வள்ளி ராஜ்ஜியம் பாகம்-6

0
11

 விஜயன் ஜென்னியின் கைபேசிக்கு அழைத்தான். அவள் தொடர்பிறகென்று தன் தனிப்பட்ட எண்ணை குறித்துக்கொள் என்று சொல்ல அழைத்தான்.

ஜென்னி நடுங்கும் இளைத்த குரலில் “ஹெல்லோ”

“நான் விஜயன் பேசுறேன்”

“சார், நான் அரும்பாக்கத்தில ஒரு பார்லே சிக்கிட்டு இருக்கேன் வந்து கூட்டிட்டு போறீங்களா??” சிக்கிக்கொண்டு தான் இருந்தாள் இரும்பு சங்கலி வேலிக்குள்.

காணாமல் போனவர்கள் பட்டியலில் இவளும் சேர்ந்துவிடுவாளோ என்று விஜயனுக்கு நிமிடத்தில் பயம் தொற்றிக்கொண்டது. வரேன் என்றவன் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே இருந்தான்.

அழுக்கான பாரில் சாராய நாற்றத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் காதுகளில் தொங்கட்டான் ஆட திடீர் அழகு கூட  ஒரு ஸ்டூலில் குப்பைமேட்டில் ரோஜாச்செடி போல் அமர்ந்திருந்தாள். கோர்த்த கைகளை பார்த்துக்கொண்டு எதோ யோசனையில் பெருமூச்சை விட்டு திரும்பி பார்த்தாள்.

காரிலிருந்து இறங்கி உள்ளே நுழையும் நிமிடத்தில் ரசிகர் கூட்டம் கூடியிருந்தது. பிக்கல் பிடுங்கலுக்குள் இடையில் அமைதி சூழ்ந்தது. அவளை காண்கையில் எரிச்சல் கோபம் நிம்மதி ஆரவாரம் எல்லாம் சங்கமித்தது.

கையசைத்தான் வா என்று. நின்றவள் சங்கடமாய் பக்கம் பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் தளர்வாக படுத்துக்கொண்டு ஒரு சங்கலியால் அவளை சுற்றி வேலிபோல் அமைத்து உளறி கொண்டிருந்தான் குண்டன் ஒருவன்.

சீற்றமடைந்தவன் வேகமாக நடந்துப்போய் அந்த சங்கலியை இழுத்தான். குண்டனும் இழுத்த இழுப்பிற்கு கூட வந்து மப்பும் மந்தாரமாக பேசினான் “தலைவா வணக்கம், நானு தான் வூட்ல இருந்து யார்னாச்சும் வந்தா தான் உடுவேன்னு சொல்லி கட்டிபோட்ருக்கேன்”

விஜயன் “சரி விடுங்க நான் வந்துருக்கேன் கூட்டிட்டு போறேன்”

“அய்யே நீ எல்லார் வூட்டுக்கு புள்ளே, நான் இந்த புள்ள வீட்டிலே யாராச்சும் வந்தா தான் உடுவேன், டிவிலே பாக்கறத விட நேர்ல நல்லாத்தான் இருக்க ”

பின்னின்று ஒருவன் “சார் அவன் ஒரு குடிகாரன் அவன்கிட்ட போய் வியாபாரம் பேசிட்டு இருக்கீங்க”

குடிகாரன், “டேய் மூதேவி வியாபாரம் இல்லடா நாயே ஜவாப்டா இத்த பொண்ணுக்கோசறம் ”

விஜயன், “இங்க பாருங்க, இவங்க எனக்கு தெரிஞ்சவங்க, யாரோ பிரென்ட் தேடி வந்திருக்காங்க, கூட்டம் கூடுது நான் போகணும் விடறீங்களா அவங்கள”

குடிகாரன் “ஆம்பளைங்க குடிக்கற பாருக்கு இந்தம்மா ஏன் வருது!! டிஸ்டர்ப் ஆவுதுலே, எவனயாச்சும் நம்பி போறது அப்பால பார்லே தேடுறது அப்பாறம் ரேப் பண்ணிட்டான்னு போலீஸ் அடிக்கறது, இதுலாம் நல்லாவா இருக்குது சொல்லு ”

