வள்ளி ராஜ்ஜியம் – பாகம் – 4

0
39

நடிகர் தங்ககண்ணனுடன் நட்பு இப்போது எப்படி இருக்கு? அவர் உங்களை சுட்டதுக்கு அந்தரங்க காரணம் உள்ளதாக பேச்சு இருக்கே?

அன்றைக்கு நடந்த விவாதத்தில் அவனுக்கு கோபம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். விவாதம் அரசியல் சார்ந்தது. கொள்கைகளில் வேறுபாடு உண்டு தான். ஆனால் எங்களுக்குள் இருக்கும் நட்பில் எந்த பிளவுமில்லை. அவனை பற்றி நன்கு அறிந்தவன் நான். என்னைப்பற்றி அறிந்தவன் அவன். வெறும் குண்டடிக்கெல்லாம் எங்கள் நட்பு சாகாது.(தங்கம் போலே ஜொலிக்கு எஸ்.ஆர்.வியிற்கு நிஜமாவே தங்கமான மனது.)

பத்திரிகையில் அந்த பேட்டியை படித்ததும் சரஸ் “புல்ஷிட், இது அநியாயம்” என்று கூவினாள். வேகமாய் நடந்து எஸ்.ஆர்.வியிடம் சென்றாள் குருவியின்  அக்கா…அக்கா… என்ற சாந்தப்படுத்தலை மறுத்து “பத்திரிகையில் உங்களுக்கு தங்கமான மனசு என்று போட்டிருக்கு. அநியாயம், தங்கக்கண்ணன் அண்ணாவுடைய நிலைமை யாருக்கு புரியும்!! அவர் அக்காவிற்கு திருச்சியில் தினம் தினம் மின்சார அதிர்ச்சி கொடுத்து இன்னமும் பைத்தியம் ஆக்கும் உங்கள் முயற்சி தெரியாது தானே. அது தான் தங்கமான மனசு என்று போட்டிருக்கு” எகத்தாளம் நிறைந்து வழிய சத்தமாக பேசினாள்.

“பாப்பா, அமைதி!! மத்தவங்களுக்கு தொந்திரவா இருக்குதில்லை” என்றவர் குருவியை கண்டதும் “என்னம்மா குருவி!! ஹாஸ்பத்ரி எல்லாம் எப்படி இருக்கு !! முடியலைனா வேற வேலைக்கு போகலாமில்லை, எதுக்கு வெயிலே, காத்துலே கஷ்டப்படணும்!! வீட்டுக்கு வேலைக்கு என் வீட்டுக்கே வா,அங்கே தங்கிக்கோ “

“குருவி எங்கேயும் வரமாட்டாள். என்னோடு தான் இருப்பாள். எங்கம்மா எனக்கு அமர்த்தின ஆள் அவள்” என்று திரும்பவும் ஆர்ப்பரிப்பாய் கூச்சலிட்டு விட்டு சென்று அவளிடத்தில் அமர்ந்துக்கொண்டாள்.

குருவிக்கு ஐயோ பெரிய மனுஷன் கூப்பிடறாரே!! நல்ல வேலை இல்லை நான் வரலை என்பதெல்லாம் அவள் சொல்ல தேவையில்லாத நிலை என்று பல எண்ணம் உள்ளுக்குள்ளே ஓடியது. சங்கடங்கள் அவள் வாழ்வில் சாதாரணமான போக்கு அதில் இது வேறு விதம்.

இராவணனுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. அவன் காதுக்கு எட்டும் விஷயத்தை சுவாரசியமாக இன்னொருவருடன் பகிருதல். அது நன்றாகவே செய்கிறான் போல, குழந்தை சரஸிற்கு அது புரியவில்லை.

சங்கடங்கள் நிறைய சரசுடன் போக திரும்பி பார்க்கையில் எஸ்.ஆர்.வி அவர் அசிஸ்டன்ட்டை ஏவிக்கொண்டிருந்தார் “பாப்பா யாரோடெல்லாம் பழகுதுனு பாருங்க, சரஸிற்கு இப்படியெல்லாம் பேச தெரியாது”

அமைதியாக இருக்கையில் அமர்ந்தவளுக்கு உள்ளுக்குள்ளே இராவணன் பேசியது ஓடியது “பெண்பித்து. இவர் சபலத்துக்கு ஆளாகி பைத்தியமானவங்க ஏராளம். அக்காவின் பைத்தியத்திற்கு காரணமானவனை சும்மா விட தோணுமா என்ன? அதான் சுட்டார்” தங்கக்கண்ணன் கொலை முயற்சி வழக்கில் விடுதலை ஆகி வந்த அன்று பேசினது. இராவணனுக்கு தான் எவ்வளவு ஞானம்! சூட்டார்… கொலையாளி என்று சொல்லாமல் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கிறார் என்று அவள் வியந்தாள். இராவணனின் இன்னொரு ஞானத்தை கண்ட பெருமைக்கொண்டாள்.

