விஸ்வரூபம் செய்திகள் 17/6-2

0
12

♈🇮🇳   *12.30pm-17-6-2017-saturday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கையில் இரண்டு கயிறுகளை மட்டும் ஏற்கனவே கட்டியிருந்தார். தற்போது, கயிறு எண்ணிக்கை ஐந்தாக மாறி இருக்கிறது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கயிறுகள் கையில் மின்னுகின்றன. இதற்குக் காரணம், கேரள மாந்திரிகர்கள் என கூறப்படுகிறது. முதல்வர் ஆன பின், அவரால், கேரளாவிற்கு செல்ல முடியவில்லை. ஆனாலும், மாந்திரிகர்கள் சொல்லும் காரியங்களை, தமிழகத்தில் வைத்து அவர் செய்து முடிக்கிறார். முதல்வர் ஆனதும், நல உதவி வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக சேலத்துக்கு வந்த முதல்வர், மூன்று நாட்கள் வரை தொடர்ச்சியாக சேலம் பகுதியிலேயே இருந்தார். மூன்று நாட்கள் இரவிலும் வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டிருந்த மாந்திரிகர்கள், சிறப்பு யாகம் நடத்தி, மந்திரித்த கயிறுகளை முதல்வருக்கு கொடுத்து, கட்டிக் கொள்ளச் சொன்னார்கள்.
அப்படி கொடுக்கப்பட்ட ஐந்து கயிறுகள்தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைகளில் தற்போது மின்னுகின்றன. அந்த கயிறுகளை கட்டியிருக்கும்போது,உடல் ஆரோக்கியமாக இருக்கும்; எதிரிகள் பலவீனமாவார்கள்; ஆட்சி அதிகாரம் நீடிக்கும்; சொந்த கட்சியினர் சுமூகமாக இருப்பர் என்பது போன்ற பல விஷயங்களை, முதல்வர் எடப்பாடிக்கு சொல்லித்தான், மாந்திரிகர்கள் கொடுத்துள்ளனர்.அவர்கள் விருப்பப்படி, முதல்வர் கைகளில் கயிறுகள் மின்னுகின்றன. ஆனால், சொன்னபடியெல்லாம் நடந்திருக்கிறதா என்பதை பழனிச்சாமிதான் சொல்ல வேண்டும்.

♈🇮🇳   வைகையாற்றில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். தனிநபரிடம் ரூ.100 ம், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் ரூ.1000 ம் அபராதம் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳  ஈரோடு அருகே மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சத்தியமங்கலம் சாலையிலும் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 130 பெண்கள் உட்பட243 பேர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

♈🇮🇳  சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 130 கனஅடியில் இருந்து 106 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 22.91அடியாகவும், நீர்திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாகவும் உள்ளது

♈🇮🇳  சென்னை அருகே மணலி புதுநகரில் வீட்டில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன், அப்துல்வசிம்,தேசப்பன், விஜய், புவனேஷ், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்—– vishwarubam news

♈🇮🇳  திருவண்ணாமலை : ஜவ்வாது மலையில்20வது கோடை விழாவை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.ஜவ்வாது மலையில் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்

♈🇮🇳   சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் எதிரே வந்த மூன்று பேரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசராணை  நடத்தி வருகின்றனர்

♈🇮🇳   தி.மலை மாவட்டம் பவழகுன்று மலையில் பூஜை செய்ய வந்த நித்யானந்தா சீடர்களை மக்கள் விரட்டியடித்தனர். மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீடர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர்——— vishwarubam news

♈🇮🇳   7மாணவ மாணவியர் கல்விக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

♈🇮🇳  பொதுப்பணித்துறை பணிகள்: முதல்வர் பழனிசாமி ஆய்வு

♈🇮🇳   ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI)ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது.இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருந்தது தெரியவந்தது

♈🇮🇳  பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21ந் தேதி முதல் 30ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டபடிப்பை முடித்துவிட்டு அடுத்து பிஎட் படித்து ஆசிரியராகி அனைவருக்கும் வழிகாட்டியாக வழ வேண்டும் என எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காகவே வந்து விட்டது பிஎட் அட்மிஷன் தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு மொத்தம்1,777 இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது——– vishwarubam news

♈🇮🇳   ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என அதிமுகவினர் பிரிந்து இருந்தாலும், சட்டசபையில் ஓரணியாக நின்று ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்துள்ளனர். இதன் பின்னணில் பாஜக தலைவர்கள் இருப்பதாக தெரிகிறது அரசியல் பார்வையாளர்கள்

♈🇮🇳   இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பைனலையொட்டி ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன——–vishwarubam news

♈🇮🇳   இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் பல்வேறு கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க இந்தியா,ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய கூட்டு பயிற்சியில் ஈடுப்பட உள்ளனர்

♈🇮🇳   வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வீடியோவில் ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்று யூ ட்யூபில் வேகமாக பகிரப்பட்டு 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது

♈🇮🇳   கடந்த மாதம் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் உலகின் பிற அமைப்புகளின் இணையதளங்களை முடக்கிப் போட்ட இணையத் தாக்குதலின் பின்னணியில் வட கொரியாவைச் சேர்ந்த இணைய தாக்க ஊடுருவல்காரர்கள் இருந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள்