விஜயன்,”கூட்டம் கூடுது, நாங்க போகணும்”

குடிகாரன்,”ஆமா ஆமா வீடியோ புடிச்சி இன்டர்நெட்லே போட்ருவாங்க, நீ போ ராசா கூட்டினு போ, துன்ன ரொட்டி கீது வாங்கி குடு பச்ச புள்ளையாட்டம் அழுவாம இருந்துச்சு இவ்ளோ நேரம் ”

அவன் அழைத்து போக குடிகாரன் “ராசா” என்று மண்டையை சொரிந்தான். விஜயன் ஐநூறு ரூபாயை அவன் முகத்தில் எறிந்தான்.

அவன் உற்சாகமாய் தலைவர் வாழ்க என்று கோஷம் போட்டான். ஜென்னியை தரதரவென இழுத்து வந்து காருக்குள் தள்ளினான்.

கார் கிளம்பியது. காருக்குள் அமைதி நிலவியது. பாஸ்கரிடம் இருந்து அழைப்பு வந்தது அந்த பக்கம் பாஸ்கர் “விஜி!! எங்க போன?இன்னிக்கு மார்னிங் ஷாட் இருக்கு ”

விஜயன் “ஹாங்!! தெரியும், பதினோரு மணிக்கு செட்லே இருப்பேன்”

பாஸ்கர் அழைப்பை துண்டித்தான்.

ஜென்னி,”மன்னிச்சிடுங்க, நான் ஆபிஸ்லே இறங்கிக்குறேன்”

விஜயன் கோபமாக “எதுக்கு மன்னிப்பு”

அவள்,”அது தான் ஜெய் கடைசியாக போன பார்”

விஜயன்,”சரி இப்போ மட்டும் என்ன பாசம்?”

“சார் எனக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு சார், அப்பா காணலை ஜெய் தேடினால் அப்பா கிடைச்சிடுவார், மனசு சொல்லுது”

விஜயன் பதில் பேசவில்லை. அவள் தொடர்ந்தாள்”எதோ தனிமை திடீர்ன்னு அழுத்துது, அவரை எப்பவும் எதிர்த்து பேசி தான் பழக்கம், ஆனால் இப்போ பேச கூட ஆளில்லை என்றதும் என்னால சும்மா இருக்க முடியலை ”

விஜயன் அவள் முகத்தில் வாட்டத்தை கவனித்தான். கார் வீடு அடைந்தது. வீட்டில் இறங்கி அவளை சாப்பிட வைத்து”ரெஸ்ட் எடுத்துக்கோ, இனி இங்கேயே இருந்துக்கோ, நாளைக்கு ஆபிஸ் போகலாம்” சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

