய பேருக்கு பேர் தெரிஞ்ச படம் இது. 2015-ல இருந்தே எதிர்ப்பார்க்குற படமும் கூட. ரொம்ப அட்டகாசமான ட்ரைலர் வந்திருந்தது. குரு சோமசுந்தரம், பிரகாஷ் ராஜ், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் அப்படின்னு பெரிய நட்சத்திர நடிகர்கள் உள்ள படமும் கூட. கிருஷ்ணா ஹீரோ. சுவாதி ஹீரோயின். ரொமான்டிக் த்ரில்லர் சப்ஜெக்ட். குழந்தை வேலப்பன் அப்படினு புது இயக்குனர். எங்கேஜிங்கான படமா இருக்கும்னு சொல்றாங்க. வாழ்த்துக்கள்.
4. பண்டிகை
மூன்றாம் தேதி யாக்கை. ஒன்பதாம் தேதி பண்டிகை. கிருஷ்ணாவுக்கு மார்ச் மாசம் வர்ற  படங்கள். இந்தப் படத்தோட சிறப்பம்சம் என்னன்னா அகத்தியன் பொண்ணு விஜயலக்ஷ்மி தயாரிப்பு. அதாங்க சென்னை 28, அஞ்சாதே  ஹீரோயின். ஸ்ட்ரீட் பைட் மையமா வச்சி வர்ற படம். டீசர் நல்லாவே இருந்தது. ஆனா படம் ரிலீஸ் ஆகுறது உறுதியான்னு தெரியல.
5. என்கிட்டே மோதாதே
ஹிந்தியில் ஒளிப்பதிவு பண்ணுறப்போ ரிலாக்ஸ் பண்றதுக்காக கிடைக்குற கேப்ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச நட்டு என்கிற நடராஜுக்கு சதுரங்க வேட்டை அவரே எதிர்பார்க்காத பெரிய பிரேக். அவருக்கு இப்போ செம்ம மார்க்கெட். அதை நிரூபிக்கிற படமா இதோ இது வருது. 1980-கள்ல நடக்குற படமா வருது. மூடர் கூட்டத்துல செகண்ட் ஹீரோவா வந்தவர். இதுலேயும் செகண்ட் ஹீரோ. ட்ரைலர் நிஜமாவே ரொம்ப நல்லா இருந்தது. புதியவர் ராமு செல்லப்பா இயக்கம். நடராஜன் சங்கரன் இசை. கண்டிப்பா ஹிட் அடிக்கும்ங்கிறது இண்டஸ்ட்ரி டாக். பார்க்கலாம்.
6. மாநகரம்
நான்கு கோணங்கள் – மூன்று பிரச்சினைகள் – இரண்டு காதல் அப்படிங்கிற டேக் லைனோட வர்ற படம். தெலுங்குல தெரிந்த முகமான சந்தீப் கிருஷ்ணாவும், வழக்கு எண்  ஹீரோ ஸ்ரீயும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. சென்னையும் ஒரு முக்கிய கதாபாத்திரமா வர்றதா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்காரு. மாயா படத்தோட தயாரிப்பாளர்களோட அடுத்த படம் இது. முனீஸ்காந் கேரக்டர் ட்ரைலர்-லேயே நல்லா இருந்தது. பார்ப்போம்.
இது போக சிபி சத்யராஜ் நடிச்ச கட்டப்பாவை காணோம், புது ஹீரோ நடிச்ச தாயம் இப்படி இரண்டு படம் ரிலீஸ் ஆகுது. பெரிய பட்ஜெட் படம்னா விஜய் சேதுபதியோட கவண் (டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்துல வர்றாரு..) மணி சாரோட காற்று வெளியிட, தனுஷ் இயக்குற  பவர் பாண்டி,  மிஷ்கினோட துப்பறிவாளன், ஜிவி-யோட ப்ரூஸ் லீ, கடைசியா பாகுபலி-2 எல்லாமே வருது.
பார்க்கலாம்.. கோடை விடுமுறைக்கு முன்னாடி எதெல்லாம் ஹிட் ஆவுதுன்னு!!
-பாலகணேசன்

852total visits.