குருவிக்கு உள்ளுக்குள்ளே மகிழ்ச்சி பரவியது. இராவணன் கொட்டம் அடங்கும். அவன் தான் சரஸுடன் பழகுகிறான் என்று தெரிந்தால் எஸ்.ஆர்.வி நடவடிக்கை தீவிரமாக இருக்கும். ஸ்வாமிநாதன் சொன்னது போல் இராவணன் அவளுக்கு கிடைக்க கூடும். சுயநல காதல் வேட்கை அவளை விழுங்கியது.

எஸ்.ஆர்.வி தமிழ் சினிமா உலகின் மாமன்னன், சேதுபதி, இளவரசன், என்று யாதுமாகி வளம் வர அரசியல் தன்பக்கம் இழுக்க தொடங்கிய நாட்கள் மரியாதையை, பெயரை நிலைநாட்ட தலைவர் அரும்பாட பட வேண்டியிருந்தது. அவர் நினைத்ததை சொன்னதை செய்ததை மட்டுமே வரலாறு பதிவு செய்துக்கொண்டது. அப்படி பதிவு செய்ய தேவைகள் நிறைய இருந்தது.

சின்ன சிறு மிரட்டல் என்று தொடங்கி கூடவே ஊருக்கு புலனாகாத கூலிப்படையை நடத்தும் அளவிற்கு மாறியும் ஆனது அவர் நிலை. இராவணன் என்னும் எலி இந்த திமிங்கல வலையில் சிக்கியதெல்லாம் பெரிய விஷயமே அல்ல.

முட்டை கண்களுடன் கொழுகொழுவென மழலையாக பேசும் சரஸ் யாருக்கு தான் பிடிக்காமல் போகும். அந்த பெண்ணோடு ஒரு சீனில் நடித்தால் போதுமே என்னும் நிலையில் ஐந்தாண்டு எஸ்.ஆர்.வி படங்களில் ஒப்பந்தம் வேறு. எஸ்.ஆர்.வி நிழலில் இருக்கும் பெண்ணை இன்னொருவன் நினைப்பதே அவன் எந்த ஜென்ம சாபமோ, இதில் அவளை அவரை எதிர்த்து பேச செய்தவனுக்கு துணிவே துணை.

சரஸ் எஸ்.ஆர்.வியை பலபேர் முன்னிலையில் எதிர்த்து பேசினாள்  என்பது இராவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் எஸ்.ஆர்.வி அவமானப்பட்டார் என்பதே போதுமானதாக இருந்தது.

“இந்தா குருவி இங்கே வா” என்று இழுத்துப்போனான்.

“என்ன காளியாடிட்டா போலே உங்கக்கா”

“அது எனக்கு தெரியாது”

“குருவிக்கு தெரியாம சரஸ் எதை செஞ்சிடுவாளாம்” என்று அவள் தொடையில் கிள்ளினான்.

“இத பாருங்க இப்படி கிள்ளுறது, தொடற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க”

“என்னடீ அலட்டுற நான் தொடாத இடமா!!”

“சீ சீ பேச்சை பாரு!! இதுக்கெல்லாம் எங்கேயோ படப்போற நீயி” என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டாள்.

குருவி மூலம் அறிய முடியாமல் போக தவித்தான்.

“இராவணன்!!” கூச்சலிட்டாள் பரவசமா கசரஸ் அவனைக்கண்டதும்.

“வணக்கம்ங்க, வாஹினிலே ஒரு சீன் நடிக்க வந்தேன்.”

“ஓ!! அப்படியா!! நானும் இன்னைக்கு டூயட். அறுவை தெரியுமா?”

“நீங்க நடனம் ஒத்திகை பாருங்க நான் கிளம்புறேன்”

“ஐயோ போகாதீங்க இருங்க” என்றாள் கெஞ்சும் குரலில்.

இராவணன் குருவியை கண்களால் “பார்த்தாயா!!” என்று ஜாடை பேசினான்.

சரஸ் “உங்களுக்கு எஸ்.ஆர் அவமானப்பட்ட விஷயம் தெரியுமா?, நானே எதிர்த்து பேசினேன். போதும் அவலை நான் என் அம்மா தங்கக்கண்ணனின் தமக்கை, இன்னும் எத்தனை பெண்களோ?”

இராவணன் திடுக்கிட்டான். குருவிக்கு ஏளனம் தழும்பியது.

“ஐயா இதயத்தின் ராகம் படத்திலே நடிச்சானே இராவணன் என்று ஒரு நாடக நடிகன் அவன் தான் பாப்பாகிட்ட புதுசா பேசுறான் “

இராவணன் நடிப்பு அவனை மட்டுமே கவனிக்கும் விதமாக இருந்தது நினைவில் சிக்கியது.. எஸ்.ஆர் அவனை தொடர்ந்து கவனிக்க சொன்னார்.

பிரபல பத்திரிகையில் நினைவுகள் என்று எஸ்.ஆர் என்னும் நடமாடிய தெய்வத்தின்  பேட்டியை படித்து குருவி நினைவுகளுக்குள் பயணித்தாள். பதினெட்டு வயதில் நடந்தவை நேற்று நடந்தது போல் இருந்தது.

