விஸ்வரூப செய்திகள் 1/6-1

0
16

♈🇮🇳   *9am-1-6-2017-thursday-news*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள அப்பார்மெண்ட் வாசிகள் வெளியேறுகிறார்கள்-போலீசார் அறிவுரையின்பேரில் அடுக்குமாடி மக்கள் வெளியேறுகிறார்கள்-சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

♈🇮🇳   பீகார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும், 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்

♈🇮🇳   பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.23,டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்ந்துள்ளது. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

♈🇮🇳   தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்

♈🇮🇳   பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன்.8-ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியல்http://www.trb.tn.nic.in என்ற இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது

♈🇮🇳   சென்னை நந்தம்பாக்கத்தில் 5 குழந்தைகளுடன் தனியார் காப்பக பெண் நிர்வாகி ரோஸ்மேரி மாயமாகியுள்ளார். மாயமான ரோஸ்மேரி மீது குழந்தைகள் நலக்குழு தலைவர் மணிகண்டன் போலீசில் புகார் அளித்துள்ளார்

♈🇮🇳   வரலாற்றில் முதல் முறையாக, கர்நாடகா, 2016 – 17ம் ஆண்டில் தான், மிக குறைந்தபட்சமாக, 69 டி.எம்.சி., நீர் மட்டும் வழங்கியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகா, ஆண்டுதோறும் ஜூன், 1 முதல் மே, 31 வரை, 192 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 1 முதல், நேற்று வரை, 69, டி.எம்.சி., நீர் மட்டும் விடுவித்துள்ளது. மேட்டூர் அணை கட்டிய பின், கர்நாடகா, 2016 – 17ம் ஆண்டில் தான் மிக குறைந்த நீரை,தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமின்றி, சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனை அடைந்தனர்

♈🇮🇳   இந்தோ – சீன போரால் தங்களது நிலங்களை பறி கொடுத்த அருணாச்சல் பிரதேசவாசிகளுக்கு 55 ஆண்டுகளுக்கு பின்னர் இழப்பீடு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது

♈🇮🇳   ‘ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்’ என,அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது

♈🇮🇳   கோவை: மலேஷியாவின் தமிழ்மணி மன்றம் சார்பில், உலகளவில், தமிழ் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியின்,இந்திய ஒருங்கிணைப்பாளரும், மதுரை காமராஜர் பல்கலை,தமிழியல் துறைத் தலைவருமான, முனைவர் சத்தியமூர்த்தி

♈🇮🇳   சென்னை சிலக்ஸ் கட்டடத்தின் முன் பகுதியில், இன்று காலை தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிகிறது

♈🇮🇳   சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மட்டுமே கனவம் செலுத்தும் மத்திய அரசு, தேவையற்ற வேலையில் ஈடுபடுகிறது’ என மார்க்சிஸ்ட் பொது செயலர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்

♈🇮🇳   கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி உங்களுத்தான் என சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர். நந்தினி கூறினார்.யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி,தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்

♈🇮🇳   கால்நடைகள் விற்பனை தொடர்பாக, மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும் என கூறப்படுகிறது. விலங்கு நல ஆர்வலரான அருண் பிரசன்னா, தமிழக கால்நடை துறையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு செய்து, பெறப்பட்ட தகவல் குறித்து கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 100 கால்நடை சந்தைகள் மூலம், வாரத்திற்கு, 53 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாவதாக, கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,ஒரு கால்நடையின் விலை, 15 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 26 லட்சம் கால்நடைகள் விற்பனை மூலம், தமிழகத்தில் மட்டும், 4,160 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. அதில்,இடைத்தரகர்கள் அதிக விலைக்கு கால்நடைகளை வாங்கி, இறைச்சிக்காகவும், தோல் பொருட்கள் தயாரிப்புக்காகவும், மிக அதிக விலைக்கு விற்று லாபம் பெறுகின்றனர். இடைத்தரகர்களுடன், விவசாயிகளால் போட்டி போட்டு, கால்நடைகளை வாங்க முடிவதில்லை. இந்த இடைத்தரகர்கள் தான், அனைத்து வித கொடூர செயல்களுக்கும் காரணம். மத்திய அரசின் புதிய விதிமுறைகளால்,இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர். வர்த்தகர்கள், விவசாயிகளை தேடி செல்வதால், அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும், என்றார்

♈🇮🇳   விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், தவறுகளை நீக்கவும், ஜூலை, 1 முதல், 31 வரை, சிறப்பு பணி மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, 18 – 19 வயது வாக்காளர்களை சேர்க்க, இவ்வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புப் பணியின் போது, வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில், படிவங்களை சமர்ப்பிக்கலாம். தபால் மூலமாகவும், படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.inஎன்ற இணையதளம் மற்றும் இ – சேவை மையங்கள் மூலம், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 9 மற்றும், 23ம் தேதி, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும். அந்த நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும்.இந்த சிறப்பு பணியின் போது, இறந்தவர்களின் பெயர்,வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இறப்பு பதிவு செய்யப்பட்ட விபரம், உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையில், இப்பணி மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்

♈🇮🇳   நாகை: வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணம் 2ம் நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

♈🇮🇳   தீ விபத்தை பார்க்க வேண்டாம் : போலீஸ் அறிவுரை

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்து – காவல்துறை வழக்குப்பதிவு

♈🇮🇳   பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு-மதுரை : காளவாசலில்

♈🇮🇳   உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்ஜின் கோளாறு: நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

♈🇮🇳   திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை முன் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ விபத்து : சென்னை ஆட்சியர் நேரில் ஆய்வு

♈🇮🇳   ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

♈🇮🇳   நாகை: 2ம் நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்

♈🇮🇳  ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

♈🇮🇳  விதிமீறிய கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

♈🇮🇳  அருகே உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பில்லை: சென்னை கலெக்டர்

♈🇮🇳  சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று துவங்குகிறது

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

265total visits.