விஸ்வரூபம் செய்திகள் 17/6-1

0
15

♈🇮🇳   *8am-17-6-2017-saturday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   போலி பத்திரிக்கையாளர்கள் சிறு இதழை நடுத்துபவர்கள் அல்ல- போலிகளின் நிஜ உருவம் இதோ – தினமலர் நிர்வாகத்திற்கு மட்டும் அல்ல பெரிய நாளிதழ்கள் , ஊடகங்கள் என்று ஜாம்பவானாக காட்டிக் கொள்ளும் அனைவருக்கும் ஓர்வேண்டுகோள்.: பத்திரிகையாளர்கள்  200 பணம் வாங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால்   பல பிரபல  பத்திரிகையில் நிருபர், புகைப்படகலைஞர்கள் மாத சம்பளம் வாங்கும்  பத்திரிகையாளர்கள்  ஓரு பிரஸ்மீட் 500 ரூபாய் வாங்கி செல்கிறார்கள் . இவர்களுக்கு கூப்பிட்ட பணம் தருகிறார்கள் . வாங்கி கொண்டு இவர்கள் எல்லாம் சிறு பத்திரிகையாளர்கள்  அவர்களுக்கு குடுக்க வேண்டுமென  சொல்பவர்களா பெரிய  பத்திரிகையாளர்கள்….. இவர்கள் ???? மறைமுகமாக வாங்கும் பணம்  அவர்களுக்கு வந்து சேரும்  சம்பளம்  இல்லாமல் தினமு‌ம் 1000 வாங்கி செல்கிறார்கள்  இவர்களுக்கு தெரியும் யார் யார். ..

♈🇮🇳   17 மற்றும் 18-ம் தேதிகளில் வில்லிவாக்கம் கொரட்டூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- திருத்தணி இடையே செல்லும் ரயில்களில் சிலரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

♈🇮🇳  ‘குடியிருப்பு திட்டங்களில் பணம் செலுத்தியோரிடம், ஜி.எஸ்.டி., வரியை சுட்டிக் காட்டி கூடுதலாக பணம் வசூலிக்கும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய அரசு எச்சரித்துள்ளது

♈🇮🇳  புதுடில்லி : கணினி நாசகாரர்கள் சதி திட்டத்தில் வினாடிக்கு 43ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது

♈🇮🇳  மதுரை: ‘நீட்’ தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

♈🇮🇳  காஞ்சிபுரம் அருகே விபத்து; 10 பேர் காயம்

♈🇮🇳  பெட்ரோல் ரூ.67.76; டீசல் ரூ.57.23 நிர்ணயம்; காலை 6 மணி முதல் அமல்

♈🇮🇳  இன்னும் இரண்டு நாட்களில் மழை: வானிலை மையம் கணிப்பு

♈🇮🇳  முதுநிலை ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

♈🇮🇳  அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பம்

♈🇮🇳 ஆதார் கட்டாயமாக்கப்பட்டால் ஏழைகளுக்கு பாதிப்பு: மம்தா பானர்ஜி

♈🇮🇳 மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரம நூற்றாண்டு விழா இன்று துவக்கம்

♈🇮🇳 சட்டத்தை மீறினால் தண்டனை உறுதி: யோகி ஆதித்யநாத்

♈🇮🇳 திருவாரூர்: நீட்டாமங்கலம் அருகே தண்டவாளம் பழுது காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தின் பாயிண்ட் மோட்டார் இயங்காததால், மன்னை, செம்மொழி, மானாமதுரை, காரைக்கால் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன

♈🇮🇳 கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

♈🇮🇳 தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை வருகை

♈🇮🇳  விழுப்புரத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் மருதுவை லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳  பொறுமை கடலினும் பெரிது – சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களால் நடத்தப்படுகிற ரகசிய பண பரிமாற்ற விவரங்களை, இந்திய அரசுக்கு அந்த நாட்டு அரசு தாமாகவே வழங்கும்.இது 2019–ம் ஆண்டு,செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳  பாலை விட சத்தானதாம் இந்த பீர்.. இந்தியாவில் இதன் விற்பனை அமோகம்..!

