விஸ்வரூப செய்திகள் 10/7-1

0
14

♈  6am -10-7-2017-monday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்!விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரம் தாலுக்கா ஆயந்தூர் கிராமத்தில்

♈   தலைமை செயலர்களுடன் மோடி இன்று ஆலோசனை

♈   இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இன்று தேர்வு

♈   பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்

♈   தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் -கேரள மாநிலத்தில் உள்ள பூக்கொட்டுகாவு கிராமத்தை சேர்ந்த 300பெண்கள்,தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி அசத்தி வருகின்றனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது பூக்கொட்டுகாவு கிராமம்

♈   ஆசிய தடகளம்: இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தகுதி நீக்கம்

♈    பெட்ரோல்: ரூ 66.25 காசுகள்; டீசல் : 57.44

♈   ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை மீட்டது ஈராக் ராணுவம்

♈   சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

♈   120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது

♈   திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 56 ஆயிரத்து 540 பக்தர்கள் நேற்று மட்டும் சுவாமி தரிசனம் செய்தனர்

♈   மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போன்று, பிற ரயில் நிலையங்களிலும், டிக்கெட்டுகளை, ‘ஸ்கேன்’ செய்து, பயணியரை அனுமதிக்கும் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது
♈   போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: செய்தித்தாள், வார இதழ்களை அந்தந்த நிறுவனங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றன. அதை மர்ம நபர்கள் திருடி, இணையம், சமூக வலைதளங்களிலும் பரபரப்பி வருகின்றனர்; இது, காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு அவர்கள் கூறினர்

♈  இந்திய வகை மாம்பழமான ராடூல் வகை மாம்பழங்களுக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் ராடூல் என்ற கிராமத்தில் ராடூல் வகை மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் பாகிஸ்தானில் முல்தான் என்ற பகுதியிலும் அன்வர் ராடூல் என்ற மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாம்பழத்திற்கு தற்போது இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகிறது

♈ காஷ்மீரில், தீவிரவாதி பர்கான் வானியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பிரிவினைவாதிகள் பேரணி நடத்த அழைப்பு விடுத்தனர். இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வதந்தி பரவும் என்பதால் இணையதள சேவைகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் நேற்று அமைதி நிலவியதை தொடர்ந்து,காலை முதல் தடை உத்தரவுகள் விலக்கி கொள்ளப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக முடக்கப்பட்ட இன்டர்நெட் சேவையும் திரும்ப அளிக்கப்பட்டது

♈ திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜோதிபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் டி.பாபு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பொன்னுரங்கம் ரங்கேஷ்,நல்லசிவம், பாலசுப்ரமணியம், கே.பி.துரை,ஜானகிராமன், கலைமணி, சங்கரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கட்சியின் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். மாவட்ட துணை தலைவர் ஜாணி நன்றி தெரிவித்தார்

♈    சென்னை ஐசிஎப் பர்னிசிங் பிரிவில் ரயில் மியூசியம் உள்ளது. இது  2002ம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமாரால் திறந்துவைக்கப்பட்டது. இங்கு பாரம்பரியம் மிக்க நீராவி என்ஜின் மற்றும்  பல்வேறு வகையிலான ஓவியங்கள், குழந்தைகள் விளையாடும் பூங்கா, ஊட்டி ரயில்  போன்ற மாதிரி உள்ளன. இங்கு ஒரு மாதத்திற்கு சுமார்7 ஆயிரம் பேர் வரை  பார்வையிட்டு செல்கிறார்கள்.  இங்கு 1962ம் ஆண்டு ஐசிஎப்பில் பொது  மேலாளராக பணிபுரிந்த ஹைதரி என்பவர் பெயரில் ஹைதரி கேலரி நேற்று புதிதாக  தொடங்கப்பட்டது. ரயிலின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை உள்ள ரயில்  மாதிரிகள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ரயில் வடிவம் உள்ளிட்ட பல்வேறு  சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலரி தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை பரத நாட்டிய  கலைஞர் கலைமாமணி ஊர்மிளா சத்தியநாராயணன், சென்னை ஃபைன் ஆர்ட்சின் ஆர்ட்  டைரக்டர் சரளா பானர்ஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஐசிஎப் பொது  மேலாளர்  எஸ். மணி முன்னிலை வகித்தார். இதில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது

♈  சாலையோர கடைகளில் மளிகை பொருள்களை வாங்கும் மக்கள்-ஜிஎஸ்டியை தவிர்க்க இந்த யுத்தி-சாலையோர கடைகளுக்கு அமோக வரவேற்பு

♈  திருமணமான முதல் இரவிலேயே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

173total visits.