விஸ்வரூப செய்திகள் 13/5-2

0
13

♈🇮🇳 🌴 *5pm-13-5-2017-saturday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா உட்பட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு மாற்றப்பட்டார். புதிய போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனருக்கு சென்னையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் தமிழக அரசு நியமித்திருக்கலாம் என கருதப்படுகிறது

♈🇮🇳 🌴 நான் சொன்னா யாரு நம்பறீங்க -இப்ப புரியுதுங்களா நம்ம வருமானவரித்துறை,அமலாக்கத்துறை பிற…பிற..விஸ்வரூபம் -நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற வாதம் இருந்து வருகிறது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஜான் பி மெக்கன் மோப்ப சக்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இத்தகவலை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா இதுகுறித்து ஒருஆய்வு கட்டுரை வெளியிட்டார். அதில் மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳 🌴 போதையில் வாக்கிடாக்கியை தொலைத்துவிட்டு தேடித்திரிந்த ஆய்வாளர்!கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தால் காவல்நிலையத்தை அணுகும் மக்களைத் தான் காலம்காலமாகப் பார்த்திருப்போம். ஆனால், தன் சொந்த வாக்கிடாக்கியை அதுவும் போதையில் இருக்கும் போது தொலைத்துவிட்டு மக்களிடம் கேட்டுத் திரிந்த காவல்துறை ஆய்வாளரைப் பார்த்திருப்போமா? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது கடலூர் மாவட்டத்தில்.கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு காவல் கோட்ட சரகத்துக்கு உட்பட்ட சோழத்தரத்தில் காவல் நிலையம் உள்ளது. இதில் உதவி ஆய்வாளராக மனோகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளி இரவு போதையில் வாக்கிடாக்கியை தொலைத்துள்ளார். பின்னர் காலையில் எழுந்து இரவு எந்த இடத்திற்கு சென்றாரோ, அந்த அந்த இடத்திற்கு சென்று கடைக்காரர்கள், ஓட்டுனர்கள் என அனைவரிடம் ரகசியமாக வாக்கிடாக்கியைப் பற்றி விசாரித்து வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது ஓட்டுனர் ஒருவர் வாக்கிடாக்கி கீழே கிடந்தது எனவும், மதியதுக்கு மேல் வந்து காவல்நிலையத்தில் வந்து ஒப்படைத்துவிட்டார் என்றனர்

♈🇮🇳 🌴 மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் அருகே பிரம்மபுரி என்ற வனப்பகுதிக்கு சென்றவர்களை கரடி தாக்கியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது

♈🇮🇳 🌴 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாலாட்டின்புத்தூர் கிராமத்தின் அரசு பேருந்து நடத்துனர் வேலுச்சாமியின் மகன் கவியரசன் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்

♈🇮🇳 🌴 கடலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கு கீழ் தொழில் செய்யும் உணவு வணிகர்கள் இ–சேவை மையங்கள் மூலமாக பதிவு சான்றை பெற்றுக்கொள்ளலாம்.உணவு பாதுகாப்பு உரிமம் பெற www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உணவுபொருட்களின் தரம் குறித்தான புகார்களை தெரிவிக்க 9444042322 என்ற புதிய ‘வாட்ஸ்–அப்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடைகாலங்களில் கார்பைடு கல்லை பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள், தரம் இல்லாத குடிநீர் பாட்டில்கள், பால் மற்றும் பால்பொருட்கள், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ்–அப் மூலம் தெரிவிக்கலாம்.மேற்கண்டவாறு கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இன்று நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகள் மற்றும் தனியார் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கிருந்த பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் நகராட்சி அதிகாரிகளிடம், பேருந்து நிலைய பகுதிகளில் தனியார் பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நீங்களே பேனர் வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்து, பின்பு நீங்களே அகற்றுகிறீர்கள் என்றும், நகராட்சி குடிநீரை தனியார் ஓட்டலுக்கு பழுப்பு லைன் மூலம் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு அகற்றுகிறீர்கள் என்றும், பேருந்து நிலைய கழிவறை கழிவுநீர் பேருந்து நிலைய கால்வாயில் செல்ல வழியின்றி தேங்கிக் கிடக்கிறதென்றும், துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் நித்தம் அவதிப்பட்டு வருவதாகவும், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறி நாகராட்சி அதிகாரிகளிடத்தில் ஆவேசப்பட்டனர்.பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திகைத்து நின்றனர். பின்பு பேருந்து நிலைய கழிப்பிட கழிவு நீர் தேங்கி நிற்பதை சுத்தம் செய்யாவிடில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் போராட்டத்தைக் கையிலெடுக்கப் போவதாக பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