♈🇮🇳  ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.  8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது  தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை  முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது  நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம்  ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில்  ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை  உற்பத்தி செய்ய வைக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை  பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை  மாலை6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு  பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்

♈🇮🇳   ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் அதிகாரிகள் ஏன் நேர்மையாக பணியாற்ற முடியவில்லை. இதனால் தான் .படியுங்கள்-இவர்களுக்கே இந்த நிலை என்றால் –சாமானிய மக்களுக்கு –விஸ்வரூபம்  -சட்டநெறிமுறைகளும், ஆட்சி அதிகாரங்களும் அதன் அமைப்பு கட்டுமானங்களும் எவ்வளவு பாழ்பட்டுப் போயிருக்கிறது என்பதற்கும்,நேர்மையான அதிகாரிகள் தங்களின் நேர்மையான செயல்களுக்காக எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இச்சம்பவம் ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.வங்காளதேசப்பிரிவினைக்குப் பின்னர் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த வங்காளிகள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டி அசாம் நிக்கில்பாரத் பங்காளி உட்பஸ்து சமந்வே சமித்தி (Nikhil Bharat Banglali Udbastu Samanway Samitee) எனும் தங்களின் அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் 06 அன்று பேரணியொன்றை நடத்தினார்கள். அப்பேரணியானது சில்பதார் எனும் பகுதியில் நடைபெற்றபோது அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பினர் (All Assam Students’ Union)பேரணியில் பங்கேற்றவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் தொடுத்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் சில்பதாரில் அமைந்திருக்கும் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பினரின் அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. இவ்விவகாரத்தில், பேரணியில் பங்கேற்ற வங்காளNIBBUSS அமைப்பின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட 60 நபர்களை அசாம் மாநிலக் காவல்துறை கைதுசெய்தது. இக்கலவரம் குறித்து விசாரணை செய்ய அசாமில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த இராஜமார்த்தாண்டன் எனும் ஐ.பி.எஸ். அதிகாரியைச் சிறப்புப்புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமித்தது அம்மாநில அரசு. அவ்விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்களில் அனைவருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை என்பதும், வன்முறையைத் தொடங்கியது அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பினர்தான் என்றும் தெரியவரவே, உண்மைநிலையை அப்படியே அறிக்கையில் பிரதிபலித்து அதனைச் சமர்ப்பித்தார் ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டம். இவ்வறிக்கையை NIBBUSS அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி பெற்று அதனை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் தங்களுக்கு விடுதலை கோரினார்கள். இதனால்,கோபமுற்ற அசாம் மாநில அரசானது ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்களைப் பணிநீக்கம் செய்ததோடு மட்டுமல்லாது அவரைக் கைதுசெய்து ஏப்ரல் 06 அன்று சிறையிலடைத்தது

♈🇮🇳  உலகின் பணக்கார மனிதர்களுள் ஒருவராகக் கருதப்படும் அமேசான் நிறுவன தலைமை செயலதிகாரி ஜெஃப் பேசோஸ், தனது சொத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக அளிக்க விரும்புவதாகக் கூறி, அதற்கான பரிந்துரைகளை ட்விட்டரில் கேட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ஜெஃப் பேசோஸ் இட்டுள்ள பதிவில், ‘தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன். உதவி தேவைப்படும் மக்களுக்கு அந்த உபயோகமாக அது இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உங்களிடம் அதற்கான ஐடியாக்கள் இருந்தால் இந்த ட்வீட்டுக்கான பதிலில் அதைத் தெரிவிக்கவும்’ என்று அவர் பதிவிட்டிருந்தார்

♈🇮🇳 கொலம்பியாவில் காலீ நகரில் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒரு செவிலியர் மாணவி ஒரு மருத்துவரின் மீது விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், அந்த மருத்துவர் இறந்துவிட்டார்.டெல் வேல் பல்கலைக்கழக மருத்துவமனையில் படித்து வந்த மருத்துவர் இசபெல் முனொஸ் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்தார்செவிலியர் மரியா இசபெல் கோன்சேலசுக்கு பல எலும்பு முறிவுகள் இருந்தாலும் அவர் தற்போது நிலையான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

♈🇮🇳 துரித உணவுகள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், ஒலிம்பிக் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது

♈🇮🇳பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி தொடர்பாக கேப்டன் கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சில அறிவுரைகளை கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அனுபவம் வாய்ந்த சோயப் மாலிக் மற்றும் முகம்மது ஹபீஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஏதாவது நல்லது நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார் டிராவிட். தற்போது உள்ள அணியில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் கோஹ்லி செய்ய்ய வேண்டாம் என்றும் அது ரிஸ்க் ஆகி விடும் என்றும் டிராவிட் எச்சரித்துள்ளார்