♈🇮🇳  சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனதுகாணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.—— vishwarubam news

♈🇮🇳   ஜப்பான் கடல் பகுதியில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 7 பேர் மாயமாகினர்

♈🇮🇳   இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 30 வினாடி விளம்பரம் செய்ய ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

♈🇮🇳   நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணமடைந்துவிட்டதாக வெளியான தகவல்களை பொய் என நிரூபிக்கும் வகையில் அவர் பார்ட்டியொன்றில் பங்கேற்ற தகவல் வெளியாகியுள்ளது

♈🇮🇳   அது எங்களுக்கு முன்னமே தெரியுமே – லேட்டா சொல்லுறே -இந்தியாவுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. அதை விரைவில் சாம்பலாக்குவோம் என்று லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்——-vishwarubam news

♈🇮🇳   அதிமுகவின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலை கிடைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன.ஜூலை20க்குப் பிறகு அதிமுக விவகாரத்தில் முடிவெடுக்கிறது பாஜக. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக இரட்டை இலை கிடைத்தால் அவர் பொதுச் செயலாளராவார்..தகவல்

♈🇮🇳  கியூபா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்கா – கியூபா இடையில் பல ஆண்டுகளாகப் பனிப் போர் நீடித்து வந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, கடந்த 2014-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அதன் மூலம், கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்ப் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்—vishwarubam news

♈🇮🇳   பூமியை விட்டுவிட்டு மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக SpaceX விண்வெளி ஆய்வு நிறுவன செயல் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்

♈🇮🇳   இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என்றும், இரு நாடுகளுமே பேசித் தீர்க்க வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது

♈🇮🇳  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

♈🇮🇳  உத்திரப்பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டார் மாட்டிறைச்சி கேட்டதால்,பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூரில்

♈🇮🇳 கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

·         மேலும், பாலரிவட்டம் முதல் பத்தடிப்பள்ளம் வரை மெட்ரோ ரயில் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.-ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் மெட்ரோ ரயிலில் பயணம்— vishwarubam news

♈🇮🇳 ஜம்முவின் பிஜ்பேராவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

♈🇮🇳  குஜராத்தில் ஆஸ்தா சிறப்பு சுற்றுலா பயணிகள் சேவை துவங்கியது.குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தொடங்கி வைத்தார்.சபர்மதி ரயில் நிலையத்தில் இருந்து ஆஸ்தா சிறப்பு சுற்றுலா ரயிலை முதல்வர் கொடி அசைத்து துவங்கி வைத்தார்

♈🇮🇳  டெல்லி தேர்தல் ஆணையத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் பிரமாணப் பத்திரங்கள்

தனி அறை ஒதுக்கி பிரமாணப் பத்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது,டன் கணக்கிலான பிரமாணப் பத்திரங்களை எப்படி படிப்பது என தேர்தல் ஆணையம் குழப்பம்

♈🇮🇳 டீம் இண்டஸ் என்ற இந்திய தனியார் நிறுவனம் நிலவிற்கு ரோபோவை அனுப்புகிறது

·         கூகுள் எக்ஸ் பிரைஸ் போட்டில் கலந்து கொள்ளும் ஒரே நிறுவனம் டீம் இண்டஸ்

போட்டியில் வெற்றி பெற்றால் 2 கோடி அமெரிக்க டாலர் பரிசு

♈🇮🇳  சிறை அதிகாரிகள் சசிகலா அன்டுகோவுக்கு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர். இரண்டரை மாதங்களில், இந்த காலகட்டத்தில் சசிகலாவை 11 முறை வெளியிலிருந்து வந்த நபர்கள் சந்தித்துள்ளனர்——-vishwarubam news

♈🇮🇳  வருடந்தோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, ஒவ்வொருவரும் தங்கள் அப்பாவுக்காக பிரத்யேக பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள்.இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த குட்டி பாப்பா ஒன்று தந்தையர் தினத்துக்காக வாங்கிய கிப்ட் குறித்து விளக்கியுள்ளது. இது அப்பாவுக்கு பிடிக்குமோ இல்லையோ என்ற குழப்பத்துடன் முக பாவனைகளை வெளிப்படுத்துகிறது.இதனை குட்டி பாப்பாவின் அம்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட, தற்போது வைரலாகியுள்ளது

♈🇮🇳 முதலை பராமரிப்பாளர் ஒருவர் நுதலையின் வாயிக்குள் தனது தலையை விட்டு மக்களின் கவனத்தை ஈற்கிறார். ஆனால், எதிபாராத விதமாக அந்த முதலை அவரை தாக்கியது.இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.——- vishwarubam news

♈🇮🇳 இஸ்ரேலில் பெண் போலீஸ் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது

♈🇮🇳 உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் காதலை ஏற்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் அவரை கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது

♈🇮🇳 அயர்லாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ள லியோ வரத்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

♈🇮🇳 டார்ஜலிங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் விரட்டியடிப்பு

♈🇮🇳  மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி—— vishwarubam news

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

93total visits.