♈🇮🇳 🌴 புதுக்கோட்டை: நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது

♈🇮🇳 🌴 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சண்டையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டது

தமிழகத்தில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் புனே போலீசார் புதுவித விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினால் உயிர் போய்விடும் என்று நேரடியாக எமதர்மராஜாவே எச்சரிக்கின்றனர்

♈🇮🇳 🌴 சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சாமியார் ஓம் ஸ்வாமி பெண் மாடல் ஒருவருக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்

♈🇮🇳 🌴 காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கல்லப்பாவை, மனநலம் பாதித்தவர், சோனியா காந்தி குடும்பத்தின் நாய்க்குட்டி என்றெல்லாம் அமவமரியாதையாக லைவ் ஷோவில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமி.

♈🇮🇳 🌴 அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது
இந்தப் பருவத்தில் முதன் முறையாக ஆந்திரத்தைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள் ஆறு பேர் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர்

♈🇮🇳 🌴 பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் அருகே ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு, 10 பேர் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 இலங்கை அனுமதி மறுப்பை தொடர்ந்து சீனாவின் நீர்மூழ்கி கப்பல் கராச்சி செல்கிறது

♈🇮🇳 🌴 நிலுவைத்தொகையை முழுமையாக எப்போது வழங்கப்படும் என உறுதியாக கூறவில்லை என்று அரசுடன் பேச்சு நடத்திய பின் தொ.மு.ச. நிர்வாகி சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.மேலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

♈🇮🇳 🌴 போக்குவரத்து ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது

♈🇮🇳 🌴 குளித்தலை அருகே பொருள் வெடித்து வீட்டின் சுவர் இடிந்ததில் ஒருவர் பலி

♈🇮🇳 🌴 விபத்துகளில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

♈🇮🇳 🌴 ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் : பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

♈🇮🇳 🌴 புதுச்சேரியில் குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை : முதலமைச்சர் நாராயணசாமி

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் : முத்தரசன்

♈🇮🇳 🌴 பச்சிளம் குழந்தை உயிரிழந்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை ரத்து-பச்சிளம் குழந்தை உயிரிழந்த வழக்கில் தாய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் எடப்பாடி சிவகாமிக்கு சேலம் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். குழந்தையை ஏரிக்கரையில் வீசிய குற்றத்துக்காக தாய்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

♈🇮🇳 🌴 தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

♈🇮🇳 🌴 மே 18 ல் தலைமை செயலகம் முற்றுகை: மாற்று திறனாளி ஆசிரியர் சங்கம் முடிவு

♈🇮🇳 🌴 டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி திட்டத்திற்கு பாதுகாப்பு: டிஜிபி ஆலோசனை

♈🇮🇳 🌴 நெல்லையில் தனியார் குழந்தைகள் காப்பகத்திற்கு சீல்

♈🇮🇳 🌴 காலில் விழ வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி அன்பு வேண்டுகோள்

♈🇮🇳 🌴 காஞ்சிபுரம்: டாஸ்மாக் கடைக்கு எதிராக சிறுவன் தலைமையில் போராட்டம் மே

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

145total visits.