விஸ்வரூப செய்திகள் 14/5-2

0
20

♈🇮🇳 🌴 *11am-14-5-2017-sunday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 பகிரங்க புகார்- பதில் கிடைக்குமா-கேள்விகள் மற்றும் புகார்களுக்கு விஸ்வரூபம் பத்திரிக்கை ஆசிரியர் அவர்கள், சென்னை அரசு இராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள மருத்துவ பதிவேடு துறை அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறப்பு சான்றிதழ் திருத்த உத்தரவு ஆணைகளை பெற்றவர்களின் பட்டியல் அரசு பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கள ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்கள் ஏதாவது மறைக்கப்பட்டுள்ளதா?, அல்லது ஆவணங்களில் ஏதாவது தவறு நடந்திருப்பதிற்கான வாய்ப்புள்ளதா? ஒருவேளை அரசு பதிவேடுகளில் குற்றம் நடந்து இருப்பதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ பதிவேடு அலுவலர் திரு.ரோஷன் அக்தர் மற்றும் அவருக்குஉதவிய அதிகாரிகளையும் விஸ்வரூபம் பத்திரிக்கை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும், தங்களை ஏழை எளிய மக்களின் சாா்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

♈🇮🇳 🌴 விஸ்வரூபம் பத்திரிக்கை ஆசிரியர் அவர்களுக்கு -பெருங்களத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.8, என்.ஜி.ஒ காலனி மெயின் ரோட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விளையாட்டுதிடல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட பின் ஒய்வு எடுக்க இருக்கைகளும், விடுமுறை நாட்களில் குழந்தைகள் சந்தோசமாக பொழுதை கழிக்க விளையாட்டு உபகரணங்களும், இளைஞர்கள் பொழுதை கழிக்க பேட்மிட்டன் தளம் ஒன்றும் அமைத்து தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளையாட்டு திடலில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாலை 6:30 மணிக்கு மேல் பூங்காவை யாரும் பயன்படுத்த முடியவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு சில சமூக விரோதிகள் பூங்காவினுள் மது அருந்துவதும், அங்கே வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது, மது பாட்டில்களை உடைப்பது என சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதன் காரணமாக நாங்கள் பூங்காவில் உள்ள உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் – பெருங்களத்தூர் பேரூராட்சி மக்கள்

♈🇮🇳 🌴 குடியாத்தம் அருகே லால்பாக் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் புகை மூட்டம் காரணமாக சனிக்கிழமை மாலை பயணிகள் ரயிலை நிறுத்தினர்

♈🇮🇳 🌴 பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எலித் தொல்லை தாங்க முடியவில்லை. எலிகள் கடித்ததில் ஏசி வயர்கள் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதன பெட்டிகள் வேலை செய்யாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்

♈🇮🇳 🌴 பேஸ்புக் மூலம் ஒரு நபர் கொடுத்த தகவலால் டெல்லியில் சிவப்பு விளக்குப்பகுதியில் சித்ரவதைக்குள்ளான 15 வயது சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்

♈🇮🇳 🌴 சர்வதேச விசாக தினத்தின் நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இலங்கை வந்துள்ளார்

♈🇮🇳 🌴 தன்னால் அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்ய முடியாது என்று உணர்ந்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா மற்றும் பன்னீர் அணிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட புதிய முடிவெடுத்துள்ளாராம்

♈🇮🇳 🌴 நெல்லை: ஓய்வறையில் படுத்திருந்த பெண் போலீஸ்காரரை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

♈🇮🇳 🌴 திருவாரூர் : நீடாமங்கலம் அருகே கணவர் கொடுமைப்படுத்தியதால் அதை தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண் கவுரி. மரணத்திற்கு முன்பு அவர் தனது பெற்றோருக்கு கண்ணீருடன் செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்

♈🇮🇳 🌴 குஜராத் மாநிலத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு மணமகன் மாரடைப்பால் மரணம் அடைந்த சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது

♈🇮🇳 🌴 டிரம்ப் அரசு நிர்வாகம் பொறுப்பெடுத்த பின்னர் பள்ளிக்குழந்தைகளின் உணவில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிச்சேல், ”’இங்குதான் நாம் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இப்படிப்பட்ட முடிவுகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம் குழந்தைகள் பள்ளிகளில் நல்ல உணவை சாப்பிட நீங்கள் விருப்பப்பட மாட்டீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு என்னதான் பிரச்னை? என்னை இந்த விஷயத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிடுங்கள். ஆனால், ஒருவர் நம் குழந்தைகள் குப்பையைச் சாப்பிடுவதற்கு சம்மதம் என்று சொல்கிறார் என்றால், அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை எப்படி நாம் கொண்டாட முடியும்?’ என்று சற்று காட்டமாகவே டிரம்ப் அரசை விமர்சித்தார்

