விஸ்வரூப செய்திகள் 12/6-2

0
20

*_✴🇮🇳✴ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது: ராணுவ செய்தி தொடர்பாளர் தகவல்_*

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் காட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது. பல வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் மேத்தா தெரிவித்துள்ளார்.
*_✴🇮🇳✴நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி_*

டெல்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது.
*_✴🇮🇳✴புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.5,500 ஆக உயர்வு: அமைச்சர் அறிவிப்பு_*

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.5,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்துள்ளார். ரூ.4 ஆயிரமாக இருந்த நிவாரண நிதி ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களிலிருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டதை அடுத்து நிவாரணத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மல்லாடி கூறியுள்ளார்.
*_✴🇮🇳✴திருப்பூர் அருகே முதல்வர், சபாநாயகரின் பேனர் கிழிப்பு_*

திருப்பூர்: திருப்பூர் அடுத்த அவிநாசியில் முதல்வர், சபாநாயகரின் புகைப்படம் இடம்பெற்றிருந்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகம் அருகே உள்ள பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர். நலத்திட்ட உதவி விழாவில் சபாநாயகர் பங்கேற்கும் நிலையில் அங்கு பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.

*_✴🇮🇳✴புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் யூஜிசி தணிக்கை குழு ஆய்வு_*

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் யூஜிசி குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 13-வது இடத்திலிருந்து 37-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் யூஜிசி தணிக்கை குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் 5 நாட்களுக்கு குழு ஆய்வு செய்ய உள்ளது.

*_✴🇮🇳✴மதுரை அருகே பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு_*

மதுரை: மதுரை அருகே மேலூரில் பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால் கலப்படமா என்பது குறித்து ஆய்வு செய்ய மதுரை மாவட்டத்தில் 2-ம் கட்ட முகாம் தொடங்கியுள்ளது. கோ. புதூரை தொடர்ந்து மேலூரில் பால் தரப்பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற பரிசோதனையில் பாலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழுப்பின் அளவு 3.5%க்கு பதிலாக 3% ஆக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*_✴🇮🇳✴பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஹாக்கி போட்டிகள் ஸ்கட்லாந்துக்கு மாற்றம்_*

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவிருந்த ஹாக்கி போட்டிகள் ஸ்கட்லாந்துக்கு மாற்றப்பட்டன. பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் கோரிக்கையை சர்வதசே ஹாக்கி கூட்டமைப்பு ஏற்று கொண்டுள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகள் அங்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

179total visits.