கரிய உருவம், சொட்ட தலை, படிக்கும் நேரம் கண்ணாடி, எப்போதும் ஒரு பரபரப்பு நிலையில் பார்வை என்று அடையாளம் சொல்லலாம் ஞானசகாயத்தை. ஞாயிறுகளில் சர்ச் போவது, மற்ற நேரத்தில் அவர் வைத்திருந்த சின்ன நூலகத்தில் இருப்பது, எப்போதேனும் யாழ்ப்பாணம் சென்று நிறைய புத்தகம் வாங்கி வருவார். அப்படி வாங்க போகும் போது கூட போனால் காசிற்க்கேற்ப கொட்டு, மீன் கரி, அப்பம், பிட்டு என்று வாங்கி கொடுப்பார். அவர் உண்ண மாட்டார் எப்போதேனும் தோணினால் அவள் தட்டிலிருந்து எடுத்து சுவைத்து பார்ப்பார். பிடிவாதமாக மறுத்தார் ஜென்னி இந்தியா வருவதை. சிங்கப்பூர், கனடா ஏன் ஆஸ்திரேலியா கூட செல் இந்தியா வேண்டாம் என்றார்.ஜென்னி எந்த கேள்விக்கேட்டாலும் பதில் வராது அவரிடம்.சண்டையில் தான் முடியும். முருகு எப்போதும் அக்கா விடுக்கா அப்பா அப்படித்தானே பதில் பேசமாட்டார்!!தெரிந்தே சண்டைக்கு போவானேன் என்பான். அமைதியான மனிதர் தான். எங்கே தொலைந்து போயிருப்பார்? விஜயனுக்கு தெரிந்திருக்க அவளுக்கு தெரியலை. சோகம் தொடங்கியது அவளுக்குள். சிறுவயது நினைவுகள் ஒவ்வொன்றாய் ஊர்வலம் போனது நினைவில். தாய் முகம் மங்கிப்போய் நினைவில் இருந்தது. ஒரு நாள் அவள் இல்லாமல் போனாள், தந்தை பெரிதாக பாதிப்புக்கு உள்ளாகவில்லை.  ரிச்சி ஒரு ஆஸ்திரேலியா குடும்பம் தொலைத்த குழந்தை. கொஞ்ச நாள் அழுதான் தேடி பயனின்றி போக அவர்களுடன் சேர்ந்து வளர்ந்தான். ஆஸ்திரேலியா குடியுரிமை இருந்தது அதனால் வெளிநாட்டவருக்கு படிப்பிற்கு கொடுக்கும் உதவித்தொகையில் படித்து சாப்ட்வார் பொறியாளன் ஆனான்  இப்போது மெல்போர்னில் இருக்கிறான். முருகுவும் பக்கம் பழகிய தாத்தாவின் ஒருவரின் பேரன். தாத்தா இறந்துபோக இவர்களுடன் சேர்ந்து வளர்ந்தான். தாத்தாவின் வெற்றிலை கடையை இன்னொருத்தருக்கு குத்தைகைக்கு விட்டு அதில் படித்துக்கொண்டிருக்கிறான். ஜெயன் அவள் நினைவு தெரிந்த நாள் முதல் கூட இருப்பவன். வயதில் அவர்களில் மூத்தவன். அவன் பின் ரிச்சி, அவள் பின் முருகு. எப்போதும் கோபம் இருக்கும்,எனக்கு இது வேண்டும் என்று அவன் கேட்டால் மறுக்க மாட்டார் ஞானசகாயம். சத்தம், சண்டை, திருவிழா, கலகலப்பாகி இருப்பது எல்லாம் பிடிக்காது. சோகத்தை கொண்டாடுப்பவன் அவன். ரிச்சி ஒரு நல்ல தோழன், ஆசான், நலம் விரும்பி. ஜெயின் உற்ற நண்பன். இருவரும் சேர்ந்து தான் எதுவும் செய்வார்கள்.

ஜெயன் ஞானசகாயத்திற்கு என்ன மாதிரியான உறவுமுறை என்பதை புரிந்துகொண்டால் கண்டுபிடிக்கலாம் இருவரும் காணாமல் போனதை. ஞானசகாயத்தின் கடந்தகாலத்தை கிளறினால் கிடைக்கும் விஜனின் தேடலுக்கான பதில்.

ஜெயன் அரும்பாக்கத்தில் அந்த பாரில் பாட்டில் வாங்கி வீட்டிற்கு போயிருக்கிறான். ஆனால் குடிக்கவில்லை. கிச்சன் சுவற்றில்அழுத்தமான ஈர கை சுவடு. வீட்டில் மற்றப்படி மாற்றங்கள் இல்லை துப்பும் கிடைக்கவில்லை.

ஞானசகாயம் சர்ச் போய் வந்து முருகுவிடம் கைபேசியில் பேசிவிட்டு காணாமல் போயிருக்கிறார். நூலகம் போகிறேன் என்றவர் அங்கு போகலை நூலகம் சாவி வீட்டிலே இருக்கு. அக்கம் பக்கம் இருந்தவர் அவர் சர்ச் போனதை மட்டும் தான் கவனித்திருந்திருக்கின்றனர். வீட்டில் பொருள்களில் மாற்றான் கைரேகைகள் இல்லை. எப்படி காணாமல் போயிருப்பார்?

சரஸ்வதியிடம் கேட்டாலும் கிடைக்கும் அதற்க்கு அவன் பேச சந்தர்ப்பம் கிடைக்கனுமே. இப்போதே ஆரியர் கழகம் கட்சி தொண்டர்கள் சரஸிற்கு என்ன ஆனது என்று ஹாஸ்பத்ரி வாசலில் அமர்ந்திருக்கின்றனர். பத்திரிகைகள் சரஸ் ஒரு நாள் மருத்துவ செலவு கோடிகளில் என்று செய்தி கொடுக்கிறது.