♈🇮🇳 🌴 வட கொரியா தனது மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகிலிருந்து பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴 இந்த வாரம் ஒருநாள் காலை வேளையில் சௌதி அரேபியாவிலுள்ள மகளிர் பள்ளி ஒன்றில், ஆசிரியைகளின் அறையில் நுழைந்த தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். காதலை வெளிக்காட்டும் தலைசிறந்த அலங்காரங்கள் அங்கு செய்யப்பட்டிருந்ததை கண்டு அவர் குழப்பமடைந்தார்.ரோஜா இதழ்கள் மற்றும் பணநோட்டுகள் தரையிலும், நாற்காலி மற்றும் மேசையிலும் சிதறிக்கிடந்தன. மிக பெரிய ஹீலியம் பலூன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் நடுவில் இருந்த மேசையில் பல கேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. பல பெரிய அடுக்கு மற்றும் வெள்ளை ராயல் பனிக்கட்டிகளால் அவை மூடப்பட்டிருந்தன.அந்த அறையின் ஒரு மூலையில், பல பெரிய கட்டு ரோஜாக்களின் நடுவில், பொன்னால் செய்யப்பட்ட நெக்லஸ் அணிகலன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.அதற்கு அடுத்தாக மின்னும் விளக்குகளோடு இலக்கிய குறிப்பொன்று இருந்தது.இந்த மிகப் பெரிய வேலைப்பாடுகள் அனைத்தும் தன்னுடைய மனைவியோடு சண்டையிட்டு கொண்ட கணவர் ஒருவரின் செயல் என்று கல்ஃப் நியுஸ் இணையதளம் தெரிவித்திருக்கிறது.இந்த செயல் பற்றி பல பதில்களுக்கு மத்தியில், மகளிர் பள்ளி ஒன்றில் ஆண் ஒருவரால் எவ்வாறு செல்ல முடிந்தது என்ற கோபக்குரல்களும் ஒலிக்காமல் இல்லை.”தன்னுடைய மனைவிக்கு மதிப்பளிக்கின்ற ஒரு மனிதனின் நல்ல குணமும், விசுவாசமும்தான் இதில் தெரிகிறது. ஆனால், இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்ய விரும்பினால், சொந்த வீட்டில் செய்திருக்கலாமே” என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் இந்த பள்ளியின் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவர் என்றும். அதனால்தான் பள்ளிக்கூடம் பூட்டப்பட்ட பின்னரும் உள்ளே நுழைய முடிந்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர்

♈🇮🇳 🌴 பாகிஸ்தான் எம்.பி தன்வீர்கான் என்பவர் கடந்த ஜனவரி 16-ம் தேதி அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மேற்கண்ட அறிவிப்புகளைச் சட்டமாக்க தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். பின்னர், அது மதப் பிரச்னைகளை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ‘இஸ்லாமிய பாதுகாப்பு குழு’வுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி, இனிமேல் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் தண்ணீர் குடிக்க, புகைக்க, உணவு சாப்பிட தடை விதிக்கும் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை மீறினால் 500 ரூபாய் அபராதமும் 3 மாதங்கள் சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய சட்டத்தை முன்னாள் பிரதமர் பெனாஷிர் பூட்டோவின் மகளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பக்தாவர் பூட்டோ கடுமையாக கண்டித்துள்ளார். தன் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கடுமையான வெப்பம் வீசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தண்ணீர் குடித்தால் தண்டனை என்பது போன்ற கொடுமையான சட்டம் போடுகிறார்கள். இது கண்டிப்பாக இஸ்லாமில் இல்லை. இவர்களின் புதியச் சட்டத்தில் முதியவர்கள், நோயாளிகள், பள்ளிக் ககுந்தைகள் போன்றவர்களுக்கு எந்த விலக்கும் அளிக்கவில்லை. சில நாள்களுக்கு முன் மலாலா பள்ளியின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். அரசோ பள்ளிக் ககுந்தைகளை தண்ணீர் குடிக்கக் கூடாது என மிரட்டிக்கொண்டிருக்கிறது. இவர்கள் இஸ்லாதுக்கு அவமரியாதை செய்கிறார்கள்” என்று தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 2017 செம காமடி -மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா தான் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

♈🇮🇳 🌴மெட்ரோ ரயில் சேவைக்கு கூடுதல் நிதி பெற்றுத் தந்த வெங்கய்யா நாயுடுவுக்கு நன்றி: முதலமைச்சர் பழனிசாமி

♈🇮🇳 🌴திருத்தணி அருகே ஆர்.டி.ஓ. மீது தாக்குதல்

♈🇮🇳 🌴 உணவுப் பொருள் தரம் பற்றி வாட்ஸ்ஆப்பில் புகார் கூறலாம் : சென்னை கலெக்டர்

♈🇮🇳 🌴காஞ்சிபுரம் : கூடுவாஞ்சேரி வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை

♈🇮🇳 🌴புதுக்கோட்டை : தனியார் விடுதியில் வங்கி அதிகாரி மர்ம மரணம்

♈🇮🇳 🌴சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம். கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்களையும் தெரிவிக்கலாம். 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 – 23813095 என்ற அலுவலக எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். commrfssa@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்

