விஸ்வரூப செய்திகள் 15/5-3

0
16

♈🇮🇳 🌴 *1pm-15-5-2017-monday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴காஷ்மீரில், கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க, ஒருவரை ஜீப் முன் ராணுவத்தினர் கட்டி வைத்து சென்ற சம்பவம் சரியான செயல் தான் என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் செய்த காரியம் சரியான செயலே என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு காரியத்தை முடிக்க ராணுவ வீரர்கள் பல யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதுபோன்ற சமயங்களில் காரியத்தை முடிக்க வேண்டியது தான் முக்கியம். வழிமுறைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

♈🇮🇳 🌴உ.பி., முதல்வர் நிகழ்ச்சியில் நடந்த கூத்து-பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் வீட்டுக்கு உ.பி., முதல்வர் வந்து சென்ற பிறகு, அந்த வீட்டில் இருந்த ஏ.சி., சோபா உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் உடனடியாக கழற்றி சென்று விட்டனர். உ.பி., மாநிலம், டியோரியா மாவட்டம், திகாம்பர் கிராமத்தை சேர்ந்த பிரேம் சாகர், எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தனர். அவரது வீட்டுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார். நான்கு லட்சம் ரூபாய் காசோலை, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிரந்த வைப்பு தொகைக்கான காசோலை ஆகியவற்றை பிரேம் நாகர் குடும்பத்தினரிடம் வழங்கினார்.முதல்வர் வருகையை ஒட்டி, பிரேம் சாகர் வீட்டில் புதிதாக ஏ.சி., சோபா, கார்பெட் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட அதிகாரிகள் ஏற்படுத்தினர். முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின், அந்த வசதிகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர் என பிரேம் சாகர் குடும்பத்தினர் தெரிவித்தனர்

♈🇮🇳 🌴உலகம் முழுவதும் பரவி வரும் வான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, விண்டோஸ் தொழில்நுட்பத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் உள்ள 2.25 லட்சம் ஏ.டி.எம்.,களில், 60 சதவீதம் ஏ.டி.எம்.,களில் விண்டோஸ் எக்ஸ்பி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக புழக்கத்தில் விட்டுள்ள சிறப்பு விண்டோஸ் எக்ஸ்பி தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதுவரை, ஏ.டி.எம்.,களை செயல்படுத்த வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது
கைது வாரன்டை ரத்து செய்ய கோரிய கோல்கட்டா நீதிபதியின் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது

♈🇮🇳 🌴 இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் குரல் பதிவை ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி காவல்துறை மனு தாக்கல் செய்தது. மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் வழக்கறிஞர்கள் டெல்லி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 18ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈🇮🇳 🌴 சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் : ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

♈🇮🇳 🌴 தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர்களுடன் பிற்பகல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஆணையர் யாசின் பேகம் அழைப்பு

♈🇮🇳 🌴 நிலக்கரி முனையத்தை மேம்படுத்த மத்திய அரசுடன் தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

♈🇮🇳 🌴 டெல்லியில் ஆசாட்பூர் மண்டியில் பயங்கர தீ விபத்து

♈🇮🇳 🌴 திருச்சி-தஞ்சை பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் மறியல்

♈🇮🇳 🌴 முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்தால் புதிய சட்டம் கொண்டுவர தயார்: மத்திய அரசு தகவல்

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்: தொழிற்சங்கங்கள் கோரிக்கை

♈🇮🇳 🌴 சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார்

♈🇮🇳 🌴 தமிழக மீனவர்களுக்கு மே 29 வரை காவல் நீட்டிப்பு

♈🇮🇳 🌴 சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது குற்றச்சாட்டு

♈🇮🇳 🌴 திருவள்ளூரில் கால்நடை பராமரிப்பு துறை நேர்முக தேர்வு தள்ளிவைப்பு

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் : தொமுச சண்முகம் வலியுறுத்தல்

♈🇮🇳 🌴 கருணாநிதியின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க முதல்வர் முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

♈🇮🇳 🌴 சட்டசபையை கூட்ட வேண்டும் : கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்

♈🇮🇳 🌴 திண்டிவனம் டிப்போவில் இருந்து பஸ் ஓட்டிய அதிமுக நிர்வாகி

♈🇮🇳 🌴 சேலம் ஆத்தூரில் இருந்து தனியார் பஸ்கள் அதிகமாக ஓடின

♈🇮🇳 🌴 ரஜினி – ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தது

♈🇮🇳 🌴 கோப்பை வென்றது பாக்.,

♈🇮🇳 🌴 மெட்ரோ ரயில் கருத்து: முதல்வர், வெங்கையா நாயுடுவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

♈🇮🇳 🌴 மெல்ல மெல்ல சரியும் தங்கம் விலை

♈🇮🇳 🌴 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பலிபீடத்துக்கு திருமஞ்சனம்

♈🇮🇳 🌴 உ.பி., சட்டசபையில் கவர்னர் உரையின் போது எதிர்க்கட்சியினர் ரகளை

♈🇮🇳 🌴 தொடர்ந்து உயர்கிறது ரூபாய் மதிப்பு : 64.08

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

129total visits.