விஸ்வரூப செய்திகள் 15/5-4

0
13

♈🇮🇳 🌴 *5pm-15-5-2017-monday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴பெண்கள் குளிக்கும் பகுதியில் அத்து மீறி செல்லும் போலீசார் -உயர் பெண் போலீஸ் அதிகாரியோ, ஒரு பெண் நிதிபதியோ குளித்தால் இப்படி நிற்பார்களா சார் என கேள்வி கேட்கும் பெண் சுற்றுலா பயணிகள் -பெண்கள் பகுதியில் இப்படி இவர்கள் நிற்பதால் கூச்சமடைந்து குளிக்காமல் சென்ற பெண் சுற்றுலா பயணிகள் மாவட்ட கண்காணிப்பாளர்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செல்வது காதில் விழுகிறது நேற்று மெயினருவி-இன்று ஐந்தருவியில் அதே நிலை

♈🇮🇳 🌴சாா் வணக்கம்.காவலர்களுக்கு உணவுபடி வழங்குதல் தொடா்பாக அரசாணை உள்ளது ஆனால் சென்னையை தவிர மற்ற ஊா்களுக்கு அது கிடைக்கவில்லை.2013ம் ஆண்டு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களால் இந்த ஆணை பிறப்பிக்கபட்டது.எனக்கு தொிந்து திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கொடுக்கின்றனா்.மற்ற ஊா்களில் கொடுப்பதில்லை.எனது மாதாந்திர ஊதியம் 17,500.இதில் உணவுக்கென 6000 முதல் 7000வரையும் வீட்டு வாடகையாக 3000ரூபாயும் அதை ஷோ் செய்தால் நபருக்கு 1000ரூபாய் கொடுக்கிறோம். இது தவிர தனி செலவாக 2000க்குள் ஆகிறது.மீதம் இருப்பது குடும்பத்திற்கு அனுப்புகிறோம்.எந்த ஒரு சேமிப்பும் எங்களால் செய்ய முடியவில்லை.சமைத்து சாப்பிடலாம் என நினைத்தால் பணிநேரம் வதைக்கிறது.சொந்த ஊாிலும் இல்லை.இதற்கு தீர்வு காண உதவுங்கள் சாா்.மாற்றத்தை நோக்கி செல்லும் இவ்வுகில் இந்த ஊதியத்தை வைத்து சமாளிக்க முடியவில்லை.எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.அரசு அறிவித்ததை கூட செயல்படுத்த மறுக்கின்றனா்

♈🇮🇳 🌴B3 காவல் நிலைய சரகம் சத்யா நகரில் கஞ்சா விற்பனை செய்துவந்தர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்தும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த1)சாந்தி 2)இளவரசி மற்றும் 3) சிவகாமி ஆகியோர்களை தொடர் முயற்சியின் மூலம் நவடிக்கை மேற்கொண்ட உதவி ஆணையாளர் திரு, ஆனந்தகுமார்ஆய்வாளர்கள் கணேசன், முத்துராஜா, தலைமைகாவலர்கள் அசோக், சரவணன், ஓவியம் ஆகியோர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள் .இதே போன்று துறைமுக சரக காவல் ஆளினர்கள்.நற்பெயர் பெற வாழ்த்துக்கள்.

♈🇮🇳 🌴 *விஸ்வரூபம் பத்திரிகையின் செய்திகள் , எங்களின், J.R.நற்பணி மன்றம், J.R.அறக்கட்டளை , புதுவை செய்திகள், வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்வதற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம், மிகுந்த மகிழ்ச்சி ஐயா!!! *நன்றி!!!**இரா.முருகன்,* ஒருங்கிணைப்பாளர்**J.R.நற்பணி மன்றம் &பசுமை இயக்கம்,**திருக்கனூர்,**புதுச்சேரி மாநிலம்*

