விஸ்வரூப செய்திகள் 17/7-1

0
27

♈ 🇮🇳    7am -17-7-2017-monday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  *மிக மிக அவசரம்* பார்த்தசாரதி என்னும் தந்தையின் கிட்னி செயல்பாடு இழந்துள்ளதால் *O Negative*  இரத்தம் *2 யுனிட்*  இருந்தால்தான்  அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.மேற்கண்ட இரத்த வகை உள்ள நண்பர்கள் உதவிட வேண்டுகிறோம்.இடம் : ஸ்டான்லி மருத்துவமனை , சென்னை-*நாள் 17/7/17*-*நேரம் காலை 11:00 மணிக்குள்*தொடர்புக்கு: பழனி 9626325261-சிகரங்கள் ஸ்ரீனிவாசன்- vishwarubam

♈ 🇮  இன்று நாட்டின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல்; பார்லி.,யில் முழு ஏற்பாடு

♈ 🇮🇳  இன்று(ஜூலை 17) ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் — vishwarubam news

♈ 🇮🇳  இன்று பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம் — vishwarubam news

♈ 🇮🇳  பி.இ., – பி.டெக்., படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம் –vishwarubam news

♈ 🇮🇳  பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம் — vishwarubam news

♈ 🇮🇳  ரேஷன் பொருள் வினியோகம்: மத்திய குழு இன்று ஆய்வு –vishwarubam news

♈ 🇮🇳  ராமேஸ்வரம் கோயிலில் இன்று கொடியேற்றம் — vishwarubam news

♈ 🇮🇳  இன்றைய விலை நிலவரம்: பெட்ரோல்-ரூ.66.61; டீசல்- ரூ.57.98 –vishwarubam news

♈ 🇮🇳  கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான ஏசுராஜ் உடல் தகனம் –vishwarubam news

♈ 🇮🇳  சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் காயம்-சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென சரக்கு ரயிலின் பெட்டி மீது ஏறி மின்கம்பியை பிடித்துள்ளார். மின்சாரம் தாக்கியதால் அவர்  தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் காசிமேட்டை சேர்ந்த ஜீவா என்பது தெரிய வந்துள்ளது — vishwarubam news

♈ 🇮  குழந்தைகளை ஆபாசமாக காட்டும் பாலியல் இணையதளங்களை முடக்குவதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது– vishwarubam news

♈ 🇮  தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாகவும்; 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ஆகிய கட்டண அடிப்படையிலும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த முறைகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டு முதல் 10ஆண்டுகள் விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.இதனால், கடந்த மாதம் 24ம் தேதி, 6 மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும், தட்கல் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதில்,ஏற்கெனவே 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் விண்ணப்பித்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த முறையில் கோயம்புத்துார் மண்டலத்திற்கு 1,148இணைப்பும், ஈரோடு 1,085, மதுரை 1,112, திருச்சி 2,138, விழுப்புரம் 1,637,சென்னை (தெற்கு) 351, வேலுார் 2,066, திருநெல்வேலி 426, சென்னை (வடக்கு)37 என பத்தாயிரம் இணைப்புகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட உள்ளன.அதில், விழுப்புரம் மண்டலம், கடலுார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட231 மின் இணைப்புகளில், விருத்தாசலம் கோட்டத்திற்கு 85 இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. —vishwarubam

♈ 🇮  ஜூலை 27 ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தரவுள்ளதால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் வேர்க்கோடு வரை தனுஷ்கோடி தேசிய சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜூலை 27 ல் அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை திறக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார் —vishwarubam

♈ 🇮  ‘பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும்’ என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை,பேஸ்புக் நிர்வாகம் மறுத்து விட்டது

♈ 🇮  சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

♈🇮🇳 ஊராட்சி அலுவலகத்தில் போலி கையெழுத்திட்டு ரூ.49 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நிதி வருவாய் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் போல போலி கையெழுத்திட்டு, போலி பில் தயார் செய்து ரூ.49 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.  இதுகுறித்து சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோணி, சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சிவகங்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன்(49) நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.  மேலும் ஊராட்சி செயலாளர்கள் அங்காளஈஸ்வரி (படமாத்தூர்), கிருஷ்ணன் (குடஞ்சாடி),மருதமுத்து (முடிகண்டம்), ஞானபிரகாசம் (அரசாணிமுத்துபட்டி), ராஜா (இலுப்பகுடி) மற்றும் வங்கி அலுவலர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது — விஸ்வரூபம்

