விஸ்வரூப செய்திகள் 6/7-3

0
14

♈🇮🇳   4pm -6-7-2017-thursday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳 உலக அளவில் செல்பி மோகத்தால் அதிக உயிரிழப்புக்கள் நடக்கும் நாடுகள் குறித்து கர்னிகியா மெல்லன் பல்கலை மற்றும் டில்லி இந்திரபிரஷ்தா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின.
அதில், மற்ற நாட்டினரை விட செல்பி மோகத்தால் அதிகம் உயிரிழப்பவர்கள் இந்தியர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. 2014 மார்ச் முதல் 2016செப்டம்பர் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலக அளவில் செல்பி எடுக்க போய் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து மனோதத்துவ நிபுணர் சல்மா பிரபு கூறுகையில், இது அதீத பைத்தியகாரத்தனம். இது இளைஞர்களிடம் மட்டுமல்ல பெரியவர்களிடமும் உள்ளது. த்ரில் உணர்விற்காக ஆபத்தான இடங்களில் இருந்தும் செல்பி எடுத்து அதனை உடனடியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ஸ்நாப்சாட் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். அதற்கு அதிக லைக்குகள் வர வேண்டும், அதிகமானவர்கள் பார்க்க வேண்டும், கருத்துக்கள் பதிவிட வேண்டும் என்ற எண்ணம். இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தாலும் அதிலிருந்து வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை என்றார்உலக அளவில் செல்பி மோகத்தால் அதிக உயிரிழப்புக்கள் நடக்கும் நாடுகள் குறித்து கர்னிகியா மெல்லன் பல்கலை மற்றும் டில்லி இந்திரபிரஷ்தா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. அதில், மற்ற நாட்டினரை விட செல்பி மோகத்தால் அதிகம் உயிரிழப்பவர்கள் இந்தியர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. 2014 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலக அளவில் செல்பி எடுக்க போய் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து மனோதத்துவ நிபுணர் சல்மா பிரபு கூறுகையில், இது அதீத பைத்தியகாரத்தனம். இது இளைஞர்களிடம் மட்டுமல்ல பெரியவர்களிடமும் உள்ளது. த்ரில் உணர்விற்காக ஆபத்தான இடங்களில் இருந்தும் செல்பி எடுத்து அதனை உடனடியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ஸ்நாப்சாட் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். அதற்கு அதிக லைக்குகள் வர வேண்டும், அதிகமானவர்கள் பார்க்க வேண்டும், கருத்துக்கள் பதிவிட வேண்டும் என்ற எண்ணம். இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தாலும் அதிலிருந்து வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை என்றார்

டிஜிபி பணி நீட்டிப்பு- தலைமை செயலருக்கு ஹைகோர்ட் கிளை நோட்டீஸ்

தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபியை மது விருந்தின் போது தன்னிடமே அண்ணன் காட்டியதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துள்ளார் தம்பி. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில்
♈🇮🇳   மும்பை: கடந்த ஆண்டில் கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பிய பெயர் என்றால் அது பிரணாவ் தனவாடே. பள்ளிகள் அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒன்றில், 1009 ரன்கள் குவித்தவர் இவர்.16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு பிராந்திய கிரிக்கெட் தொடருக்கான அணியில், வினோத் தேஷ்பாண்டேக்கு இடம் கிடைக்கவில்லை. அதேநேரம், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்தது. இது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், வினோத் தேஷ்பாண்டேவுக்கு ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது. உடனே, சச்சின் மீது உங்கள் சந்தேகப்பார்வையை திருப்ப வேண்டாம். கிரிக்கெட்டின் ஜென்டில்மேனான சச்சின், நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறுதான் நடப்பார் என்பதே அவரின் ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திறமையை காட்டி தேஷ்பாண்டே முன்னுக்கு வர வாழ்த்துவதே நம்மால் முடிந்தது

♈🇮🇳   திவாகரன் மூலமாக என்னை பற்றி போட்டுக் கொடுப்பதே எடப்பாடிதான்… சசியிடம் பற்ற வைத்த தினகரன் அப்படியா ????

♈🇮🇳   காவலர் கோாிக்கை மனுவை முதல்வர் தனிபிரிவிற்கு கொடுக்க இணை கமிஷனா் திரு.சுதாகா் ஒரு நபரை அழைத்து கொண்டு தலைமை செயலகம் சென்றுள்ளாா்.முதல்வர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் பிரதீப் இன்று நாகா்கோவில் நாகராஜா கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனியாக வந்தார்.சாதாரண மக்களோடு மக்களாக சென்று சாமி தரிசனம் பிரதீபை ஓ.பி.எஸ்-ன் மகன் என்று கோவில் நிர்வாகிகளுக்கு தெரியாததால் அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. இதனால் அவருடன் வந்த நண்பா் ஓ.பி.எஸ் சின் மகன் என்று கோவில் நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து வைத்த பிறகு அவரை கோவிலின் கருவறை அருகில் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.அதன்பிறகு இந்த விசயம் வெளியே பரவ ஓ.பி.எஸ் சின் ஆதரவாளா்கள் கோவிலுக்கு செல்வதற்கு முன் பிரதீப் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்