♈🇮🇳 பிரா 91 அன்மையில் தனது முதல் குறைந்த கலோரி கொண்ட பீரினை அறிமுகம் செய்துள்ளது. பார்களில் பீர் அருந்த விரும்ப்புபவர்களுக்குப் பீரா ஒரு குறைந்த கலோரி பீருக்கான தேர்வாக இருக்கும் என்றார். இது ஒரு கிளாஸ் ஷாம்பெயின், ப்ரீஸர்ஸ், மது, அல்லது காக்டெய்ல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவானது. அதுமட்டும் இல்லாமல் இது பால் அல்லது ஆரஞ்சு ஜூசை விடை குறைவானது.மறுபுறம் பிரா 91 ஸ்டிராங் “உயர் அடர்த்திக் கோதுமை பீர்”. இது கோதுமை அடிப்படையில் முதல் ஸ்டிராங் பீர் ஆகும். இந்தப் பீர் சிறந்த நறுமணமுள்ள அலி பீர் ஒரு தனித்துவமான மற்றும் அதிகச் சுவை, கசப்பு குறைவாக உள்ளது,தேன் மற்றும் கேரமல் சேர்க்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 7% ஆல்கஹால் அளவில், வெகுஜன பியர் சந்தைக்குச் சுவையில் ஒரு புரட்சியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பிரதானமான பீர் சந்தையைப் பெறும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரா 91 இந்த நிதி ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வணிகத்தை நோக்கு தங்களது விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக 160 கோடி ரூபாய் வரை முதலீடுகள் டிஜிபி கிரோத் நிறுவனத்திடம் இருந்து பெறும் முயற்சி செய்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தில் 22மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. பிரா 91 என்ற பெயரில் உள்ள 91-க்கு இந்தியாவின் ஐஸ்டி கோடு எண் ஆகும், இப்போது 15நகரங்களில் பிரா 91 கிடைக்கின்றது. இந்தக் காலாண்டில் பிரீமியம் பீர் சந்தையில் 8நகரங்களைப் பிடிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

♈🇮🇳 இந்தியா வசூல் சாதனை படைத்த பாகுபலி 2 திரைப்படத்தை சீனாவில் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

♈🇮🇳8 பேரை பலிகொண்ட சீன பள்ளி குண்டுவெடிப்பை நடத்தியது,ஊழியர்

♈🇮🇳 டெல்லியில் இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து உபேர் வாடகை காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, அந்த கார் டிரைவரான ஷிவ்குமார் யாதவால் கற்பழிக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட பெண், உபேர் வாடகை கார் நிறுவனம் மீதும், அதன் தலைமை செயல் அதிகாரி டிராவிஸ் கலனிக் மீதும் அமெரிக்காவில் கலிபோர்னியா மத்திய கோர்ட்டில் திடீரென ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கில் அவர், ‘‘துரதிர்ஷ்டவசமாக உபேர் நிர்வாகத்தினர் சட்டவிரோதமாக அந்த பாலியல் தாக்குதல் தொடர்பான மருத்துவ பதிவேடுகளை பெற்றும், பகிர்ந்தும் உள்ளனர். இது எனது அந்தரங்கத்தை மீறிய செயல். இதை சுட்டிக்காட்டியும், அவர்கள் மன்னிப்பு கேட்க தவறி விட்டனர்’’ என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில் எதிர் வழக்குதாரர்களாக உபேர் நிறுவனம், அதன் தலைமை செயல் அதிகாரி டிராவிஸ் கலனிக், முன்னாள் துணைத்தலைவர் எரிக் அலெக்சாண்டர், முன்னாள் மூத்த துணைத்தலைவர் எமில் மைக்கேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

♈🇮🇳   மலேசியாவில் வசித்து வந்தவர் தமிழ் வாலிபர் டி.நவீன் (வயது 18). ஏ.ஆர்.ரகுமான் மாதிரி இசை அமைப்பாளராக வர வேண்டும் என்று கனவு கண்டார்.இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி இவர், தனது நண்பர் பிரவிண் என்பவருடன் சென்று ஒரு பேக்கரியில் ‘பர்கர்’ (உணவுப்பொருள்) வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருக்கு அறிமுகமான 2 வாலிபர்கள் வந்தனர்,அவர்கள் நவீனையும், பிரவிணையும் கிண்டல் செய்தனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே அவர்களுடன் மேலும் 3 பேர் சேர்ந்தனர்.நவீனையும், பிரவிணையும் அவர்கள் ஹெல்மெட்டுகளால் தாக்கத் தொடங்கினர். ஆனால் பிரவிண் தப்பித்து ஓடி விட்டார். அவர்கள் நவீனை விடாமல் தாக்கி, அவருடன் தவறான உறவு கொண்டு,பின்புறத்தை தீயால் சுட்டு சித்ரவதை செய்தனர்.இதில் படுகாயம் அடைந்த நவீன், அங்கிருந்து மீட்கப்பட்டு ஜார்ஜ் டவுன் பினாங்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.நவீன் மீது தாக்குதல் தொடுத்த 5 பேரும் அவருடன் ஒரே பள்ளியில் ஏற்கனவே படித்தவர்கள் என தெரிகிறது.இந்த சம்பவம்,அங்கு வாழ்கிற தமிழ் மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவமனையில் நவீன் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் விரைவில் குணம் அடைய ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳    மாநில சட்ட ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, சொக்கலிங்கம் நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

175total visits.