நினைவுகளுக்கு தான் எத்தனை எத்தனை சக்தி!! அந்த க்ஷணத்தை அதே ரணத்தை, அதே சுகத்தை, அதே குதுகலுத்தை,  அச்சு பிசறாமல் நினைக்கும் போதெல்லாம் கொடுக்கிறது. நினைக்க நினைக்க எதோ ஒன்றை கற்று தருகிறது.

விஜயன் தனது கடந்த படம் முயற்சியே இல்லாமல் ஐம்பது நாட்கள் ஓடியதும், நூறு நாட்கள் ஓடும் என்ற நம்பிக்கையை சிலாகித்தான்.

ஜென்னிக்கு ஒரு மாதமாக ஜெயன் அவளிடம் பேசாதது உறுத்தியது. விசாரிக்க அவன் அலுவலகம் சென்றாள். கடந்த நாற்பத்தைந்து நாட்களாய் அவன் வரவில்லை என்று தகவல் கிடைத்தது.

அவன் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தாள். இரண்டு மாத வாடகை தரவில்லை என்று சத்தமிட்டார். ஜென்னிக்கு சங்கடமாகிப்போனது. அவன் டீ குடிக்கும் கடையில் விசாரித்தாள். நூறு ரூபாய் பாக்கியை கொடுக்க சொல்லி டீகடைக்காரன் அசிங்க படுத்தினான். அவனும் இரண்டு மாதமாய் ஜெயனை காணலை என்பதை தெரிவித்தான்.

அடுத்த ஒரே இடம் அவன் செல்லும் பார். அது அவளுக்கு உதவும் என்று தோன்றவில்லை.  அடுத்து என்ன செய்யலாம் அப்பாவிற்கு அழைக்கலாம், தெரிவுப்படுத்தலாம். உறவுகளை யோசிக்கையில் விஜயனிடம் விசாரிக்க எண்ணம் தோன்றியது.

மனேஜரிடம் அவன் தொடர்பு எண் வாங்கி சந்திக்க அழைத்தாள்.

“ஜெயனை காணலை”

“இதை பத்தி பேச தான் கூப்பிடடாயோ, நான் கூட என் அழகுல மயங்கிட்டியோ என்று நினைத்தேன்”

“சார், விளையாடாதீங்க, ஜெயன் காணலை என்றால் அப்பா கஷ்டப்படுவார்”

விஜயன் சிரித்தான். “ஒரு நாளைக்கு எவ்வளோ தடவை சாப்பிடற? எவளோ நேரம் தூங்குற?”

முறைத்தாள்,”மூணு வேளை, எட்டு மணிநேரம்”

“உன் அப்பாவை அதாவது ஞானசகாயத்தை கிட்டதட்ட எழுபது நாட்களாய் காணலை. உன் நண்பனா? காதலனா? ஜெயன் அவனை நாற்ப்பதைந்து நாட்களாய் காணலை” என்றான் ஏளனமாக

ஜென்னி வாயை பிளந்தாள். குற்ற உணர்வில் கலங்கினாள்.

“சார், அப்பாக்கு நான் சென்னையில் வேலை செய்வது பிடிக்கலை அந்த மனஸ்தாபம் இன்னும் குறையலை என்று தான் இவளோ நாள் நினைச்சிருந்தேன்”

“நல்ல நினைச்சே போ!!” என்று சிரித்தான்

கண்கள் பணித்தது. யாருமற்ற வெளியில் நிற்பது போல், சுதந்திரம் பாரமாகிப்போனது. பாதுகாப்பின்மை உணர்வு தொற்றிக்கொண்டது.  ஆறுதலுக்கு கூட ஆளில்லாமல் போனது.

பதற்றமாக “சார் ரிச்சி, முருகு நல்லா இருக்காங்க தானே”

“ரிச்சி தினமும் ஆபீஸ் போயிட்டு வந்திட்டு இருக்கான்”

“முருகு காலேஜ் போயிட்டு வந்திட்டு இருக்கான்”

“சார் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்”

கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவனிற்கு. எப்படி சொல்வது அவனுக்கும் ஜெயனுக்கும் இருக்கும் உறவுமுறையை. அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் கேள்விக்குறியாக இருக்கும் சம்பந்தத்தை, கண்களில் படும் எல்லோருமே அவனுக்கு சம்பந்தம் உடையவர்களாகவே தெரிகிறார்கள். அப்படியிருந்தும் அப்பா யாரென்று தெரியவில்லை. தெரிந்தவர் சொல்ல மறுக்கிறார்கள். இவர்களுக்கு தெரியுமோ என்று அவன் யூகிக்கப்போனால் அவர்கள் அடுத்த நாள் காணாமல் போகிறார்கள்.

இதோ இந்த ஜென்னிட்டா ஞானசகாயம் எப்போ காணாமல் போவாளோ!!

*ஜிவி

முந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://kalakkals.com/valli-rajjiyam-part-3-by-jivi/

205total visits.