விஸ்வரூப செய்திகள் 21/5-2

0
22

💐💐💐💐💐💐💐💐💐💐💐

💐 *♨அனைத்து மணல் லாரிகளுக்கும் மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை♨*

💢🏳‍🌈💢தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மணல் லாரிகளுக்கும் மணல் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில், உள்ளூர் லாரிகளுக்கு மட்டும் மணல் எடுத்து செல்ல டோக்கன் தருவதாகவும், வெளியூர் லாரிகளுக்கு டோக்கன் தர பொதுப்பணித்துறையினர் மறுப்பதாகக் கூறி, நாமக்கல்லில் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
💢🏳‍🌈💢ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, அனைத்து பகுதி மணல் லாரிகளுக்கும் மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வரும் 22ஆம் தேதி நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் லாரிகளை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

💐 *♨பாஜகவுடன் கூட்டணி என ட்விட்டரில் தவறுதலாக பதிவிடப்பட்டது என மாஃபா.பாண்டியராஜன் விளக்கம்♨*

💢🏳‍🌈💢பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ட்விட்டரில் தவறுதலாக பதிவிடப்பட்டது என முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று, ஓ.பி.எஸ். அலுவலக ட்விட்டர் பக்கத்தில் காலை 10 மணியளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் சில நிமிட இடைவெளியிலேயே அந்த பதிவு மாற்றப்பட்டது.இந்நிலையில், கூட்டணி குறித்து தவறுதலாக ட்விட்டரில் பதிவிடப்பட்டதாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்
💐 *♨சிறப்பு யாகம் காரணமாகவே கரூரில் நல்ல மழை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்♨*

💢🏳‍🌈💢ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தியதை அடுத்து கரூரில் மழை பெய்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னகுளத்துப்பாளையம், பெரியகுளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணியை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கரூர் மாவட்டம் நாதிப்பட்டி கிராமத்தில் ஸ்டாலின் குளத்தை தூர்வாரிய பிறகு மழை பெய்ததாக திமுகவினர் கூறுவதை குறிப்பிட்ட விஜயபாஸ்கர், தாங்கள் சிறப்புயாகம் நடத்தியதால் மழை பெய்திருக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.
💐 *♨ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரேபிய குடியுரிமை?♨*

💢🏳‍🌈💢புதுடில்லி: இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரேபிய அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவை சேர்ந்த் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர்நாயக், இவர் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது அவர் நடத்தி வந்த நிறுவனங்கள் மீதும் சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து ஜாகீர் மீதான நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டது. தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

💢🏳‍🌈💢இந்நிலையில் ஜாகீர் நாயக் மீது பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு அவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் சவூதி அரேபிய அரசு ஜாகீர் நாயக்கிற்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிகிறது.சர்வதேச போலீசால் ஜாகீர் நாயக் கைது ஆவதை தவிர்க்கும் வகையில் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலையிட்டு, ஜாகீர் நாயக்கிற்குஅந்நாட்டு குடியுரிமை வழங்கியதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
💐 *♨ரஜினி பா.ஜ.வில் சேர்ந்து விடுவாரோ என ஸ்டாலின் பதைபதைப்பு: தமிழிசை♨*

💢🏳‍🌈💢கிருஷ்ணகிரி: ரஜினிகாந்த், பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவாரோ என்று ஸ்டாலின் பதை பதைப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கிருஷ்ணகிரியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ” ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்க்கதக்கது.

💢🏳‍🌈💢அதே நேரத்தில் அவர் மாநில கட்சியோடு சேர்வாரா? தேசிய கட்சியோடு சேர்வாரா? என்பதை தாமும் ஆண்டவனிடமே விட்டு விடுகிறேன். பா.ஜ., விற்கு யார் வந்தாலும் வரவேற்ப்போம், அதே நேரத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்த் பா.ஜ.வில் சேர்ந்து விடுவாரோ என பதை பதைத்து வருகின்றனர்.
💐 *♨ரேஷன் புகார் போன் ‘1967’ டுபாக்கூரா♨*

💢🏳‍🌈💢மதுரை: மதுரையில் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியதாவது: ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கும், வாங்கியதாக அலைபேசியில் குறுந்தகவல் வருவது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கார்டு குறித்து 90 சதவிகிதம் பேர் ரேஷன் கடைகளில் பதிவு செய்துள்ளனர். 10 சதவிகிதம் பேர் பதியாமல் உள்ளனர். மதுரையில் 40 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் தயாராகி உள்ளது. ஏனையோருக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

💢🏳‍🌈💢ரேஷன் கடை குறைபாடுகள் எதுவாயினும், ‘1967’ என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.நுகர்வோர் பலர் தங்கள் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க, அமைச்சர் கூறிய 1967 எண்ணுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் மறு முனைக்கு செல்லவில்லை. அழைப்பு விடுத்த மறு நிமிடம் ‘எண்ட் கால்’ என வருகிறது. அமைச்சர் கொடுத்த எண்’டுபாக்கூராக’ இருக்குமோ என பாதிக்கப்பட்ட நுகர்வோர் குமுறுகின்றனர்.

*vishwarubam*

187total visits.