விஸ்வரூப செய்திகள் 12/6-1

0
11

*🔵⚪@🅱REAKING EVENT’S ன் தற்போதைய நிகழ்வுகள் :*

*🔵⚪ கர்நாடக மாநிலத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

*🔵⚪ ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்*

*🔵⚪ பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்*

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அதிமுக, புரட்சிபாரதம், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 25 பேர் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மேடவாக்கம் மூர்த்தி, கிளை செயலாளர் மகிமனோகரன், திருவஞ்சேரி இம்மானுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

*🔵⚪ கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் எல்லையான ஓசூரில் நிறுத்தம்; மேகதாது அணை கட்ட கோரி கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு*

*🔵⚪ கர்நாடகத்தில் இன்று கன்னட அமைபுகள் முழு அடைப்பு;கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய கன்னட அமைப்புகள் கோரிக்கை*

*🔵⚪ கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன*

*🔵⚪ கொடுங்கையூரில் பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது*

*🔵⚪ மணலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை; இரவில் மக்கள் தவிப்பு*

*🔵⚪ திருவொற்றியூர்-மணலி சாலையில் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்காவிட்டால் திமுக போராட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த முடிவு*

*🔵⚪ சிறப்பு வாகன சோதனையில் ஒரே இரவில் 750 வழக்குகள் பதிவு: ரூ.3 லட்சம் அபராதம் வசூல்*

*🔵⚪ அண்ணா சாலையில் சிமென்ட் கலவை வெளியேறியதால் பரபரப்பு: ஆதம்பாக்கத்தில் திடீர் பள்ளம்*

*🔵⚪சென்னை : டிபிஐ வளாகத்தில் திடீர் தீவிபத்து 12 வாகனங்கள் எலும்புக்கூடானது*

*🔵⚪ தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 2வது நாளாக நிறுத்தம் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீண்டும் அவசர ஆலோசனை*

*🔵⚪ எங்கள் உயிருக்கு சசிகலா குடும்பத்தால் ஆபத்து கமிஷனர் அலுவலகத்தில் மாதவன் பரபரப்பு புகார்*

*🔵⚪ தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை*

*🔵⚪ ஈரோட்டில் முதல்வர் பழனிச்சாமி உறுதி குறைந்த விலையில் மணல் விற்பனை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும்*

*🔵⚪ வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*

*🔵⚪ காஷ்மீரில் வெடிகுண்டு வீச்சு சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் காயம்*

*🔵⚪ நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2% வீழ்ச்சி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு*

*🔵⚪ உபி. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தி மொழி பாடத்தில் 5 லட்சம் பேர் தோல்வி*

*🔵⚪ சுற்றுலா பயணிகளை கவர பத்மநாபசுவாமி கோயில் நகைகள் புகைப்படங்களை வெளியிட முடிவு: தேவசம் அமைச்சர் தகவல்*

*🔵⚪ 2 நாள் விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று கூடுகிறது: அலுவல் நடைபெறுமா?*

*விஸ்வரூபம்*

147total visits.