ஸ்வாமி விஜயனை அழைத்து “அம்மா நன்னாத்தான் இருக்கா, அப்பமும் காரமும் எடுத்துண்டு, நீ சஞ்சலப்படாம இரு என்ன!!” என்று சொல்லி அவனை ஜெயனை கண்டுபிடிக்க சொல்லி வற்புறுத்தினார். அவன் செய்லகளை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருந்தது அதை வார்த்தையில் சொல்லவில்லை. விஜயனால் அது புரிந்துக்கொள்ள முடிந்தது.

விஜயனுக்கு சொல்ல பிடிக்கவில்லை.அவன் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்ல புரியவைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அவனோடது என்பது அவனுக்கே இல்லயாம் இதில் பங்கிற்கு ஆள் உண்டு அவன் ஒன்பது வருடம் இளையவன் அவனை கண்டுபிடித்தே ஆக வேண்டிய சூழ்நிலை. சரஸிற்கு நம்பிக்கை யார் மீதும் இல்லை விஜயனை தவிர என்று கூடுதல் தகவல்கள்.

நாகராஜன் விஜயனையும் குருவியையும் கூட சந்திக்க விடாதது சரஸிற்கு கோபமே. அதை அப்படியே காட்டுவதில் விருப்பம் இல்லை அவளிற்கு. செம்பரப்பாக்கம் பக்கத்தில் நிலம் சரஸ் பெயரில் பதிவாகியிருக்கு அதற்க்கு ஒரு பவர் ஆப் அட்டர்னி நாகராஜன் பெயரில் இருக்கிறது. இது மூன்று வருடத்திற்கு முன் நடந்த்திருக்கிறது. அந்த நிலம் அரசிற்கு சொந்தமான நிலம் என்று கூட சொல்லமுடியாது ஏரி நிலம்.தண்ணீர் ஓடும். பொதுநிலம் அபகரிப்பது அதும் ஏறி ஓடும் நிலம் அவள் பெயரில். இப்படி எத்தனையோ கண்டுபிடித்திருக்கிறாள் போன ஆறு மாதத்தில்.

இந்த எண்ணம் என்றைக்கும் அவளுக்கு வந்ததே இல்லை. பொதுவான பட்டா இல்லாத நிலங்கள் அவள் பெயரில் , சென்னை நகர மால்கலில் பங்கு, என்று அவள் பார்வைக்கு வராமல் சொத்துக்கள் சேர்ந்திருக்கு. சென்னையில் நிலங்களை வாங்க அவள் ஆசை பட்டது கிடையாது. அவள் ஆசைகள் என்றுமே இந்தியாவை தாண்டி தான். லண்டன் தெருக்களில் ஆடம்பர விடுதிகள், தேம்ஸ் நதிக்கரையில் மாளிகை, நியூயோர்க்கில் காலிஃபோர்னியாவில்  தொழில்பேட்டைகளில் பங்கு, ஆப்பிரிக்கா காட்டில் வைர வேட்டை இப்படியாகவே அவள் சொத்துக்கள். அவையெல்லாம் தான் விஜயனுக்கு உதவும்.

நாகராஜன் அவன் தந்தையை தொடர்ந்து  கட்சி உள்ளே நுழைந்தவன். அவள் வீட்டில் வேலை ஆட்கள்  மேற்பார்வைக்கு என்று வேலைக்கு சேர்ந்தான். கூட மாட ஒத்தாசைக்கு என்று தேர்தல் வேளையில், மாநாடு வேளைகளில் என்று முன்னேறினான். மேடம் வராங்க நகருங்க என்று வழி செய்வான், சிக்கலான நேரத்தில் கூச்சலிட்டு உதவுவான். விசுவாசத்தை காட்டிக்கொண்டே இருந்தான். எப்போது வஞ்சம் பற்றினான் என்று அவள் அறியாள்.

