விஸ்வரூப செய்திகள் 1/7-3

0
16

♈🇮🇳   *10pm-1-7-2017-saturday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳   கவர்னர் வித்யாசாகர் ராவ் உடன் டி.ஜி.பி.,ராஜேந்திரன் ச ந்திப்பு

♈🇮🇳   ஊடக சுதந்திரம், பேச்சு உரிமைக்காக போரடி வருகிறேன்: மீராகுமார்

♈🇮🇳   தற்போது தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு அணையில் தற்போது உலகவங்கி திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் செலவில் ஜியோமைனிங் எனப்படும் நவீனமுறையில் அணையில் கசிவுப்பகுதிகளை சீரமைக்கும் பணிகள்2016 ஆண்டு நவம்பரில் துவங்கியது. 2018 ஏப்ரலில்நிறைவுபெறும். அணையில் கசிவுகளை சரிசெய்வதால் அணைக்கு வரும் மழைநீரைசேமிக்காமல் வீணடிக்கப்படுகிறது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானது. அணையைநேரில்ஆய்வு செய்ய கலெக்டர் சந்தீப் நந்தூரி . பணிகளை பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் கூறியது, தற்போது அணையில் 45 அடி தண்ணீர் உள்ளது. இனி தண்ணீர் வெளியேற்றப்படாது. அணையில் தண்ணீரை வைத்துக்கொண்டு கசிவுகளை சரிசெய்ய முடியாது. தற்போதைக்கு இங்குள்ள தண்ணீரை பாபநாசம் அணைக்கு சுரங்கப்பாதை வழியாக மாற்றவும்முடியாது. அக்டோபர் மாதத்திற்குள் அதாவது வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்

♈🇮🇳   பணி செய்ய விடாமல் தடுத்த எம்.எல்ஏ குறித்த அறிக்கை மத்தி்ய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலம் உழவர் கரையில் குறிப்பிட்டபணிகள் மேற்கொள்ள எம்.எல்.ஏ., பாலன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்அவரின் செயல்பாடுகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என கவர்னர் கிரண்பேடி கூறினார்

♈🇮🇳   ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியா மக்களிடம் நடத்தப்பட்ட மாபெரும் திருட்டு என தெரிவித்துள்ளார். இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் கூறியதாவது:-இந்திய அதிகாரத்துவம் ஊழல் மற்றும் சோம்பலுக்கு பேர்போனது. இந்திய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை வேதனைக்குரியது. இதனால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்துவிடமுடியாது. இதன்மூலம் இந்தியா உலகிற்கு ஒரு தவறான எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது— vishwarubam news

♈🇮🇳   அன்னை தெரசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷி இன்று காலமானார் அவருக்கு வயது 81

♈🇮🇳   பல ஆண்டுகளாக வட கொரியா மீது தொடர்ந்து வரும்”யுக்திபூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை“தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்க்கமான பதிலடியை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

♈🇮🇳   இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஒரே விதமான வரியை விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதும், இந்த வரி விதிப்பிலும் தொடர் சீர்திருத்தங்கள் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்— vishwarubam news

♈🇮🇳   ஹாங்காங் மீதான சீனாவின் அதிகாரத்திற்கு அனுமதிக்க முடியாத சவால்களை விடுப்பதற்கு எதிராக சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்திருக்கிறார்

♈🇮🇳   அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் தவறுதலாக மரணத்தை ஏற்படுத்திய வழக்கை எதிர்கொள்கிறார். ஃப்ளோரிடாவில் வீனஸ் வில்லியம்ஸ் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳   ராம்குமார் தற்கொலை வழக்கு குறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா ஆர்டிஐ மூலம் கேள்விகள் கேட்டு இருந்தார். அதில், தற்க்கொலை செய்துக்கொண்ட கைதிகளின் விவரம், மின்சாரம் தாக்கி இறந்த கைதிகளின் விவரம், சென்னை புழல் சிரையில் ராம்குமார் தற்கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு சென்னை புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே பதில் அளித்துள்ளது. ராம்குமார் தொடர்பான கேள்விகளுக்கு சிறைத்துறை பதில் அளிக்கவில்லை. இதனால் வழக்கறிஞர் பிரம்மா மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்— vishwarubam news

♈🇮🇳   நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடாமல் இருக்க காரணம் கதை திருட்டுதான் என தகவல்கள் வெளியாகியுள்ளது

♈🇮🇳   இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில்  “மஞ்சள்” நாடகம் நடத்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம்,கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்”  என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது  என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்தது— vishwarubam news

♈🇮🇳   நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால்  குணமாகும்

♈🇮🇳   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

♈🇮🇳   சென்னையில் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டினார் மீராகுமார்!— vishwarubam news

♈🇮🇳   ஈரோடு நகரில் தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்

♈🇮🇳   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு சார்ந்த புதிய முதுநிலை பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்குமாறும் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்— vishwarubam news

♈🇮🇳   இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு போராட்டங்களைத் தொடர்ந்து விளைநிலத்தையும் நிலத்தடி நீரையும் காப்பாற்ற நெடுவாசலிலும் கதிராமங்கலத்தில் இடைவிடாத போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நெடுவாசலும் கதிராமங்கலமும் பதற்றத்தின் உக்கிரத்தில் இருந்தபோதும் தமிழக அரசும் மத்திய அரசும் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் ஒடுக்குவதிலேயே குறியாக இருப்பதால் பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்

♈🇮🇳   மதுரை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : சிறுவன் பலி— vishwarubam news

♈🇮🇳   சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மகேஷ்,கார்த்திக், பாண்டியன், கணேஸ்வரன்,கணேஷ், நூர்முகமது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

♈🇮🇳   ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் வரும் 5ம் தேதி முதல் ஜவுளி வணிகர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஜி.எஸ்.டியில் இருந்து ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜவுளி வணிகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

♈🇮🇳   திருப்பதி ரயில் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த பீபால்ஆர்ஷா என்பவரிடம் இருந்து 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது—vishwarubam news

♈🇮🇳   திண்டுக்கல்: நிலக்கோட்டை மகளிர் சிறையில் இருந்து பெண் கைதி மணி தப்பியோடினார். வேடசந்தூரைச் சேர்ந்த மணி , திருட்டு வழக்கில் கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தப்பியோடிய கைதிக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

186total visits.