♈🇮🇳   கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததை அடுத்து,அவசியம் இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு ராணுவ படைகள் வட கொரியா மீது பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது

♈🇮🇳   இந்திய பிரதமர் மோதி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மற்றும் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன

♈🇮🇳   அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஃப்கன் நாட்டை சேர்ந்த முற்றிலும் மாணவிகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு ரோபோட்டிக் வல்லுனர் குழு தங்கள் படைப்பு ஒரு போட்டியில் கலந்து கொள்வதை ஸ்கைப் மூலம் காணவுள்ளனர்

♈🇮🇳   அரசு பள்ளிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தி தருவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;-தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே பள்ளிகளின் தரத்தை உயர்த்தாது. பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிதான் முக்கியம். அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது. இதுதான் பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும்

♈🇮🇳   திருமணமாகி 2 மாதங்களே ஆகிய நிலையில், கணவனின் மரணத்தை தாங்க முடியாமல், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தானே மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், அம்பர்நாத் பகுதி

♈🇮🇳   உத்தரபிரதேசத்தில் புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு பரிசுப்பெட்டகம் ஒன்று வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் காண்டம் உள்ளிட்ட கருத்தடைக்கு உதவும் மாத்திரைகளையும் வழங்க முடிவு செய்துள்ளனர்

♈🇮🇳   மும்பையில் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காட்கோபர் ரயில் நிலையத்தில்

♈🇮🇳   இந்தோனேசியாவில் 71 வயது பாட்டியுடன் காதல் கொண்ட 16 வயது சிறுவன்,  தற்கொலை செய்துகொள்வோம் என பெற்றோரை மிரட்டி , அந்த பாட்டியை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது

♈🇮🇳   இங்கிலாந்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்று வரை விளக்க முடியாத பல மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது.   இந்த ஸ்டோன் ஹெஞ்ச் யாரால் கட்டப்பட்டது, ஏதற்கு கட்டப்பட்டது என்பது தான் பெரிய மர்மமாகவே உள்ளது. இன்னும் சிலர் இது தானாகவே உருவாலியிருக்குமோ என்றும் சந்தேகிக்கின்றனர்.ஸ்டோன் ஹெஞ்சில் உள்ள ஒவ்வொரு கற்களும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.இந்த கற்கள் அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஸ்டோன் ஹெஞ்சை கட்டி முடிக்க மொத்தம்160 கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தனை எடை கொண்ட கற்களை மலைப் பிரதேசங்களில் இருந்து எவ்வாறு எடுத்துவரப்பட்டிருக்கும், இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைப்பின் பின்னணி என்ன இது எதற்காக பயன்படுத்தபட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை

♈🇮🇳   இங்கிலாந்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பழுதடைந்து பாதியிலேயே நின்றதால், அதில் பயணம் செய்தவர்கள் அந்தரத்தில் தொங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது

♈🇮🇳   மாட்டரசியல் செய்யும் மதவாத சக்திகளை தமிழக அரசு அடக்க வேண்டும்; கால்நடை சந்தைகள் வியாபாரிகள் கோரிக்கை!

♈🇮🇳   மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு ஒன்றில் நிகழ்ந்த சாலை விபத்தில் 78பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

♈🇮🇳   ‘வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதை சீனா நிறுத்த வேண்டும்’ என்று ஐநா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்

♈🇮🇳  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெற்ற குழந்தைகள் முன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்

♈🇮🇳    ஃப்னோம்பென்: கம்போடியாவில் இணையதள மோசடியில் ஈடுபட்ட 70 சீனர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். சீன அரசின் கோரிக்கையை தொடர்ந்து அவர்கள் அந்நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்

♈🇮🇳  தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2லட்சம் வீடுகள் கட்டப்படும்

முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.ஹைபா,

♈🇮🇳  திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 2 போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த ஜானகிராமன்,சேட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

♈🇮🇳  பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு ஜூலை 10ம் தேதியில் இருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய பள்ளியில் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

♈🇮🇳  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அலிப்பிரி, ஸ்ரீவாரிமெட்டில் இருந்து மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு 3நாட்கள் திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

♈🇮🇳  பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் கூறினார். மேலும் இந்தியர்கள்,இஸ்ரேலியர்கள் இடையே நீண்ட காலமாக நட்புறவு நிலவி வருகிறது என்றும் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தெரிவித்தார்

♈🇮🇳  உத்தரகண்டில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

♈🇮🇳  பிஃபா கால்பந்து தரவரிசைப் பட்டியலில்96வது இடத்துக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 100வது இடத்தில் இருந்த இந்திய அணி 4 இடங்கள் முன்னேறி தற்போது 96வது இடத்தை பிடித்துள்ளது

♈🇮🇳  திருவேற்காட்டில் ரூ.20ஆயிரம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

♈🇮🇳  3 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குப்பதிவு

♈🇮🇳  கேளிக்கை வரி ரத்து: திரைத்துறையினருடன் அமைச்சர்கள் பேச்சு

♈🇮🇳  போலீஸ் மாநாடு நடத்த வேண்டும்: திமுக கோரிக்கை

  1. ♈🇮🇳   *vishwarubam 🇮🇳♈

162total visits.