விஸ்வரூப செய்திகள் 21/6-2

0
19

♈🇮🇳  *11am-22-6-2017-thursday* ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳    ஆந்திரா அருகே கிருஷ்ணாபுரத்தில் தமிழக மீனவர்கள் 300 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.  மீன்பிடி தடைகாலம் முடிந்து ஜூன் 16-ல்  மீன்பிடிக்க சென்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம் மற்றும் மண்ணூரில் மீன்பிடிக்க ஆந்திர மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்—ப்ளீஸ் செக்

♈🇮🇳    வேலூர் மாவட்டம் ராஜாவூரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு திறன்களால் எல்லோரையும் ஈர்த்து வருகிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஒரே ஒரு உதவி ஆசிரியரைக் கொண்டு இயங்கும் அரசுப்பள்ளி ராஜாவூரில் உள்ளது. இந்தப் பள்ளியில், 36 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை அரவணைப்புடன் கவனித்துக் கொள்ளும் ஆசிரியர்கள், மாணவ – மாணவிகளுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் விதம் அனைவரையும் அசர வைக்கிறது. ஒரு மாணவன் அதை தலைகீழாக ஒப்பிக்கும் விதம் அனைவரையும் ஈர்க்கிறது. ராஜாவூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தக அறிவு மட்டும் அல்லாமல், பொது அறிவும் புகட்டப்படுகிறது.1,330 திருக்குறள்களையும் மனப்பாடமாக படித்து ஒப்பித்துக் காட்டி தமிழக அரசிடம் பரிசு பெற்ற வென்ற மாணவி சினேகா என்பவர் இந்தப் பள்ளியில் படிப்பவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளி மாணவ – மாணவிகள் வென்றுள்ள கேடயங்கள், பரிசுக் கோப்பைகள், நினைவுப் பரிசுகள் ஏராளம். மாணவர்களின் வெற்றி தான் தமது லட்சியம் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா. —vishwarubam news

♈🇮🇳   ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு  மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். காஷ்மீரைசேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது

♈🇮🇳 கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த கிராமத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆள் இல்லை

♈🇮🇳   வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுந்தரபள்ளி

♈🇮🇳     தருமபுரியில் அவ்வையார் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்—vishwarubam news

♈🇮🇳     திருவாடானை தாலுகாவில் வறட்சி நிவாரணம் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்காதததை கண்டித்து திருவாடானை தாலுகா அலுவகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் அறிவித்நதிருந்தனர். இந்நிலையில் அதிகாரிகள், காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி,தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்

♈🇮🇳 100-நாள் வேலைக்கான அடையாள அட்டையை கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்;மாஜி ஊராட்சி உறுப்பினர் கைது-நீலகிரி மாவட்டம்,கோத்தகிரி எஸ்.கைக்காட்டி—vishwarubam news

♈🇮🇳    குடி போதையில் இரண்டாம் வகுப்பு மாணவனை கடத்திய மீனவர் கைது-சேலம் மாவட்டம்,மேச்சேரியிலுள்ள சந்தைப்பேட்டை

♈🇮🇳   ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி.) விலக்கு அளிக்ககோரி வெண்ணந்தூர் பகுதியில் உள்ள விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு விசைத்தறிகள் ஓடவில்லை.மேலும் இன்று (வியாழக்கிழமை) கூனவேலம்பட்டி சந்தைப்பாவடியில் உண்ணாவிரதம் இருக்கவும், வேலை நிறுத்தம் செய்யவும், நாளை (வெள்ளிக்கிழமை) கலெக்டரிடம் மனு அளிக்கவும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.நாளை வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், இராசிபுரம்—vishwarubam news

