விஸ்வரூப செய்திகள் 15/5-1

0
14

♈🇮🇳 🌴 *8am-15-5-2017-monday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 *குமரி . இரணியல் காவல் நிலையத்தில் போலி FIR போட்ட போலீசார்.*

*போலி FIR குறித்து கட்சிக்காரருக்காக காவல் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்த வழக்கறிஞரை தாக்கிய SI.*

*ஊடகங்களிலும் வெளிவராத*
*திடுக்கிடும் உண்மைகள் ஆதாரத்துடன்.*

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் என்பவர் எதிரிகள் இருவர் தாக்கியதில் படுகாயமடைந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இரணியல் காவல் நிலைய SSI.பிரசாந்தும் SI ரமேஷும் கூட்டு சேர்ந்து தாங்களே வாக்குமூலம் தயார் செய்து வாக்குமூலத்தின் கீழ் “Sir, Recorded by me and registered case in Eranial PS Cr no.184/17 u/s 294(b), 323, 324, 506(11) Ipc on 15.4.17 at 16.30 hrs” என்று எழுதி வழக்கு பதிவு செய்ததாக கூறி கையொப்பமிட்டு அதை சிகிச்சையில் இருந்த கார்த்திக்கிடம் காண்பித்து FIR காப்பி மறுநாள் தருவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காததால் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்த புகார் தாரரான கார்த்திக் மீதே வழக்கு பதிந்து உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூலம் ஜாமீன் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் அவர்கள்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் வழக்கறிஞர் தனது கட்சிகாரர் கார்த்திக் மூலம் புகார் அனுப்பினார். ஆனால் போலீசார் அந்த புகாரை மறைப்பதற்காக கார்த்திக்கை மிரட்டி நான்கு வெள்ளை பேப்பர்களில் கையெழுத்தும் பெற்றிருந்தனர். மாவட்டநீதிமன்றத்தில் கார்த்திக்கை தாக்கிய எதிரிகள் இரணியல் காவல்நிலைய குற்ற எண் 184/2017 ல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ததில் தான் போலி FIR விபரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி FIR விவகாரத்தால் பதற்றமடைந்த எஸ்ஐ ரமேஷ் வழக்கறிஞரை பழிவாங்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.
சம்பவத்தன்று வழக்கறிஞர் ஜெயக்குமார் ஒரு கட்சிக்காரருக்காக இரணியல் காவல்நிலையம் சென்ற போது எஸ்ஐ ரமேஷ் , வழக்கறிஞர் ஜெயக்குமாரை கொடூரமாக தாக்கியுள்ளார். வழக்கறிஞரின் வாகனத்தையும் தாக்கி வழக்கறிஞரை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக காவலில் வைத்தார். சம்பவத்தை கேள்விப்பட்டு உயர்காவல்துறை அதிகாரிகள் காவல்நிலையம் சென்று படுகாயமடைந்திருந்த வழக்கறிஞர் ஜெயக்குமாரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் SI.ரமேஷை ஆயுத படைக்கு மாற்றம் செய்தனர். துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

♈🇮🇳 🌴 புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் உப்பளம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசுப் பேருந்து, தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.

♈🇮🇳 🌴 சென்னை மாநகர் முழுவதும் பணிமனைகளில் போலீஸ் குவிப்பு

♈🇮🇳 🌴 திருவாரூரில் 35 பேருந்துகள் மட்டுமே இயக்கம்

♈🇮🇳 🌴 கோயம்பேட்டில் மக்கள் தவிப்பு: அரசு மீது மக்கள் புகார்

♈🇮🇳 🌴 தமிழகம் முழுவதும் 23 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

♈🇮🇳 🌴 சென்னை மாநகர் முழுவதும் புறநகர் ரயில் நிலையங்களில் கூட்டம்

♈🇮🇳 🌴 திருவண்ணாமலையில் 25% பேருந்துகள் இயக்கம்

♈🇮🇳 🌴 மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

♈🇮🇳 🌴 ரஜினி ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபம் வர தொடங்கினர்

♈🇮🇳 🌴 சென்னை மாநகரில் பேருந்துகள் ஓடவில்லை: மக்கள் கடும் அவதி

♈🇮🇳 🌴 தஞ்சையில் அரசு பேருந்துகள் சேவை முடக்கம்

♈🇮🇳 🌴 விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

♈🇮🇳 🌴 மதுரையில் பேருந்துகள் ஓடவில்லை : மக்கள் கடும் அவதி

♈🇮🇳 🌴 அரக்கோணத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு

♈🇮🇳 🌴 என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி

♈🇮🇳 🌴 குன்னூாரில் 66 பஸ்களில் ஒரு பஸ் மட்டுமே இயக்கம்

♈🇮🇳 🌴 பெரம்பலூரில் 110 பஸ்களில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை

♈🇮🇳 🌴 பொள்ளாச்சியில் 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்

♈🇮🇳 🌴 குமரி: மார்த்தாண்டம் அருகே தமிழக எல்லையில் கேரள பஸ்கள் நிறுத்தம்

♈🇮🇳 🌴 திருச்சி: பஸ்ஸை இயக்கிய தொழிலாளர்கள் மீது தாக்குதல்

♈🇮🇳 🌴 விழுப்புரம், கோபிசெட்டி பாளையம், செய்யாறிலும் பஸ் கண்ணாடி உடைப்பு

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

192total visits.