விஸ்வரூப செய்திகள் 19/6-1

0
9

♈🇮🇳   *8am-19-6-2017-monday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வில், ஜி.எஸ்.டி., பற்றியும், மோடி அரசின் திட்டங்கள் பற்றியும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன

♈🇮🇳   ஓடும் ரயிலில், கோவை, அ.தி.மு.க., – எம்.பி.,யிடம், 50 ஆயிரம் ரூபாயுடன் கைப்பையை திருடிச் சென்ற ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்

♈🇮🇳   பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, ‘புளூ பிரின்ட்’ வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என,மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். ஆனால், தற்போது பள்ளிகளில் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200மதிப்பெண்களுக்கான, வினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 100 மதிப்பெண்களுக்கு தயாராவதா; 200மதிப்பெண்களுக்கு தயாராவதா; வினாக்களின் வகை என்ன என, எந்த விபரமும் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

♈🇮🇳   இயக்குநர் பாரதிராஜா அடுத்த இலைக்குப் பாயசம் கேட்கிறார் என கிண்டலடித்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர். முட்டாளாக இருந்தாலும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது—vishwarubam news

♈🇮🇳   கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:தெய்வப் புலவரும், உலகின் மிகப்பெரிய தத்துவஞானியுமான திருவள்ளுவரின் சிலையை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டைய காலங்களில் புத்தகம் அச்சிடுவதும், அதற்கான காகிதங்களும் இல்லை. ஆனால், வேதங்கள், உபநிடதம், புராணங்கள் எல்லாம் நம் முன்னோர் மனதில் பதிய வைத்து பாதுகாத்துள்ளனர்.இந்த உலகத்துக்கு, இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் புனித நூல்கள் கிடைத்துள்ளது. அதில் செம்மொழியான தமிழில் இருந்து திருக்குறள் உலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள் வேதங்களுக்கு இணையானது.
இவ்வாறு அவர் பேசினார்

♈🇮🇳   சரக்கு, சேவை வரி ஜூலை 1–ந் தேதி அமலாகிறது. முதல் 2 மாதங்களுக்கு கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்

♈🇮🇳   உலக லீக் ஹாக்கி தொடர் அரைஇறுதி போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன.  இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா-கனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. இதில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது—vishwarubam news

♈🇮🇳   லண்டனில் வேனை மோதி தாக்குதல்- பலர் படுகாயம் : பயங்கரவாதிகள் கைவரிசையா?

♈🇮🇳   தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

♈🇮🇳   ராமநாதபுரம்: வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

♈🇮🇳   சென்னை பல்கலையில் கின்னஸ் சாதனைக்காக இன்று தொடர் யோகா

♈🇮🇳   டில்லியில் இன்று பா.ஜ., தலைவர்கள் கூட்டம்

♈🇮🇳   ராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி சுவாமி ஆத்மஸ்தானந்தர் காலமானார் —vishwarubam news

♈🇮🇳   இன்றைய விலை நிலவரம்: பெட்ரோல்: 67.15; டீசல்: 56.89

♈🇮🇳   ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ., வேட்பாளர் இருநாட்களில் அறிவிப்பு?

♈🇮🇳   இன்ஜி., கவுன்சிலிங் ‘ரேண்டம்’ எண் நாளை(ஜூன்,20) வெளியீடு

♈🇮🇳   பிரான்ஸ் பார்லி., தேர்தல்: மக்ரோன் கட்சி அபார வெற்றி—vishwarubam news

♈🇮🇳   சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் குணால் (34). வடபழனி நூறு அடி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் வசூலான ரூ.1 லட்சம் பணத்தை காரில் வைத்தார். பின்னர் நண்பருடன் அருகில் உள்ள கடையில் பேசிவிட்டு வீட்டிற்கு செல்ல குணால் காரை எடுக்க வந்தார். அப்போது கார் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.1 லட்சம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்

♈🇮🇳   பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 7000 சிப்பம் உருண்டை வெல்லம், 5000 சிப்பம் அச்சு வெல்லத்தை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் உருண்டை வெல்லம் சிப்பம்(30 கிலோ) ரூ.1400க்கும், அச்சு வெல்லம் ரூ.1350க்கும் ஏலம் போனது. இந்த வாரம் உருண்டை வெல்லம் ரூ.1300க்கும், அச்சு வெல்லம் ரூ.1300க்கும் ஏலம் போனது

♈🇮🇳   சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்று பாகிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு ரூ.14கோடி பரிசை தட்டிச்சென்றது—vishwarubam news

♈🇮🇳   செங்கம் அடுத்த அடிவாரம் கிராமத்தில் நடத்தப்பட்ட அம்மா திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அமர ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நடத்தப்படாமல் திட்டம் நடத்தப்பட்ட இடத்தை தூய்மை படுத்தவும் சேர் பென்ச்கள்  கொண்டு வந்து வைக்கும் பணிகளை மாணவ மாணவிகளை பயன்படுத்தப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு

♈🇮🇳   காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியை சேர்ந்த கஜேந்திரன்(வயது 35) என்பவர் வீட்டின் அருகே நடந்து செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சரமாறி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

222total visits.