விஸ்வரூப செய்திகள் 10/5-1

0
10

♈🇮🇳 🌴 *9am-10-5-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 ‘முஸ்லிம்களில் மும்முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையானது, மனித உரிமையை மீறுவதாக இருக்கக் கூடாது’ என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பில் கூறியுள்ளது

♈🇮🇳 🌴 அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால், பணியில் இருந்து நீக்கப்படுவர்’ என, ம.பி.,யில் உள்ள ஒரு பஞ்சாயத்து நிர்வாகம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

♈🇮🇳 🌴 ஏமனில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுனலில், தன்னை காப்பாற்றுமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது

♈🇮🇳 🌴 தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு அளித்த பேட்டி:தமிழகத்தில், காங்., வலுப்பெற வேண்டும் என்றால், தனி தலைமை இருந்தால் முடியாது. கூட்டு தலைமை இருந்தால் மட்டுமே, தமிழகத்தில் கட்சி வலிமை பெறும். மேலும், அடிமட்ட தொண்டர்களின் மனதை அறிந்து, தலைமை செயல்பட வேண்டும். அ.தி.மு.க.,வில் பிளவு என்பது, அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதற்காக, மக்கள் நல திட்டங்களில் தொய்வு ஏற்படக் கூடாது

♈🇮🇳 🌴 வரும், 26ல், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து, மூன்றாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. அதன் பின், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன

♈🇮🇳 🌴 தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் விலைகள் கிடுகிடு என உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருகிறது. அதைபோல அண்டை மாநிலமான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவிலும் வறட்சி நிலவுவதால் காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது. சென்னை -கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்தது. இதை போல தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது

♈🇮🇳 🌴 திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரியாக தமிழக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என உச்சநீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அதிகாரியாக கேரள ஐஏஎஸ் அதிகாரி சதீஷ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்பான வழக்கில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கூறுைகயில் தமிழகத்தை சேர்ந்தவரும் கேரள ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ஆர். கண்ணன் அல்லது கேரள முன்னாள் தலைமை செயலாளர் நீலா கங்காதரன் ஆகியோரில் ஒருவரை புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதில் புதிய நிர்வாக அதிகாரியாக கண்ணன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

♈🇮🇳 🌴 அவிநாசி அருகே 5 போலி போலீசார் கைது

♈🇮🇳 🌴 விழுப்புரத்தில் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் தொடங்கியது

♈🇮🇳 🌴 ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ராணுவ அதிகாரி உடல் கண்டெடுப்பு

♈🇮🇳 🌴 அலகாபாத்தில் கார் மீது டிரக் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

♈🇮🇳 🌴 திண்டிவனம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தம்பதி உயிரிழப்பு

♈🇮🇳 🌴 மேக்ரானுடன் மோடி பேச்சு

♈🇮🇳 🌴 வடபழனி தீ விபத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

♈🇮🇳 🌴 23ம் தேதி ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்

♈🇮🇳 🌴 மனைவியை கொன்ற கணவன் கைது-நொய்டா: நொய்டா மமுரா கிராமத்தை சேர்ந்த பெண் சுகந்தா. நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு

♈🇮🇳 🌴 சென்னையில் கிண்டி, கோடம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் 20க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.சென்னையில் குப்பைகளை ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து கசியும் கழிவுகள் சாலையில் படிந்திருந்தது.

♈🇮🇳 🌴 உணவு நச்சு காரணமாக பாதிக்கப்பட்ட சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

♈🇮🇳 🌴 திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் 14–ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஓடும்

♈🇮🇳 🌴 பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

♈🇮🇳 🌴 உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் ஜகார்த்தா மாகாண கவர்னருக்கு 2 ஆண்டு சிறை

♈🇮🇳 🌴 முதல்வர் பழனிசாமியுடன் அய்யாகண்ணு சந்திப்பு

♈🇮🇳 🌴 கரூர் அருகே பைக் – கார் மோதி விபத்து

♈🇮🇳 🌴 ஜம்மு காஷ்மீரில் ராணுவ டாக்டர் கொலை

♈🇮🇳 🌴 கார் விபத்தில் ஆந்திர அமைச்சரின் மகன் பலி

♈🇮🇳 🌴 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் ரயில் முன்பதிவு

♈🇮🇳 🌴 ஜாதவ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை

♈🇮🇳 🌴 போதைப்பொருள் கடத்தியதாக கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட, 3 தமிழக மீனவர்களை நேற்று மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது

♈🇮🇳 🌴 ஏமனில் காலரா நோயால் 34 பேர் பலி

♈🇮🇳 🌴 ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை குறைக்காமல் வழங்கவேண்டும், நிறுத்தப்பட்ட முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் பென்சனை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று (மே9) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

♈🇮🇳 🌴 வங்கிகளின் வாரக் கடன்களை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வங்கி அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் சென்னையில் செவ்வாயன்று (மே 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

♈🇮🇳 🌴 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 12 ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தனது அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்

♈🇮🇳 🌴 மேற்கு வங்க மாநிலம் திடகாரில், திடகர் வேகன்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில், புவி அறிவியல் அமைச்சக செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையே மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆழ்கடலின் அடியில் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கும் திட்டத்துக்காக மத்திய அரசு 10,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். மேலும், இதற்காக பல்வேறு நாடுகளுடன் தொழில்நுட்ப கூட்டு வைக்கப்பட்டுள்ளது. தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக மேற்கொள்ளும் மாற்றத்துக்கான நடவடிக்கையாக இது இருக்கும். இந்தியாவின் ஆழ்கடல் எரிசக்தி, ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கனிமங்கள் உள்ளிட்டவற்றில் பெரிய தாக்கத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும். இந்த திட்டத்தில், சென்னை கடற்கரையில் கடல் நீரை குடிநீராக்கும் 2,000 கோடி திட்டமும் அடங்கும். இதனால் நகரின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு கூறினார்

♈🇮🇳 🌴 ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி வெளியாகவுள்ள ‘லென்ஸ்’ என்ற திரைப்படத்தின் சாராம்சம்

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

636total visits.