விஸ்வரூபம் செய்திகள் 17/6-3

0
7

♈🇮🇳   *5pm-17-6-2017-saturday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர் அனந்தகுமார், பினாமிகள் மூலம், 3,000 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது

♈🇮🇳   நமது அரசியல்வாதிகளை எண்ணி வெட்கப்படுவதா என்ற நிலையில் தான் இன்று தமிழகம் உள்ளது

♈🇮🇳   நம் எழுச்சி விஸ்வரூபம் போக்குவரத்து , டி டீ பி செலவைதவிர ஒரு காசு செலவில்லாமல் இந்திய அரசின் பத்திரிக்கை நடத்தும் அனுமதியை பல மாதங்கள் போராடி பெற்றது. இன்று 15 ஆயிரம் கொடுத்தால் ஒரே மாதத்தில் ஆர் என் ஐ எண் கிடைகிறது . இந்திய அரசின் செய்திதுறையால் வழங்கப்படும் ஆர் என் ஐ எண்னை பெற்றால் மட்டுமே ஒரு பத்திரிகையை நடத்த முடியும். இது பெரிய பத்திரிகை சிறு பத்திரிகை அனைத்தும் இந்த எண்ணை பெற்றுதான் பத்திரிகைகளை நடத்துகின்றனர் .பத்திரிக்கைகளுக்கு மத்திய அரசின் சுதந்திர உரிமையை வழங்கியதை அடக்கும் வகையில் மாநில அரசு நயவஞ்சக சூழ்ச்சி செய்து தனக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கே அடையாள அட்டை வழங்குகிறது. அதிலும் யாருக்கு வழங்கி உள்ளது என்று பார்த்தீர்களானால் , பல பேர் தகுதி இல்லாதவர்கள் அடையாள அட்டையை பெற்றிருப்பர் . பல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதுதான் இன்றைய நிலை.பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்படும் என்று கோவில்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்

♈🇮🇳   மொபைல் போன் திருடர்கள், ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து அவரை, 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற கொடூரம் டில்லியில் நடந்துள்ளது.புதுடெல்லி- தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த அப்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த பகுதியில் இருந்த சிலர் அந்த திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். பின்னர்  பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்
Vishwarubam

♈🇮🇳   நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக விளைச்சலை கொடுக்கும் உத்தியில் கவனம் செலுத்துவது, தரமான விதைகளை அளிப்பது,ஊட்டச்சத்துகள் நிறைந்த நிலவள ஆய்வு, கிடங்கு,குளிர்பதன கிடங்கு வசதிக்கு பெரு முதலீடு,அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை தடுப்பது மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வது போன்றவையே ஏழு முக்கிய இலக்குகள். தேசிய அளவில் விவசாய சந்தை, மின்னணு வர்த்தகத்தில் இடர்பாடுகளை நீக்குதல், புதிய காப்பீடு திட்டங்கள்,அத்துடன் துணை விவசாய நடவடிக்கைகளான பறவை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவையும் உத்தியில் பங்கு கொண்டுள்ளன.  வேம்பு கலந்த யூரியாவை வழங்கியதன் மூலம் ரூ 7,000 கோடி மானியம் மிச்சப்பட்டுள்ளது. தற்போது யூரியா பைகள் 45 கிலோ அளவுடையவையாக மாற்றப்பட்டுள்ளன. முன்பு இவை50 கிலோ எடை கொண்டவையாக இருந்தன. இந்த ஐந்துகிலோ எடைக்குறைப்பு 10 சதவீத யூரியா நுகர்வை குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 45 கிலோ வேம்பு கலந்த யூரியா 50 கிலோ யூரியாவிற்கு இணையானது எனவே வீணடிப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.இதுவரை ஏழு கோடி நிலவள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதாக ஜாவடேகர் கூறியுள்ளார்

♈🇮🇳   U சான்றிதழ் பெற்ற தெரு நாய்கள்

♈🇮🇳   மேஜிக் என்ற பெயரில் பொது இடத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபரை சீன போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.சீனா-விஸ்வவரூபம் முன்பே செய்தி வெளியிட்டது

♈🇮🇳   இந்தியா உடனான ஐ.டி. உறவுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளோம்: ஈரான் தகவல்

♈🇮🇳   அமெரிக்காவில் காதலனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தற்கொலைக்கு தூண்டிய காதலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Vishwarubam

♈🇮🇳   தமிழகத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் மீம்சில் நாருகின்றனர் –அவர்களின் செயல்பாடுகாளால் –எதிர்க்கட்சி , மற்றும் வேஸ்ட் எம் எல் ஏகளும் தான் –அவர்களின் ரவுடி கூட்டத்தை கண்டு பயப்படாத மீம்ஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் -அமைச்சர் செல்லூர் ராஜூ வெயில் காரணமாக வைகை அணையின் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் போட்டு மூடும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே பல்பு வாங்கி கைவிடப்பட்டது. அனைத்து தெர்மாக்கோல்களும் ஓரமாக ஒதுங்கியது கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது. மேலும், இந்த விவகாரத்தை வைத்து செல்லூர் ராஜூவை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில்  நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை போட்டனர்.இந்நிலையில், தமிழக சட்டசபை கடந்த 14ம் தேதி கூடியது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து பேச தொடங்கினார். அப்போது, திமுக உறுப்பினர்கள் தெர்மாக்கோல்.. தெர்மாக்கோல்.. என கத்தினர். இதையடுத்து சட்டசபையில் சிரிப்பொலி ஏற்பட்டது. அதேபோல், நேற்று திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசும் போது, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். அவருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பல்வேறு வகையில் சமாளித்து பேசினாரே தவிர, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.இதனால் ஆவேசம் அடைந்த துரைமுருகன், தனது இருக்கையில் இருந்து எழுந்து, இரண்டு காதிதங்களை எடுத்து தெர்மாக்கோல் விடுவது போல் விடுங்கள் என சைகையால் செய்து காட்டினார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் ‘தெர்மாக்கோல்’  ‘தெர்மாக்கோல்’ என சத்தம் எழுப்பினர். இதனால் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது

