விஸ்வரூப செய்திகள் 12/5-3

0
14

♈🇮🇳 🌴 *3pm-12-5-2017-friday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 மலையக மாணவர் கல்விக்கும் இந்தியா ஊக்கத் தொகை-மலையக பாடசாலைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியா பங்களிப்பு-மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்-மோடி

♈🇮🇳 🌴 மன்னிப்பு கோர தயார்- உச்சநீதிமன்றத்தில் கர்ணன் வக்கீல்-தனியாக மன்னிப்பு மனுவைத் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

♈🇮🇳 🌴 என்னது 33 மாவட்டங்களா? கல்வித்துறையின் அலட்சிய லிஸ்ட்..இப்படித் தான் பேப்பரும் திருத்திருப்பாங்களோ?
தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் மாவட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் என அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பரபரப்பில் இருந்தவர்களுக்கு தொடக்கம் முதலே சந்தேகத்தை ஏற்படுத்தியது தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் என்பதாகவே இருந்தது. ஏனெனில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பள்ளிக் கல்வித் துறை அளித்த பட்டியலில் 33 மாவட்டங்கள் என்று இருந்தது

♈🇮🇳 🌴 காக்கிச்சட்டை
கவுரவத்தை -அந்த
கர்ணனிடம் நான்
கொடையாக பெறவில்லை
உடலை வலுவாக்கி
உள்ளத்தை சீராக்கி
உண்மையாகப் பெற்ற என்
உயிரின் உடையே “”காக்கி””
லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர்த்து என்று
கவிதை பேச
கட்டுரை எழுத
காவல்துறை என்னை
கண்டெடுக்கவில்லை
பிறர் என்னைப்
புறக்கணித்தாலும்
புண்படவும் மாட்டேன்
புண்படுத்தவும் மாட்டேன்
வெண்பனி எனக்கு உறவுமில்லை
வெயிலும் எனக்கு​ பகையுமில்லை
அணியும் என் காக்கிச்சட்டை
பணியாது நயவஞ்சகரிடம்.

-பா.பொன் இருளன் காவலர்.
விருதுநகா் மாவட்டம்.

♈🇮🇳 🌴 பொதுமக்களின் ஆட்சபேனை மீறி நேற்று மாலை செல்வ விநாயகர் கோவில் தெருவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.விஸ்வரூபம் பத்திரிக்கை ஆசிரியர் அவர்களுக்கு , சென்னை,காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூா் துணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி/மின் பகிா்மான கழகத்தின் உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் வார்டு எண் 4. No.8, ஜவஹர்லால் நேரு தெருவில் எபினேசர் மழலை பள்ளி அருகில் உள்ள GK வணிக வளாகம் என்பது சட்ட விரோதமாக கட்டப்பட்ட வணிக வளாகம், மேலும் கட்டிடத்திற்கு முறையான DTCP எனப்படும் கட்டிட திட்ட அனுமதி கூட பெறாத நிலையிலும், முறையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் கூட மின்வாரியத்தில் வழங்காத நிலையிலும், மின்வாரிய சட்ட திட்டங்களுக்கு மாறாக 36 உயர் மின்னழுத்த மின் இணைப்பு சட்ட விரோதமாக உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன் அவர்களால் GK வணிக வளாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல வார்டு எண் 5. No.23, காமராஜர் நெடுஞ்சாலையில் காமாட்சி அம்மன் கோயில் எதிரில், பொன்னு சூப்பர் மார்கெட் அருகில்,புதியதாக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் கட்டிடத்திற்கும் முறையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் கூட மின்வாரியத்தில் முறையாக வழங்காத நிலையில் சட்ட விரோதமாக உயர் மின்னழுத்த மின் இணைப்பு சட்ட விரோதமாக உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன் அவர்களால்வணிக வளாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.மேற்கண்ட இரண்டு வணிக வளாகத்திற்கும் கையூட்டாக சில லட்சங்களைப் பெற்றுக்கொண்டு திருட்டு தனமாக மின் இணைப்பை டிரான்ஸ்பார்மர் அமைக்கமால் நேரடியாக வழங்கினார். அப்பகுதி மக்களின் பகிரங்க குற்றசாட்டு-அதிகாரிகளின் பதில் கிடைக்குமா
♈🇮🇳 🌴 எஸ்எம்எஸ்.,சில் மதிப்பெண்: பெற்றோர் பாராட்டுவதாக அமைச்சர் தகவல்

♈🇮🇳 🌴 சுவாமிமலை தேரோட்டம்: சப்பரத்தில் நடத்தியதால் எதிர்ப்பு

♈🇮🇳 🌴 நாகை: கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பேர் கைது

♈🇮🇳 🌴 திண்டுக்கல்: தாடிக்கொம்பு பகுதியில் டாஸ்மாக் கடை சூறை

♈🇮🇳 🌴 திருவாரூர்: திருத்துறைபூண்டி, மாங்குடி, மடப்புரம் பகுதிகளில் மழை

♈🇮🇳 🌴 தமிழகத்தில் வீடு இல்லாமல் 10 லட்சம் பேர்: அமைச்சர்

♈🇮🇳 🌴 இலங்கை வளர்ச்சியில் தமிழர் பங்கு முக்கியமானது: மோடி

♈🇮🇳 🌴 பணம் எடுத்தால் கட்டணமா? : எஸ்பிஐ மறுப்பு

♈🇮🇳 🌴 சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நீதிபதி கர்ணனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒரு நீதிபதியை விசாரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

♈🇮🇳 🌴 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

♈🇮🇳 🌴 நீதிபதி கர்ணன் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

♈🇮🇳 🌴 இத்தாலியில் தபால்நிலையம் வெளியே குண்டு வெடிப்பு

♈🇮🇳 🌴 அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்த அதிகாரிகள் மீது விசாரணை

♈🇮🇳 🌴 புழல் பகுதியில் சுகாதாரமற்ற 50 குடிநீர் கேன்கள் பறிமுதல்

♈🇮🇳 🌴 அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

♈🇮🇳 🌴 காசிமேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு

♈🇮🇳 🌴 இந்தியா உதவியுடன் இலங்கையில் மேலும் 10ஆயிரம் வீடுகள் கட்டப்படும்: பிரதமர் மோடி

♈🇮🇳 🌴 பழமை வாய்ந்த தமிழ் மொழியை பேசுவதில் பெருமை: இலங்கையில் தொழிலாளர்கள் மத்தியில் மோடி பேச்சு

♈🇮🇳 🌴 இந்தியாவே வியக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் : செங்கோட்டையன்

♈🇮🇳 🌴 இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம் அமெரிக்க உளவுத்துறை

♈🇮🇳 🌴 காஷ்மீரில் இளம் ராணுவ அதிகாரி கொலை: பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டது போலீஸ்

♈🇮🇳 🌴 அசாம் மாநிலம் ஜோர்ஹாத் நகரை அடுத்த கூடொங்கா டீ தோட்டத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். வேலையை முடித்து இரவு 8 மணியளவில் வேனில் வீடு திரும்புவது வழக்கம்.இந்நிலையில் 12 பெண்கள் சென்ற வேன் ஒன்று, 9 பெண்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட்டு, பின்னர் 3 பெண்களுடன் பயணித்தது.இதனை பயன்படுத்திக்கொண்டு, ஓட்டுநர் யாருமில்லாத மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி, வண்டியின் ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து 3 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் வண்டியில் இருந்து கீழே குதித்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

99total visits.