♈   திருவண்ணாமலை மாவட்டம் கொரகோட்டை பகுதியில் பிரமாண்ட பெருமாள் சிலைக்கான முகம் மற்றும் கைகள் செதுக்கப்பட்டிருப்பதை சுற்றுவட்டார மக்கள் பார்த்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த வைரம்பேட்டையை சேர்ந்த நாடக பெண் கலைஞர்கள் 17 பேர்  நேற்று மினி வேனில் சென்று, சிலையை பார்த்து விட்டு, ஊர் திரும்பினர். வைரம்பேட்டை அருகே அவனம்பட்டு பகுதியில் மதியம் 3மணியளவில்  வந்து கொண்டிருந்தபோது வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.   இதில், கோமதி(36),வெண்ணியம்மாள்(60) ஆகிய 2 பெண்கள் இறந்தனர் —vishwarubam

♈ 🇮  ஆலங்குடி: நெடுவாசலில் 96வது நாளாக  நேற்று போராட்டம் நீடித்தது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து  நேற்று 96வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.  இயற்கை  வளங்களை காப்பாற்றக்கோரி கைகளில் இலை தழைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  பெண்கள் கூறுகையில்,  `எங்கள் பகுதியின் பசுமையையும், சுத்தமான காற்றையும்,தூய்மையான குடிநீரையும் பாழ்படுத்த மத்திய,  மாநில அரசுகள் நினைக்கின்றது. எனவே பசுமையான இலை தழைகளை கைகளில் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபகிறோம்’ என்றனர். —vishwarubam

♈ 🇮  தஞ்சை மாவட்டம்  கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில்  கசிவு ஏற்பட்டதால், போராட்டம் நடத்திய 10பேரை  கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்ககோரி,கடந்த 12ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வனதுர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கதிராமங்கலம் பகுதியில் பொதுமக்கள் கண்டன  பேரணி நடத்தினர். விடுமுறை தினம் என்பதால் 6வது நாள் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர் —vishwarubam

♈ 🇮  துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பழனி (45). ராஜீவ் காந்தி சாலையில் டீக்கடை மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி வடமாநிலத்தை சேர்ந்த அப்துல் (21)என்பவர் மூலம் கடையின் முன் பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிலாப் உடைந்து விழுந்ததில்,அப்துல் மற்றும் டீ குடிக்க வந்த போரூர்,காரம்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் (34)ஆகியோர் படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அப்துல் பரிதாபமாக இறந்தார் —vishwarubam

♈ 🇮  திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் மணலி புதுநகரில் நடந்தது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் பிரியா, கல்யாணகிருஷ்ணன்,அருண்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். குழந்தையின்மை,இதயம், மகப்பேறு, பல் மற்றும் பொது மருத்துவ சிகிச்சையும், ஈசிஜி, எக்கோ, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற   பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு,  மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன —vishwarubam

♈ 🇮  ஆப்பிரிக்க ராணுவ அமைதி படை அதிகாரிகளுக்கு இந்தியா, அமெரிக்கா பயிற்சி அளிக்கின்றன. இந்தியா – அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க ராணுவ அமைதி படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ருதேந்திரா தாண்டன் கூறுகையில், “ஆப்பிரிக்க ராணுவத்தின் அமைதிப்படை அதிகாரிகளுக்கான இரண்டு வார பயிற்சி நாளை தொடங்குகிறது. இதில், கானா,மாலவி, நமீபியா, நைஜர், நைஜீரியா உட்பட34 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த அதிகாரிகள் பின்னர் அவரவர் நாடுகளில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இரண்டாவது ஆண்டாக இந்த பயிற்சி முகாமை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது” என்றார். —vishwarubam

♈ 🇮  மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு நிருபர்களை சந்தித்த அவர், ‘‘எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கோரிக்கையை ஏற்று, ராணுவ வீரர்களுக்கு மத்திய பிரதேச சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வீரர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டையை சுங்கச் சாவடிகளில் காட்டி, கட்டண விலக்கு பெறலாம்’’ என்றார் —vishwarubam

♈ 🇮  அமர்நாத் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்,ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு —vishwarubam

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

339total visits.