♈🇮🇳   நடிகரும் பத்திரிகையாளருமான தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல் ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும்,ஊக்குவித்தும் வருகிறார்

♈🇮🇳   சென்னை : என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

♈🇮🇳   வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலையில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

♈🇮🇳   தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳  நான்கு தூண்களின் நிலை இதுதான் -முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில்: அதிமுகவினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் வேஸ்டு பேப்பராக எடைக்குப் போடத் தான் பயன்படும் என்று கூறினார். முட்டாள்கள் தான் இது போன்று லாரி லாரியாக பிரணமாப் பத்திரங்கள் தாக்கல் செய்வார்கள் என்றும், இவற்றையெல்லாம் தனியாக ஒரு அதிகாரியை போட்டு படித்தாலும் பத்து ஆண்டுகள் ஆனாலும் படித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்று கூறினார். எதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் அணுகப் போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.தேர்தல் ஆணையத்திற்கே சவால் விடுக்கும் வகையில் ஸ்தம்பிக்க வைத்துள்ள கட்சிக்காரர்களின் போட்டி என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா. அல்லது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரே கழுவி ஊத்தும் நமது அரசியல்வாதிகளை எண்ணி வெட்கப்படுவதா என்ற நிலையில் தான் இன்று தமிழகம் உள்ளது

♈🇮🇳   திருமணமான 7 நாட்களில் மனைவி 8 மாத கர்ப்பம் என்றதால் வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். கர்நாடக மாநிலம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள பீமனஹள்ளி கிராமம்

♈🇮🇳   திருமணமான ஒரு மாதத்தில் 2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளையை பொலிசார் தேடி வருகிறார்கள்.தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (30), இவருக்கும் பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சண்முகராஜ் திடீரென காணாமல் போனதால் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், சண்முகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. திருமணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை சண்முகராஜூவால் கைவிட முடியவில்லை. இதனால் அப்பெண்ணுடன் ஓட்டமெடுத்த சண்முகராஜ் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சண்முகராஜ் மற்றும் அவருடைய கள்ளக்காதலியை தேடி வருகிறார்கள்

♈🇮🇳   ஜெய்ப்பூர் அருகே பெண்களை படம் பிடிப்பதை தடுத்த முதியவரை, அரசு ஊழியர்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் இருந்த பெண்கள் சிலரை, அவ்வழியாக வந்த நகராட்சி ஊழியர்கள் தங்களது செல்போன்களில் படம் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, 55 வயது முதியவரான ஜாபர்கான் அதனை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் அந்த முதியவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்

♈🇮🇳   அசாம் அருகே ஆட்டுக்குட்டியை முழுங்கி நகரமுடியாமல் கிடந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்

♈🇮🇳   மேற்கு வங்கத்தில் தீவிரமடைகிறது கூர்க்காலாந்து தனி மாநில போராட்டம். டார்ஜிலிங்கில் போலீசார் மற்றும் கூர்க்காலாந்து போராட்டக்காரர்கள் மோதல்: போலீசார் உள்பட 2 பேர் பலி-vishwarubam news

♈🇮🇳   வரும் 21-ஆம் தேதி இப்தார் நோன்பு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்- அதிமுகவின் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு தினகரனுக்கு அழைப்பு இல்லை-கட்சி பணியை தினகரன் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஆதரவாளர்கள் கூறிய நிலையில் அழைப்பு இல்லை

♈🇮🇳   பெய்ஜிங்: 10 மீட்டர் அந்தரத்தில் இரு கார்கள் சீசா விளையாட்டு விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

♈🇮🇳    திருவள்ளூர்: செங்குன்றத்தில் கிலோ கணக்கில் 3 வகையிலான போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைபற்றியுள்ளனர். மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 25 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது-vishwarubam news

♈🇮🇳   ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் “ஐ” கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் தெரு நாய்கள். இதனை அறிமுக இயக்குனர் ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார்.டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு எனவே அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனும் வள்ளலாரின் கருத்தை”தெரு நாய்கள்” திரைப்படம் மூலம் பேசப்படுகிறது என இயக்குனர் உத்ரா கூறியுள்ளார்.இது போன்ற சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை ஒவ்வொருவரும் தங்கள் திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லது எனப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் குழு பாராட்டியுள்ளது.  மேலும் இத்திரைப்படத்தைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கபட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது

♈🇮🇳   உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்த தெலுங்குதேசம் எம்.பி ஐரோப்பா சென்றார்

♈🇮🇳   இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு தகுதி

♈🇮🇳   கொசஸ்தலையில் தடுப்பணை கட்டும் இடத்தில் ஆந்திர அதிகாரிகள் ஆய்வு-vishwarubam news

♈🇮🇳  திருவனந்தபுரம் சென்ற பஸ்சில் சந்தன கட்டைகள் பறிமுதல்

♈🇮🇳  திருச்செந்தூர்: ஓட்டலில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

♈🇮🇳  வைகோ மீதான தேசதுரோக வழக்கு ஜூன்21க்கு ஒத்திவைப்பு

♈🇮🇳  வரும் 20ம் தேதி ரஷ்யா செல்கிறார் ஜெட்லி

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

270total visits.