♈🇮🇳 🌴பொதுப்பணித் துறை மூலம் குவாரிகள் திறக்கப்பட்டாலும், மணல் விற்பனையை, தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அதனால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அங்கு தினமும் வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வீடு, அலுவலகங்களில் இருந்தே பணிகளை கவனித்தனர்.இப்போது, எந்த முன்னேற்பாடும் இல்லாமல், அரசே நேரடியாக மணல் விற்பனையை துவக்கி உள்ளது. ஆனால், குவாரிகளுக்கு தேவையான ஆட்கள் இல்லாததால், பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.குறைந்தபட்சம், ஒவ்வொரு குவாரிக்கும், 25 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடம்பெறும் குழுக்களை அமைக்க வேண்டும். அப்போது தான், குவாரிகளை இயல்பாக இயக்கி, மணல் தட்டுப்பாட்டை போக்க முடியும்

♈🇮🇳 🌴எகிப்து நாட்டில் 17 ‘மம்மிகள்’ கண்டுபிடிப்பு

♈🇮🇳 🌴 அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி: செகந்தராபாத், நியூடெல்லி இறுதி போட்டிக்கு தகுதி

♈🇮🇳 🌴சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இதில் தமிழிசை செளந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியை பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

♈🇮🇳 🌴விஸ்வரூபம் பத்திரிக்கை ஆசிரியர் அவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்…

1).மருத்துவ பதிவேடு அலுவலர் திரு.ரோஷன் அக்தர் அவர்கள் முதன் முதலாக அரசு பணியில் சேர்ந்தது முதல் நாளது தேதி வரை சென்னை அரசு இராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பதிவடேு துறையில் சுமார் 20 ஆண்டுகளாக ஒரே இடத்தில் திரு.ரோஷன் அக்தர் அவர்களை பணிபுரிய அனுமதி அளித்த அதிகாரி யார்?

2).பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் அனைத்து துறை அரசு செயலர்களுக்கும் (அரசாணை எண். 63- யை ) பின்பற்றுமாறு சுற்றரிக்கை அனுப்பபட்டு தற்போது நடைமுறையும் படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இந்த அரசாணை மருத்துவ பதிவேடு அலுவலர் திரு.ரோஷன் அக்தர் அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன?

3).மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் மட்டும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் (அரசாணை எண். 63- யை ) பின்பற்றுமாறு அனுப்பப்பட்ட சுற்றரிக்கைகளை மருத்துவ பதிவேடு அலுவலர் திரு.ரோஷன் அக்தர் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதுக்கான காரணம் என்ன?

4).பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை (அரசாணை எண். 63- ன் படி ) அரசு நிர்வாகத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே இடத்தில் தேவையில்லாத பட்சத்தில் பணியாற்றும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை கட்டயமாக வழங்கப்படும் பணி இட மாறுதல் திரு.ரோஷன் அக்தர் அவர்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை?

5).மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் மூலம் 2 முறை பதவி உயர்வு மருத்துவ பதிவேடு அலுவலர் திரு.ரோஷன் அக்தர் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதும் கூட திரு.ரோஷன் அக்தர் அவர்களை வேறு வொரு இடத்திற்கு மாற்றம் செய்யமால் அதே இடத்தில் தொடரப்படுவதற்கு காரணம் என்ன?

6).மருத்துவ கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் (அரசாணை எண். 63- யை ) பின்பற்றமால் பல ஆண்டு காலமாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்களின் பட்டியல் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

7).இனிமேலாவது மருத்துவ கல்லூரி இயக்குநர் அலுவலகம் உறங்கமால் விழித்து செயல்படுமா!. அல்லது தினசரி, மாத இதழ் மூலம் நடைப்பெறும் தவறுகளை சுட்டிக்காட்டவும், நீதிமன்றம் வாயிலாக குட்டுவைக்க வேண்டுமா! என்பதை மருத்துவ கல்வி இயக்குநர் அவர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

மேலே கண்ட இணங்களுக்கான கேள்விகள் மற்றும் புகார்களுக்கு விஸ்வரூபம் பத்திரிக்கை ஆசிரியர் அவர்கள், சென்னை அரசு இராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள மருத்துவ பதிவேடு துறை அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறப்பு சான்றிதழ் திருத்த உத்தரவு ஆணைகளை பெற்றவர்களின் பட்டியல் அரசு பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கள ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்கள் ஏதாவது மறைக்கப்பட்டுள்ளதா?, அல்லது ஆவணங்களில் ஏதாவது தவறு நடந்திருப்பதிற்கான வாய்ப்புள்ளதா? ஒருவேளை அரசு பதிவேடுகளில் குற்றம் நடந்து இருப்பதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ பதிவேடு அலுவலர் திரு.ரோஷன் அக்தர் மற்றும் அவருக்குஉதவிய அதிகாரிகளையும் விஸ்வரூபம் பத்திரிக்கை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும், தங்களை ஏழை எளிய மக்களின் சாா்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

123total visits.