♈🇮🇳 🌴 சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் போக்குவரத்து அதிகாரிகளான கோட்டாளி தனஞ்செழியன் மற்றும் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் ஹெல்மெட் அணியாமை மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியோர் களின் லைசன்ஸ் ஆகியவற்றை பிடுங்கிக்கொண்டு, அவர்களை இன்று வா நாளை வா என்று அலைகழிப்பதாகவும், மேலும் எப்போதுமே போக்குவரத்து அலுவலகம் மூடியே இருப்பதாகவும், யாரேனும் கோட்டாளியை பார்க்க வந்தால் அவர் வெளியே சென்றுள்ளார்.இப்போது பார்க்க இயலாது என்று அலைகழிக்கிறார்கள்.மேலும் 1000,1500 என்று லஞ்சம் பெற்றுக்கொண்டு காவல்நிலையத்திலேயே சில கேஸ்களை முடித்து விடுவதாகவும், இவ்வாறு அலைகழிக்கிறீர்கள் என்று பொதுமக்கள் கேட்டால் டிராபிக்கில் போலீசார் பற்றாக்குறையாக இருக்கிறது, எல்லா வேலையுமே எங்க தலையிலே விழுகிறது என்று சாக்குபோக்கு சொல்கிறார்கள்.மேலும் இதுபற்றி யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள், அவர்களுக்கு உண்டான பங்கு அவர்களிடம் போய் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.இது குறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக கூறினார்கள்

♈🇮🇳 🌴 வி.ஏ.ஓ. தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அழைப்பாணையை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈🇮🇳 🌴 கும்பகோணத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: ஓட்டுநர் காயம்

♈🇮🇳 🌴 கேரளாவில் ஊராட்சி அலுவலக கணினியை தாக்கிய ரேன்சம்வேர் வைரஸ்

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் ரூ.1 கோடி வருவாய் இழப்பு

♈🇮🇳 🌴 திருப்பூரில் தந்தை, மகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

♈🇮🇳 🌴 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

♈🇮🇳 🌴 பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 27 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

♈🇮🇳 🌴 பழனி அருகே இரட்டை கொலை வழக்கில் ஓட்டுநருக்கு 3 ஆயுள் தண்டனை

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் கோயம்பேட்டில் பயணிகள் அவதி

♈🇮🇳 🌴 சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில்கள் புறப்பாடு தாமதம்

♈🇮🇳 🌴 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 133 புள்ளிகள் உயர்வு

♈🇮🇳 🌴 ஓசூர் அருகே கல்வீசி அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

♈🇮🇳 🌴 டெல்லியில் சுற்றுசூழல் அமைச்சருடன் தமிழக அமைச்சர் சந்திப்பு

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

♈🇮🇳 🌴 ஆம்பூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

♈🇮🇳 🌴 குன்னூரில் 53 சவரன் நகை கொள்ளை

♈🇮🇳 🌴 மாட்ரிட் ஓபன்: நடால் சாம்பியன்

♈🇮🇳 🌴 அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முதல்வர் அறிவுறுத்தல்

♈🇮🇳 🌴 கோவை: மதுக்கரையில் அதிக கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பறிமுதல்

♈🇮🇳 🌴 வேலூர்: கந்தனேரியில் டாஸ்மாக் கடையை சூறையாடிய மக்கள்

♈🇮🇳 🌴 அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லாடனுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் ஆதார் கார்டு வாங்க முயற்சி செய்து சிக்கி உள்ளார்

♈🇮🇳 🌴 பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான 12 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை லெப்டினன்ட் கர்னல் எம்.ஜி.திம்மையா முறைகேடாக வாங்கி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி திம்மையா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது

♈🇮🇳 🌴 பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலி மதிப்பெண் சான்றிதழ் இணையதளம் மற்றும் பள்ளிகளின் மூலம் விழியோகம் செய்யப்படும். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதற்கான கால அவகாசம் நீட்டிப்படாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

♈🇮🇳 🌴 இஸ்லாமியர் பின்பற்றும் முத்தலாக் நடைமுறையை செல்லாது, சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் அறிவிக்குமானால், இஸ்லாமியரின் திருமணம் மற்றும் விவகாரத்தை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

146total visits.