♈🇮🇳    மிகவும் பாரமான இரு சக்கர சூட்கேசுகளை தூக்கிக் கொண்டு விமானத்தையோ அல்லது ரயிலையோ பிடிப்பதற்கு அவசரமாக பயணம் செய்வதென்பது -பொதுவான ஓர் அனுபவம்தான்.அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது சூட்கேசுகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு ஆட்டம் கண்டு, கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.ஆனால், அன்றாட வாழ்வில் நடக்கும் இந்த இயற்பியல் சார்ந்த புதிரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சூட்கேசின் வேகத்தை குறைப்பதைவிட, அதனை அதிகப்படுத்துவது இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.இதற்கு மாறாக, தரைக்கு சற்று நெருக்கமாக சூட்கேசின் கைப்பிடி இருக்கும் வகையில் மையமாக நகர்த்திச் செல்வதன் மூலமும் இதனை சரி செய்ய இயலும்.அதிகப்படியான வேகத்தில் சூட்கேஸ் எவ்வாறு தனது கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை சோதனை செய்ய பிரெஞ்ச் விஞ்ஞானிகள் ஒரு மாதிரி சூட்கேசை ட்ரெட்-மில்லில் வைத்து ஆய்வு நடத்தினர்.மேலும், இரு சக்கர சூட்கேஸ்களில் உள்ள சக்கரங்கள் எவ்வாறு தடுமாறுகின்றன என்பதை விளக்குவதற்கு சமன்பாடுகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.சாதரணமாக பக்கவாட்டில் சுழலும் செயல்பாடு உருவாகும் நிலையில்,அவைகளை வேகமாக இழுத்துச் சென்றால் குறைவான சுழற்சிகளே உருவாவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.வேகத்தை குறைப்பதை விட அதை அதிகப்படுத்துவதன் மூலம் சுழற்சிகளை கட்டுப்படுத்த இயலும் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.” ஆனால்,இதுபோன்ற சூட்கேஸ்களை பயன்படுத்திய அனுபவம் இல்லாதவர்களால், இந்த வழிமுறைகளை கடைபிடிக்க இயலாமலும் போகலாம். சூட்கேஸ்களை இழுக்கும் போது இது பெரிய விளைவுகளை உருவாக்காது . ஆனால், அதேசமயம் சூட்கேஸ்களை சுமந்து செல்லும் வாகனமான ட்ராலிகளை இயக்கும் போது இது தொந்தரவாக அமையும்”.HRoyal Society Proceedings A. என்ற இதழில் வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளில் முக்கியமான பொருள் இருக்கிறது.”சூட்கேஸ் உதாரணம் ஒரு வேடிக்கையான வழிமுறையாக இருந்தாலும்,இரண்டு சக்கரங்களைக் கொண்ட ட்ராலிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களுக்கும் இதே ஆய்வு முறைதான் உள்ளது” என்று ஆய்வை மேற்கொண்டவரும் பாரிஸ்-டைடெரோட் பல்கைலைக்கழத்தைச் சேர்ந்தவருமான சில்வையன் கோரச் டூ பாண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.”ஆகையால், விமானம் மற்றும் கேரவன் போன்ற வாகனங்களுக்கும் இதே நடைமுறைதான் ” என்றும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம், அன்றாட வாழ்வில் ஏற்படும் மற்றொரு இயற்பியல் சார்ந்த பிரச்சனையான சூ லேசஸ் ( shoe laces ) தளர்வதில் உள்ள புதிருக்கான தீர்வையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.பாதங்கள் தரையில் ஏற்படுத்தும் அழுத்தம் சூ லேசில் உள்ள முடிச்சுகளை தளர்த்துகின்றன என்றும், அதேசமயம் காலின் சுழற்சியினாலும் முடிச்சுகள் தளர்கின்றன என்றும் கண்டறிந்தனர்—vishwarubam news

♈🇮🇳    இரண்டாண்டு பிஏட் படிப்பிற்க்கு மாணவ சேர்க்கை விண்ண்ப்ப விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது . 2017-2018ஆண்டுக்கான கலந்தாய்வில்    அரசு,  அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுரிகள் இடம்பெற்றுள்ளன .1707பிஏட் இடங்களுக்கான சேர்க்கை ஒற்றை சாளர கலந்தாய்வு முறையில் ,சென்னை காமராஜ் சாலையில் அமைந்துள்ள விலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடத்த உள்ளது . சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் புதன்கிழமை தொடங்கியது .வரும் 30 ஆம் விண்ணப்பங்கள் விநியோகப் படுகின்றன. ஜூலை 3க்குள் விண்ணப்பங்களை விண்ணபிக்க வேண்டும் “செயலர், தமிழ்நாடு பி.எட் மாணவ சேர்க்கை 2017-2018 விலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , காமராஜ் சாலை, திருவல்லிக்கேணி சென்னை 600005 .முகவரி விண்ணப்பிக்க வேண்டும் . மேலும் விவரங்கள் ladywillingdoniase.com இணையத்தில் அறிந்து கொள்ளலாம். பிஏட் கல்வியில் இணைய இது ஒரு வாய்ப்பாகும். அரசு அரசு உதவி பெறும் கல்வியியல் நிறுவனங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன
♈🇮🇳    மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய நிலங்களை ராணுவத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தானே- படலாப்பூர் நெடுஞ்சாலையில் அவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

♈🇮🇳       சென்னை: தாம்பரம் அம்பேத்கர் சிலையிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக் கோரி கடந்த 9-ம் தேதி சேலத்தில் தொடங்கிய நடைபயணம் சென்னை நகருக்குள் வர காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்—vishwarubam news

♈🇮🇳    நாமக்கல்: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 30-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் பேட்டி அளித்துள்ளார். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை19, 20, 27-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்

♈🇮🇳   சென்னை வியாசர்பாடியில் ரவுடி வெட்டி கொலை

♈🇮🇳 விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் கார் ஒன்றில் 20 கிலோ கஞ்சா மற்றும் 150 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் —vishwarubam news

♈🇮🇳  திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதியது. இதில் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் முருகேசன் மற்றும் கிளீனர் அமாவாசை ஆகியோர் பலியாகினர். விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

♈🇮🇳    ஆப்கனில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆயுதம், வெடிபொருட்கள், பயிற்சி, நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது என ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கேள்வி எழுப்பியுள்ளார் —vishwarubam news

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

204total visits.