ஒரு நாள் உற்று நோக்குகையில் வீட்டில் கூடின கூட்டம் நாகராஜனை கொண்டாடியது. அவனுக்கு இரண்டு எடுபிடிகள் இருந்தனர். கைகளை இரண்டு கைபேசி, உயர்தர ஆடை, எகத்தாளம் நிறைந்த தோரணை. கால்களில் பூட்ஸ், கைகளில் தங்கத்தில் காப்பு. அவள் சாப்பிடும் முன் அவனிற்கு பரிமாறப்பட்டன. வெளியாட்களில் பழைய ஆட்கள் குறைந்திருந்தனர். எப்போதிருந்து அவன் அக்கா என்று அழைக்க ஆரம்பித்திருந்தான். யோசிக்கையில் பதில் இல்லை. அவன் உபசாரங்கள் நடிப்போ என்ற சந்தேகம் வரும் நேரம் ஆடிட்டர் மேடம் உங்க பெயரில் ஆயிரத்தி நூறு கோடி மதிப்பில் சொத்து இருக்கு என்று மதிப்பு கணக்கை காட்டினார். அவள் அறிந்து அவள் கணக்குப்படி அறநூறு கோடிக்கு கணக்கில் வரும் சொத்து, அதற்கு  கணக்கில் வராமல் நூறு கோடிக்கு பங்குகள், நூறு கோடிக்கு வெளிநாட்டு முதலீடுகள்.  தற்போதைய நிலைமையில் தொன்னூறு கோடிக்கும் மேல் அவள் வருடத்திற்கு வரி செலுத்தியிருக்கிறாள்.  விசாரித்து மேற்கொண்டு செய்யலாம் எனும் நேரம் பத்திரிகையில் வந்து வழக்குகள் தொடர்ந்து என்று ரசாபாசம் ஆனது.

நாகராஜன் சொத்துப்பிரச்சனையில் முதலில் கலங்கினாலும் கொஞ்சம் தெளிவானான். அவனுக்கு அந்த பணம் வேண்டும் நிச்சயம் மாயம் செய்தேனும் வழக்கை கவிழ்ப்பான், ஆனாலும் அதன் இறுதி என்பது அவள் வாழ்வையும் முடிக்கும் வரை போகும்.

சரஸ் உள்ளுணர்வு உயிருக்கு ஆபத்து என்பதை காட்டிக்கொடுத்தது.

அவள் பாணி நாடகம் தொடங்கினாள். மெடிக்கல்  டெஸ்ட் எடுத்தாள். உடல் பலவீனங்களை பத்திரிகையில் விட்டாள். இன்னொருபக்கம் ஜெயன் தேடலில் தீவிரபடுத்தினாள். ஆட்சி கைப்பற்றின போது முதலமைச்சராக மூத்த உறுப்பினர், சிறந்த பொருளாளர் என்று பெயர் வாங்கிய கண்ணப்பனை உட்காரவைத்தாள். பின் நின்று எண்ணியதை செய்தாள். அடுத்த முறை ஆட்சி அவள் இல்லை என்றாலும் அவள் எண்ணப்படி நடக்க முறைமைகளை செய்தாள்.

மாநில  ஆட்சி என்பது அவள் கட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிர்வாகம் அவர்களுடையது என்பதாக இருந்தது. செயலகம் அவள் கட்டுப்பாட்டில் இருந்தது. பணபுழக்கபட்டாலும் சரஸ் எண்ணினால் மட்டுமே மாநிலத்தில் குண்டும் குழியும் பறிக்க இயலும். இந்த சிலந்திவலை பின்னல் எஸ்.ஆர்.வி செய்துகொடுத்துப்போனது. ஆரியர் கழகம் எப்போதும் அழியாது ஆட்சியில் இருக்க அவர் செய்தது. எஸ்.ஆர்.வியின் பாணியை தொடர்ந்தாள் சரஸ்.

சரஸ் மீறி நடந்தாலும் அது பாதியில் நிற்கும், இல்லை தீப்பிடிக்கும், வழக்கில் சிக்கும், உடையவன் காணாமல் போவான். சரஸ் நிர்வாகத்திற்கு தேவை பணம் அல்ல பயம்.அது நிறையவே இருந்தது மக்களிடத்தில்.

-ஜிவி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://kalakkals.com/valli-rajjiyam-part-5-by-jivi/

 

 

 

 

 

 

 

77total visits.